தொடர்புடைய கட்டுரை


சின்னதம்பி தும்பிக்கை தூக்கிய தன்னம்பிக்கை (பாகம் - 2)

இரா. ஜெகதீஷ்

18th Oct 2019

A   A   A

காட்டில் உள்ள விலங்குகளின் தேவையையும், மனிதனை தாண்டி பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் பூமியில் வாழ்கிறது என்ற நினைப்பையும் மனிதனுக்கு மீண்டும் தன் பிளிறல் மொழி மூலம் உணர்த்தியவன் தான் யானை சின்னதம்பி.

சின்னதம்பி யார் அவன் விதைத்த நம்பிக்கையின் கதை என்ன என்பதை பகுதி -1ல் விரிவாக பார்த்தோம் பலருக்கு எழுந்த கேள்வி ஒன்றாக தான் இருந்தது அவன் கடந்து வந்த பாதை என்ன சின்னதம்பி எப்படி யானை நாயகன் ஆனான் அவன் தன்னம்பிக்கையை மட்டுமே வைத்து அவனை நாயகன் என்று என்றுமே கருதி விடாது மனிதனின் சிறுமூளை அவன் கடந்து வந்த பாதையின் வலிகள் தான் அவன் ஆனை நாயகன் ஆன பிம்பத்தை ஆழப்படுத்தும் வாருங்கள் பார்ப்போம்.

நான் ஜெகதீஷ் ரவி யானை காதலன் இந்த பயணத்தில் உங்களுக்காக என் பேனா முனையோடு..

சின்னதம்பி கடந்து வந்த பாதை:

யானைகளின் நாயகன், கலியுக மகாராஜன், யானை சின்னதம்பி கடந்து வந்த பாதை இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து தமிழகமும் தமிழினமும் அதிகமாய் பயன்படுத்திய வார்த்தை யானை ஆம் யானை சின்னத்தம்பி.

சின்னத்தம்பி என் வாழ்க்கை பாதையை பராசக்தியின் வசனத்தோடு திரும்பி பார்த்தால் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும் பாட்டு ஒலிக்கும் கோயில்கள் இல்லை என் பாதையில் படமெடுத்தாடும் பாம்புகள் இருக்கின்றன.  தென்றலைத் தீண்டியதில்லை நான் ஆனால் தீயை தாண்டி இருக்கிறேன் கேளுங்கள் என் கதையை அவனை மீண்டும் பிடிப்பதற்கு முன்பாக என்ற பராசக்தி வசனம் தான் கண்முன் வருகிறது.

கோயம்புத்தூரில் காட்டில் பிறந்தவன் சின்னத்தம்பி அவனுக்கென்று குடும்பம் இருந்தது காடும் இருந்தது இன்று இரண்டும் இல்லை மக்கள் மட்டுமே இருக்கிறார்கள் சில நல்ல உள்ளம் கொண்டோர்.

18 வயது நிரம்பிய ஆண் யானை அவன் வயதுக்கு தகுந்த திமிர் அழகு குறும்பு அவன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு விளைநிலங்களை நாசமாக்கியது குற்றம்சாட்டியவன் ஆறறிவு மனிதன் யானைகளின் காட்டை இவன் ஆக்கிரமிக்கவில்லை யானை தான் இவன் விளைநிலத்தை நாசப் படுத்துகிறது. யானைக்கு தான் மொழி இல்லையே அதனால் மொழி உள்ளவனின் வாதம்தான் எடுபடும் வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்ற பழமொழிக்கு இணங்க அரசின் உதவியோடு தயாரானது வனத்துறை யானை சின்னத்தம்பியை பிடிக்க.

விளைநிலங்களை நாசம் செய்வதாகக் கூறி யானை சின்னதம்பியை பிடிப்பது என்று வனத்துறையால் முடிவு செய்யப்பட்டது..

ஜனவரி 22 2019: வனத்துறையின் கண்கானிப்பு வளையத்திற்குள் கொண்டுவரபட்டான் யானை சின்னதம்பி, சின்னதம்பியைப் பிடிப்பதற்கு கும்கி யானைகளான விஜய், சேரன், கலீம், முதுமலை ஆகிய நான்கு கும்கி யானைகள் கொண்டுவரப்பட்டு தயார் நிலையில் இருந்தது.

ஜனவரி 24: மதியம் ஒரு மணி அளவில் முதுமலை தண்ணீர்பந்தல் பகுதியில் முதல் மயக்க ஊசி செலுத்தப்பட்டது தப்பித்தது சின்னத்தம்பி

ஜனவரி 25: காலை 6 மணிக்கு வெற்றிகரமாக இரண்டாவது மயக்க ஊசி தடாகம் பகுதியில் செலுத்தப்பட்டது.

ஜனவரி 25: உடன் சுற்றி திரிந்த பெண் யானை மற்றும் குட்டி, 20 வனத்துறை மற்றும் கும்கி கலீம் உதவியுடன் காட்டிற்குள் விரட்டப்பட்டது.

ஜனவரி 25: மதியம் ஒரு மணி அளவில் நான்கு கும்கி யானைகள் மற்றும் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் யானை பிடிபட்டதாக அறிவிப்பு வெளியானது.

ஜேசிபி எந்திரத்தில் சிக்கி ஒரு தந்தம் உடைந்தது கும்கிகள் தாக்கியதில் உடல் முழுக்க ரத்த காயம் இந்த நிலையில்தான் பிடிபட்டது சின்னத்தம்பி யானை.

ஜனவரி 26: பிடிபட்ட சின்னதம்பியானை கழுத்தில் கண்காணிக்க ஏதுவாக ரேடியோ ஆக்டிவ் காலர் பொருத்தப்பட்டு வரகளியாறு ஆனைமலை பகுதியில் விடப்பட்டான் யானை சின்னத்தம்பி.

ஜனவரி 29: யானை சின்னத்தம்பி மீண்டும் நகருக்குள் புகுந்ததாக செய்திகள் பரவத் தொடங்கியது அன்று மாலையே அதை வனத்துறையும் உறுதிப்படுத்தியது

ஜனவரி 30-1-2019 இலிருந்து 2-2-2019 வரை யானை சின்னதம்பி உலகம் முழுக்க செய்தி ஆனால் கிட்டத்தட்ட 150 கிலோமீட்டர் கடந்து தன் இருப்பிடம் நோக்கி வந்து கொண்டிருந்தான் சின்னதம்பி.

பிப்ரவரி 3: உடுமலைப்பேட்டை ஆர் கிருஷ்ணாபுரத்தில் சர்க்கரை ஆலை ஒன்றில் தஞ்சம் அடைந்தான் சின்னத்தம்பி. உணவும் தண்ணீரும் பற்றாக்குறை இல்லாமல் கிடைத்த காரணத்தால் 10 நாட்களை அங்கேயே கழித்தது யானை சின்னத்தம்பி அதனுடைய தற்காலிக வாழ்விடமாக அதனை மாற்றிக் கொண்டது யானை சின்னதம்பி. 

பிப்ரவரி 4: சின்னத்தம்பி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டு நீதிமன்ற நீதிபதிகள் முன்பு வழக்கு வந்தது.

பிப்ரவரி 4: வழக்கு தொடர்ந்தவர் சார்பில் மீண்டும் யானை சின்னதம்பி காட்டில் பத்திரமாக விட வேண்டுமென்றும் அதற்கு முன்னர் வனத்துறை அமைச்சர் சின்னத்தம்பி கும்கி அகப்படுவான் என்ற கருத்தைச் சுட்டிக்காட்டி அதை அரசு கைவிட வேண்டும் என்றும் வாதம் வைக்கப்பட்டது அரசு தரப்பில் மக்கள் எழுச்சி சின்னதம்பியானையின் மீதான மக்களின் அக்கறையைக் கருத்தில் கொண்டு கும்கியாக மாற்றும் எண்ணமில்லை என தமிழக அரசு பதில் மனு அளித்தது. 

வழக்கு 11-2-2019 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 11: வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது அரசு சார்பில் யானையை பிடித்து முகாமில் அடைப்பது நலம் என வாதம் வைக்கப்பட்டது வழக்கு தொடுத்தவர் சார்பில் முன்னர் நடந்த யானை கொலையான மதுக்கரை மகாராஜின் இறப்பு பற்றி விவாதிக்கப்பட்டது இறுதியில் வழக்கு 12-2-2019 மாலை 2.15 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது மீண்டும் வழக்கு விசாரணை 13-2-2019 தள்ளி வைக்கப்பட்டது.

பிப்ரவரி 13: சின்னதம்பி யானையை வனத்துறை பிடிக்கலாம் என நீதிபதிகள் உத்தரவு, காயப்படுத்தாமல் பிடிக்குமாறு வனத்துறைக்கு அறிவுரை வழங்கியது நீதிமன்றம்.

பிப்ரவரி 14: பிடிப்பதற்கான தயார்நிலையில் யானை சின்னத்தம்பி.

அன்று மாலையே நீதித்துறையின் உத்தரவின்படி அரசின் ஆசையோடு மக்களின் எதிர்ப்புடன் வனத்துறையால் பிடிக்கப்பட்டான் சின்னதம்பி, 2019 ஜனவரியில் விடிந்த பொழுது இந்தக் கட்டுரை இப்பொழுது நான் எழுதும்போது செப்டம்பர் கடந்துவிட்டது.

தொடர்புடைய கட்டுரை



Error
Whoops, looks like something went wrong.