தொடர்புடைய கட்டுரை


ஐ.சி.இ நம்பர்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

08th Dec 2018

A   A   A

தமிழகத்தில் மனிதர்களின் எண்ணிக்கையைவிட மொபைல் போன்களின் எண்ணிக்கையே இன்று அதிகமாக இருக்கிறது. பிச்சைகாரன் கைகளிலும் மிக சமீபமாக வந்த செல் போன் தவழ்வதை நம்மால் பார்க்க முடிகிறது. 1980களில் பார்ப்பவர்களுக்கு ஒரு சொகுசு கருவியாகவும், வியப்பூட்டுகிற ஒன்றாகவும் இருந்த செல் போன்கள் இன்று சர்வசதாரணமான ஒன்றாக மாறிவிட்டது. வயதான பாட்டியும்கூட மொபைல் போனுடைய தொடுதிரை வழியாக டிவிட்டரில் தன் கருத்துக்களை வெளியிடுகிறார் என்பதை இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்

பொதுவாக நம் மொபைல் போனில் இருக்கும் போன் புக் முழுவதும் நம்பர்கள் இருக்கும்ஆனால் எதிர்பாராதவிதமாக ஏதாவது ஒரு ஆபத்து நிகழ்ந்தால்..?  மிகவும் அவசரமான நிலைமை ஏற்பட்டால், அல்லது ஏதாவது ஆபத்தில் சிக்கிகொண்டுவிட்டால் அல்லது எதிர்பாராத விதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு நம்மால் எதுவுமே செய்யமுடியாத நிலைமைக்கு நாம் ஆளாகிவிட்டால் அந்த சமயத்தில் நாம் என்ன செய்வது..? 

அந்த மாதிரி சமயங்களில் வீட்டுக்கோ அல்லது அலுவலகத்துக்கோ விவரம் தெரிவிக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்வது..? நமக்கு உதவ முன்வருபவர்களும்கூட யாருடைய நம்பரை தேர்வு செய்து தொடர்பு கொள்ளவேண்டும் என்று தெரியாமல் குழம்பி போய்விடுவார்கள்இத்தகைய ஒரு மோசமான நிலைமையை தவிர்ப்பதற்காகதான் .சி. நம்பர்களை (I.C.E number- In Case of Emergency) நாம் ஒவ்வொருவரும் நம்முடைய மொபைல் போனில் போட்டு வைத்துகொள்ள வேண்டும் என்று காவல்துறையினர் கூட கூறுகிறார்கள்மனைவியுடைய அல்லது கணவனுடைய அல்லது அப்பாவுடைய அல்லது அம்மாவுடைய அல்லது குழந்தைகளுடைய நம்பர்களை .சி. 1, . சி. 2, . சி. 3 என்று நம்முடைய மொபைல் போனில் போட்டுவைத்துகொள்ள வேண்டும்அவசர காலங்களில் இந்த நம்பர்கள் பெரிதும் துணையாக நமக்கு ஏற்படும் ஆபத்துக்களில் இருந்து நம்மை காப்பாற்றும் ஒரு வரமாக அமையும்

இவ்வாறு வேண்டியவர்களின் நம்பர்களை ஞாபகத்தில் வைத்துகொள்ள முடியவில்லை என்றால், சிறிய அளவுக்கு இருக்கும் பாக்கெட் டயரியில் நம்பர்களை எழுதிவைத்து அதை எப்போதும் நம்மோடு வைத்துகொள்ள வேண்டும்

போன் இயங்காமல் நின்றுபோய்விட்டாலோ அல்லது காணாமல் போய்விட்டாலோ அந்த சமயங்களில் யாருடைய நம்பரையும் தெரிந்துவைத்து கொள்ளாமல், எதையும் செய்யமுடியாத ஒரு கையாலாகாத நிலையில் தவிக்க வேண்டியது இல்லை.. 

இதுபோல பயணம் செல்லும்போது பண பட்டுவாடா அட்டை அல்லது . டி. எம் அட்டையோடு பணத்தையும் எடுத்து செல்லவேண்டும். சர்வர் பழுது அடைந்துவிட்டாலோ இணையதளம் நெரிசல் மிக்கதாக (network jamming) ஏற்பட்டாலோ .டி. எம் அட்டையை மட்டும் நம்பி பயன்படுத்த முடியாமல், அந்த அட்டையை பயன்படுத்தி பணம் எடுக்கமுடியாமல், செய்வதறியாமல் தவிக்கிற நிலையை நமக்கு நாமே உருவாக்கி கொள்ளகூடாது. அதற்காக இந்த முன்னெச்சரிக்கையை மேற்கொள்ள வேண்டும்

மொபைல் போனும், கணினியும் எந்த அளவுக்கு நமக்கு வசதியையும், வாய்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறாதோ அதற்கு ஈடாக அவை செயல்படாமல் போனாலோ அல்லது பழுதடைந்து விட்டாலோ அந்த கருவிகளே நமக்கு பயனற்றதாக போய்விடுவதோடு சுமையாகவும் மாறிவிடும். இதை புரிந்துகொண்டு நாம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அப்போதுதான் வாழ்வில் நாம் தேவையில்லாத ஆபத்துகளை சந்திக்காமல் இருப்போம்..

 


ஜனவரி 2017 அமுதம் இதழில் வெளியானது.

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்