தொடர்புடைய கட்டுரை


சைபர் தீவிரவாதம்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

23rd Aug 2018

A   A   A

தீக்குச்சியை வைத்து விளக்கையும் ஏற்றலாம், வீட்டையும் கொளுத்தலாம். அதுபோலதான் அறிவியல் முன்னேற்றங்கள் எல்லாமும். அறிவியலையும், தொழில்நுட்ப வளர்ச்சியையும் மனிதகுல மேம்பாட்டுக்காக நாம் பயன்படுத்த வேண்டுமே தவிர அவற்றை மனிதகுல அழிவுக்காக பயன்படுத்த முயல்வது அரக்கத்தனமானது, நமக்கு நாமே செய்துகொள்கிற துரோகமாகும். ஆனால், இன்று அதிநவீனவேகத்தில் கம்ப்யூட்டர் தொழில்நுட்பமும், இணையதள வசதிகளும் வளர்ந்துவரும்போது அவற்றால் ஏராளமான குற்றங்களும் நடக்கின்றன என்பது வேதனை தருகிற ஒரு செய்தியாகும். வலைதளத்தையும், இணையதளத்தையும் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகளும், குற்றங்களும் நாளுக்குநாள் பெருகிகொண்டே வரும் இன்றைய சூழ்நிலையில் தீவிரவாதம் என்பது நமது சமுதாயத்தில் மட்டும் இல்லை. அது இந்த அதிநவீன கணினி உலகின் வழியாகவும் நடத்தப்படுகிறது. இத்தகைய தீவிரவாதத்தைதான் சைபர் தீவிரவாதம் என்று அறிஞர்கள் அழைக்கிறார்கள். 

ஒரு நாட்டினுடைய பாதுகாப்பையும், ராஜதந்திர உறவுகளையும் பாதிக்கின்ற விதத்தில் இந்த சைபர் தீவிரவாதம் சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. இது ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. சுதந்திர மென்பொருள் துறையில் (free software industry) பிரபலமான ஒரு சொல்தான் ஹாக்கிங் (hacker & hacking) என்பது. ஆனால் கம்ப்யூட்டர் பாதுகாப்பை (computer security) பொறுத்து இந்த சொல் ஒரு குற்றமாகவே கருதப்படுகிறது. ஒரு கம்ப்யூட்டர் இயக்க அமைப்பிலோ (system) அல்லது அதன் அடிப்படை தொழில்நுட்பத்திலோ விவரங்களை திருடுகிற தனிமனிதர்களைதான் இந்த ஹாக்கர் என்ற வார்த்தை குறிக்கிறது. லாபம் ஏற்படுத்துவதற்காகவோ அல்லது தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காகவோ அல்லது சவால் விடுவதற்காகவோ அல்லது சவாலை ஏற்பதற்காகவோ அல்லது வெறுமனே எந்த நோக்கமும் இல்லாமல் பொழுதுபோக்கிற்காகவோ இவர்கள் இத்தகைய குற்றங்களை செய்கிறார்கள்.

கூட்டமாக சேர்ந்துகொண்டு ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த வேலையை செய்வதும் உன்டு.  இந்த கூட்டத்துக்கென்று தனித்தனியான திருட்டு கும்பல்களும் அதாவது ஹாக்கிங் குழுக்களும் இவர்களுக்கு இடையில் இருக்கிறது. விக்கி லீக்ஸ வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இத்தகையவர்களுக்கு நிதியுதவி செய்வதில் அமெரிக்க அரசாங்கம் குறுக்கிட்டு, பேபார்ட், மாஸட்டர் கார்ட் போன்ற நிறுவனங்கள் உதவி செய்வதை தடை செய்ததால், இந்த நிறுவனங்களுக்கு எதிராக மோசமான முறையில் ஹாக்கர்கள் ஆக்கரமிப்பு நிகழ்த்தி பல நாள்கள் அவர்களுடைய வியாபாரத்தையே பாதிக்கவைத்துவிட்டனர்.

இவ்வாறு செய்தவர்கள் அனானிமஸ், சானல்4 போன்ற ஹாக்கர்களுடைய கூட்டங்கள் ஆகும். எல்லை பகுதியில் பதட்டம் ஏற்படும்போது எல்லாம்,, இந்திய அரசின் அல்லது முக்கியமான நிறுவனங்களின் வலைதளத்தை பாகிஸ்தான்காரர்கள் ஆக்கரமிப்பு நடத்துகின்றனர். இந்த பாகிஸ்தான் ஹாக்கர்கள் டி.டிஸ். வகையை சேர்ந்தவர்களே ஆவர். டி.டிஸ்.. என்பது distributed denial of service attacks என்பதன் சுருக்கம்தான். இந்த சைபர் தீவிரவாதம் என்பது மொபைல் போன்களையும், கம்ப்யூட்டர் தொழில்நுட்பட்பத்தையும் உபயோகித்து நடத்துகின்ற சோம்பி தாக்குதல்கள் அரசு வசதிகளில் வைரசுகளையும், ப்ரோக்ராம்களையும் படையெடுக்கவைத்து, தகவல்களை ஹாக்கர்கள் திருடுகிறர்கள். 

இது தவிர அரசு சேவைகளை தடை செய்கின்ற தாக்குதல்கள் டிஜிட்டல் எலக்ட்ரானிக் தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் நிகழ்த்தப்படுகிறது. வெடிகுண்டு தாக்குதல்களுக்கும்கூட இந்த கணினி தொழில்நுட்பத்தை தீவிரவாதிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நாட்டின் மக்களுக்கு எதிராகவும் சைபர் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்துகிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66f பிரிவின் கீழ் இத்தகைய ஹாக்கர் திருடர்களுக்கும், துரோகிகளுக்கும், ஏமாற்றுகாரர்களுக்கும் ஆயுள்கால சிறை தண்டனை வரை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய தீய செயல்களை தவிர்த்து, நல்லவிதத்தில் மனிதர்கள் வளர்க்கப்பட்டால் எல்லோரும் நல்லவரே.. கம்ப்யூட்டரிலும், மொபைல் போனிலும் இணையதளத்தை பயன்படுத்தும்போது நாம் எல்லோருமே எச்சரிக்கையாக இருக்கவேண்டியது இன்றைய காலகட்டத்தின் மிக அவசியமான தேவையாகும். கவனத்துடனும், எச்சரிக்கையுணர்வுடனும் கணினியை பயன்படுத்தி வாழ்வில் வளம் பெறுவோம்.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.