தொடர்புடைய கட்டுரை


மூளை செயலிழக்குமா..?

G.A. பிரிட்டோ

07th Oct 2018

A   A   A

தற்போது நாளுக்கு நாள் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நடைமுறைக்கு வந்து மனிதர்களின் வேலைகளை சுலபமாக்கிக் கொண்டே இருக்கின்றன. விஞ்ஞானிகளும் தேடி தேடி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குகின்றனர். இன்றைய அவசர உலகில் வாழ மனிதர்களும் இத்தகைய புதிய தொழில்நுட்பங்களை தேடி பயன்படுத்துகின்றனர்.

இத்தகைய புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களின் இயல்பான செயல்பாட்டினை இல்லாமல் செய்துவிடும் என்ற அதிர்ச்சி தகவலையும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அப்படி சமீபத்தில் விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட தகவலை காண்போம்.

வாகனங்களை ஓட்டுபவர்கள் தற்போது ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி செல்ல வேண்டிய இடத்திற்கு வழி கண்டுபிடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இத்தகைய கருவிகளை பயன்படுத்தும் போது மூளையின் திசையறியும் பகுதியான ஹிப்போகாம்பஸ் தன் செயல்பாட்டை நிறுத்திவிடுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த ஆய்வினை யூனிவர்சிட்டி காலேஜ் லண்டன் கல்லூரியின் நரம்பியல்துறை நிபுணர்கள் மேற்கொண்டனர். உலகின் மிகவும் சிக்கலான சாலை கட்டமைப்பினை கொண்ட லண்டன் சோஹோ பகுதியின் வரைபடத்தினை சோதனை நடத்தப்பட்டவர்களிடம் கொடுத்து வழியினை கண்டறியச்செய்தும், அதேபோல் சாட்-நா என்ற வழி காட்டும் கருவி உதவியுடன் வழி கண்டறியச் செய்தும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் மூளையின் செயல்பாடு கண்காணிக்கப் பட்டும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இத்தகைய கருவிகளை பயன்படுத்தும் லண்டன் வாசிகளால் இந்த கருவி இல்லாமல் வெளியே சென்று திரும்பும் வழியை கண்டறிய முடியவில்லை என்பது கூடுதல் செய்தி.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்