பச்சை தேங்காய் (Raw Coconut)
ஜீரண உறுப்புகளை காக்கும் இயற்கை உணவு
காராமணி
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
உணவில் கலப்படம் - எண்ணெய்
இயற்கை உணவு
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
கொள்ளு
முந்திரிக்கொட்டை (Cashew nut)
நலம் தரும் எள்ளு
உடல்நலம் பேணும் பேரீச்சம்பழம்
வால்நட் (அக்ரூட்)
உலர்ந்த பழங்கள் தரும் பலன்கள்
ஏலக்காய்
ஜாதிக்காய்
உலர் பழங்கள்
மஞ்சள்
தொண்டை வலியிருந்து விடுதலை…
கசகசா
உடல்நலம் பெற்றிட…
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
இயற்கை உணவு - கறிவேப்பிலை
தானாகவே குணமாகும் நோய்கள்
உணவில் கலப்படம் - மசாலா
நலம்தரும் பழச்சாறுகள்
கலப்படம் – பழங்கள்
கீரை உணவுகள்
பஞ்சமூலக இயற்கை உணவுகள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
அல்சரிலிருந்து விடுதலை
மூலநோய்கள்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
அறுசுவை உணவுகள்
மூட்டுவலி
நெஞ்சுவலி இயற்கை தீர்வு
காய்கள் தரும் பயன்கள்
சீரகம்
உடல் சுத்தம்
20th Jul 2018
வெய்யில்காலங்களில் இப்போதெல்லாம் ஐஸ் வாட்டர் எனப்படும் செயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை அருந்துவது என்பது ஒரு நாகரீகமாகவே ஆகிவிட்டது. முன்பெல்லாம் இயற்கையான முறையில் நாம் பிறந்த மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட பானைகளை வாங்கி அதனடியில் ஆற்றுமணலை கொட்டிவைத்து அதன் மேல் பானையை வைத்து அதில் கொஞ்சம் வெட்டிவேரையும் போட்டுவடித்து அதனுள் ஊற்றிவைக்கும் ஆற்றுநீர் நம் தாகத்தை என்றும் தணிப்பதாக இருந்தது. ஆனால் இன்று ஐஸ் வாட்டர் என்ற பெயரில் நாம் அருந்தும் குளிர்ந்த நீர் முற்றிலும் நம் உடல்நலத்துக்கு உகந்தது கிடையாது என்று மருத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை குடிப்பதால் இன்று மிக அதிகமாக கேஸ்ட்இன்டெஸ்டைனல் குறைபாடுகள் எனப்படும் வயிறு குடல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றது. உணவை சாப்பிடுவதற்கு முன்பே நம்மில் பலரும் ஐஸ்வாட்டர் குடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். நல்ல கொழுப்பு நிறைந்த ஏதாவது உணவை உண்டபின் நாம் ஐஸவாட்டரை கை கழுவ பயன்படுத்துகிறோம். அதேபோல இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரையும் கை கழுவ பயன்படுத்துகிறோம் என்று வைத்துகொள்ளலாம். ஐஸ்வாட்டரை கைகளில் ஊற்றி கைகளை கழுவும்போது அது நம் கைகளை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக அசுத்தங்களை அதிகரிக்கசெய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அதேநேரம் சுடுநீரை பயன்படுத்தும்போது நம்முடைய கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்புகளும் நீக்கப்படுகின்றன.
சில இடங்களில் கை கழுவும் இடங்களில் எலுமிச்சை சாறைகூட பயன்படுத்துகிறார்கள். நாம் எப்போதும் கண்களுக்கும், நாக்குக்கும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் ருசியாகவும் இருக்கும் உணவு வகைகளுக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்கிறோம். அதனால் இன்று அதிகமாக வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் வருகின்றன.
இந்த நிலை இப்படியே நீடித்துக்கொண்டுபோனால் இன்னும் பத்து இருபது வருடங்களில் சமூகமே நோய்வாய்ப்பட்ட ஒரு கூட்டமாக மாறிவிடும். குறிப்பாக இளம் தலைமுறையினர் தாங்கள் உடுத்தும் உடைகளுக்கும், செய்துகொள்ளும் அலங்காரங்களுக்கும், பயணம் செய்யும் வாகனங்களுக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தை கஷ்டப்பட்டு கண்விழித்து சம்பாதிக்கும் காசில் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் உணவுக்கும், அருந்தும் நீருக்கும் கொடுப்பது இல்லை. இதில் வயதானவர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு. அவர்கள் மனது வைத்தால் இளம்வயதினரை கண்டிப்பாக மனமாற்றம் அடையசெய்ய முடியும்.
சாப்பிடுவதற்கு முன் சாப்பாட்டுமேசையில் வந்து அமரும்போது பரிமாறப்பட்டுள்ள உணவுவகைகளை பார்த்தவுடன் அந்த உணவுகள் எல்லாம் நாம் சாப்பிடும் நேரத்திற்கு செரிமானம் ஆகுமா, எவ்வாறு, எந்த நேரத்தில், எதையெல்லாம் நம் உடலும், உள்ளமும் நலமாக இருக்க சாப்பிடவேண்டும் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்துவிட்டு பிறகுதான் சாப்பாட்டு தட்டில் கை வைக்கவேண்டும்.
முன்பெல்லாம் உணவு எடுத்துக்கொள்வது என்பது ஒரு நாளில் மூன்று வேளையாக தான் இருந்தது. அதற்கும் முன்பு கடுமையான உடல் உழைப்பு செய்த நம் முதியவர்கள் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் நீராகாரத்தை அருந்திவிட்டு பின் நண்பகல் வாக்கில் ஒரு வேளை மட்டுமே அரிசி சோறு உணவு சாப்பிட்டுவந்தார்கள். ஆங்கிலேயர்கள் வந்ததற்கு பின்தான் நமக்கு காபியும், டீயும் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டது. சூரியன் மறைவதற்கு முன்பே அன்று இரவு உணவு முடிந்துவிடும். அதுவே ஆயுர்வேத அறிவியலின்படி சரியான உணவுமுறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சில காலத்துக்கு முன்புவரை மூன்று வேளை உணவு என்றிருந்தது தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது.
இப்போது நான்குவேளையும், ஆறுவேளையும் உணவு எடுத்துகொள்கிறார்கள். இதில் யாருக்கும் எந்தவித ஆச்சரியமும் ஏற்படுவது இல்லை. ஆயுர்வேதத்தின்படி சூரியன் உதிப்பதற்கு 97 நிமிடங்களுக்கு முன்பாக நாம் எழுந்து காலை கடன்களை முடிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று, காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பதுகூட ஒரு அசிங்கமாக கருதப்படுகிற அளவுக்கு போலி நாகரிகம் வளர்ந்து விட்டது, உடலையும், மனதையும் பாழாக்கும் கலாச்சாரம் பெருகிவருகிறது. இத்தகைய பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். பசிக்கும்போது மட்டுமே ஆகாரம் சாப்பிடவேண்டும். நேரங்காலத்தை பார்க்ககூடாது. கண்ட கண்ட நேரங்களிலும், எந்த காரணமும் இல்லாமலும் கண்டதையும் சாப்பிடும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடுவதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன.
ஒன்று பசியை போக்குவதற்காக சாப்பிடுவது. மற்றொன்று நாக்குக்கு ருசியாக இருக்கும் என்பதற்காக ஆசைப்பட்டு சாப்பிடுவது. பசியை போக்குவதற்காக சாப்பிட்டால் மூன்று தோசைகள் சாப்பிடுவோம். பசி ஆறியவுடன் உடனே நம் மனதில் ஆசை ஏற்படுகிறது. நான்காவதாக கொண்டுவரப்படும் தோசையின் ருசியையும், அதற்கு தொட்டுக்கொள்ள வைக்கப்படும் சட்னி, சாம்பாரையும், இன்னும் விதவிதமான வகை உணவு துணைப்பொருள்களையும், அவற்றின் வண்ணமயமான நிறங்களையும் பார்க்கும்போது நான்காவதாக இன்னுமொரு தோசையையும் சாப்பிட நமக்குள் ஆசை பொங்கி எழுகிறது. இதை தவிர்த்துக்கொள்ள நாம் பழகவேண்டும்.
பசி ஏற்படும்போது பசியை ஆற்றுவதற்காக மட்டுமே ஆகாரம் சாப்பிட வேண்டும். ஆசைக்காகவும், சுவைக்காகவும், பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பதற்காகவும் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இயந்திரமயமாக உணவு உண்பதை நிறுத்திகொள்ள வேண்டும். சாப்பிடும்போது சாப்பாட்டோடு ஐஸ்வாட்டரை குடிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும். லேசான வெந்நீரை குடிப்பது நாம் சாப்பிட்டது செரிப்பதற்கு உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிகநேரம் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்க்க பழகிக்கொள்ள வேண்டும்.
சாப்பிடும்போது எந்தவிதமான கோபதாபங்களோடும், சண்டை சச்சரவுகளோடும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். முழுவதுமாக சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் செலுத்தி இறைவனுக்கும், உணவை அளித்த இயற்கைக்கும், அந்த உணவுக்கு பின்னால் அதை நம் சாப்பாட்டுமேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பாடுபட்ட விவசாயிகள் முதல் எல்லோரையும் மனதில் ஒரு நிமிடம் நன்றியோடு நினைத்து, சாப்பிட தொடங்குவோம். நோய்நொடியில்லாமல் நீடோடி வாழ்வோம்..
பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...
பச்சை தேங்காய் (Raw Coconut)
ஜீரண உறுப்புகளை காக்கும் இயற்கை உணவு
காராமணி
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
உணவில் கலப்படம் - எண்ணெய்
இயற்கை உணவு
நிலக்கடலை
பிஸ்தா (Pista)
கொள்ளு
முந்திரிக்கொட்டை (Cashew nut)
நலம் தரும் எள்ளு
உடல்நலம் பேணும் பேரீச்சம்பழம்
வால்நட் (அக்ரூட்)
உலர்ந்த பழங்கள் தரும் பலன்கள்
ஏலக்காய்
ஜாதிக்காய்
உலர் பழங்கள்
மஞ்சள்
தொண்டை வலியிருந்து விடுதலை…
கசகசா
உடல்நலம் பெற்றிட…
பிரிஞ்சி இலை
பெருங்காயம்
வெந்தயம்
இயற்கை உணவு - கறிவேப்பிலை
தானாகவே குணமாகும் நோய்கள்
உணவில் கலப்படம் - மசாலா
நலம்தரும் பழச்சாறுகள்
கலப்படம் – பழங்கள்
கீரை உணவுகள்
பஞ்சமூலக இயற்கை உணவுகள்
கலப்படம் தண்ணீர்
கலப்படம் - மாமிசம்
அல்சரிலிருந்து விடுதலை
மூலநோய்கள்
உணவு பொருள்களில் இரசாயனங்களின் தாக்கம்
அறுசுவை உணவுகள்
மூட்டுவலி
நெஞ்சுவலி இயற்கை தீர்வு
காய்கள் தரும் பயன்கள்
சீரகம்
உடல் சுத்தம்
ஆயுர்வேதம் கூறும் புற்றுநோய் சிகிச்சை முறை
வாயேஜர் பயணிகள்
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
அமைதிதரும் ஒரு மருத்துவ சிகிட்சை..
புயல் பற்றிய விவரங்கள்
ஸ்மார்ட் பான்டேஜ்
4ஜி அலைவரிசை
அடையாறில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள்
சைபர் தீவிரவாதம்
ஆகாயத் தாமரை..
குந்தி தின்றால் குன்றும் கரையும்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
ஆன்ட்ராய்டு
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
ஐ.சி.இ நம்பர்
நாட்டியமாடும் இந்தியத் தவளை
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
அணை கட்டும் அதிசய உயிரினம்
அழிவின் பாதையில் கழுகுகள்
கவசம் அணிந்த விலங்கு
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
காலு நதியும், மினமாட்டா கடலும்…
மாற்று உபகரணம்
ஆயுர்வேதம் கூறும் புற்றுநோய் சிகிச்சை முறை
வாயேஜர் பயணிகள்
ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..
அமைதிதரும் ஒரு மருத்துவ சிகிட்சை..
புயல் பற்றிய விவரங்கள்
ஸ்மார்ட் பான்டேஜ்
4ஜி அலைவரிசை
அடையாறில் இருந்து சில அதிர்ச்சி தரும் செய்திகள்
சைபர் தீவிரவாதம்
ஆகாயத் தாமரை..
குந்தி தின்றால் குன்றும் கரையும்
பாரதத்தின் பெருமை சேர்க்க ஒரு பாரத வங்கி
ஆன்ட்ராய்டு
எண்ம தொழில்நுட்பத்தில் எதிர்கால இந்தியா...
ஐ.சி.இ நம்பர்
நாட்டியமாடும் இந்தியத் தவளை
ஏழு வரி ஆமை
ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்
ஆதிவாசிகள் பாதுகாக்கும் மூலிகைத் தாவரங்கள்
ஆச்சா மரம்
அணை கட்டும் அதிசய உயிரினம்
அழிவின் பாதையில் கழுகுகள்
கவசம் அணிந்த விலங்கு
கை கழுவி விட்டு சாப்பிடும் விலங்கு
பந்தயக் குதிரை
காலு நதியும், மினமாட்டா கடலும்…
மாற்று உபகரணம்
Copyright © 2018 Amudam Monthly Magazine