அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


எங்கள் பத்திரிகை மற்றும் கட்டுரைகள் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளில் பெரும்பகுதியை ஒரு வசதியான இடத்திலேயே முயற்சி செய்வதற்கும், அதில் ஈடுபடுவதற்கும் நாங்கள் விடாமுயற்சியுடன் பணியாற்றியுள்ளோம்.


1.கேள்வி: அமுதம்.காம் துவங்கப்பட்டதன் நோக்கம் என்ன?

பதில்: உலகளாவிய வாசகர்களிடம் படைப்பாளர்களின் படைப்புகளை கொண்டு சேர்க்கும் நோக்குடன் அமுதம்.காம் இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது.


2.கேள்வி: அமுதம்.காமில் எத்தகைய படைப்பாளர்கள் எழுத முடியும்?

பதில்: அமுதம் இணைய இதழில் புதிய எழுத்தாளர்கள் முதல் பிரபல எழுத்தாளர்கள் வரை எழுதலாம். இந்தியாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்தும் படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அனுப்பலாம். படைப்பாளர்கள் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு படைப்புகளை அனுப்பலாம்.


3.கேள்வி: அமுதம்.காமில் பிற இணையதளங்களின் இணைப்புகள் கொடுக்கப்படுமா?

பதில்: ஆம். மக்களுக்கு பயன்படும் இணையமுகவரிகள் அந்த இணையதளம் பற்றிய குறிப்புகளுடன் அதற்கான தனி பகுதியில் நிச்சயமாக கொடுக்கப்படும்.


4.கேள்வி: அமுதம் இணைய இதழிற்கு எத்தகைய கட்டுரைகள், செய்திகள் எழுதலாம்?

பதில்: சமயம், சாதியம், பாலுணர்வு ஆகிய உணர்வுகளை தூண்டுவது போன்ற படைப்புகள் ஏற்றுக்கொள்ளப் படாது. மேலும் தனி நபர்கள் தொடர்பான தனிப்பட்ட விமர்சனங்களும், தகவல்களும் தவிர்க்கப்படும். பிற ஊடங்களில் வெளியாகி இருக்கும் தகவல்கள், கட்டுரைகளை தவிர்க்கவும்.


5.கேள்வி: திரைப்படங்கள் மற்றும் திரைப்படச் செய்திகள் இடம்பெறுமா?

பதில்: சாதாரணமாக திரைப்படங்கள், நடிகர் நடிகையர்கள் பற்றிய தகவல்கள் தவிர்க்கப்படும். பயனுள்ள திரைப்படங்கள் மற்றும் திரைப்பட தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் மற்றும் திரைப்படத் துறை சார்ந்த சாதனையாளர்கள் பற்றிய தகவல்கள் நிச்சயம் இடம்பெறும்.


6.கேள்வி: அமுதம் டாட் காம் இணையதளம் பிற மொழிகளில் வெளிவருமா?

பதில்: ஆம். ஆரம்பத்தில் தமிழில் துவங்கப்படும் இணையதளம் விரைவில் ஆங்கிலத்திலும் வேளிவரும். ஆங்கில படைப்பாளர்களும் தங்கள் படைப்புகளை அனுப்பலாம்.



Error
Whoops, looks like something went wrong.