தொடர்புடைய கட்டுரை


ஆன்ட்ராய்டு

சிதம்பரம் ரவிச்சந்திரன்

16th Oct 2018

A   A   A

இந்த காலத்தில் நம் ஒவ்வொருவரிடமும் எது இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஆளுக்கொரு செல்போனாவது கட்டாயம் இருக்கிறது. உண்ணும் சோற்றுக்கும், தாகம் தீர்க்கும் நீருக்கும், உயிர்வாழ அவசியமான சுத்தமான காற்றுக்கும்கூட முக்கியதுவம் தராத இன்றைய மனிதர்கள் தங்களிடம் கண்டிப்பாக நவீனவசதிகள் உடைய செல்போன்கள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அந்த வகையில் செல்போன்களில் மிகவும் பிரபலமாக இருப்பது ஆன்ட்ராய்டு (Android) வசதி உடைய செல்போன்கள் ஆகும்.

ஆன்ட்ராய்டு, அதிவேகத்தில் செயல்படும் ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் (operating system) ஆகும். வின்டோசை (windows) பயன்படுத்தி இதை நம்மால் எளிதாக இயக்கமுடியும். தினம்தோறும் புதிய புதிய அதிசயங்கள் இதன் வழியாக நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு நாளும் இந்த ஆன்ட்ராய்டு மென்பொருளை பயன்படுத்தி செயல்படகூடிய 15 லட்சம் மொபைல்களும், டேப்லெட்டுகள் (tablets) எனப்படும் பலகை கணினிகளும் உலகெங்கும் விற்று தீர்க்கின்றன.  ஸ்மார்ட் போன் எனப்படும் நவீன வசதியை உடைய செல் போன்களில் 75% இந்த வசதியை பயன்படுத்துகிற போன்களே ஆகும். 

லினக்ஸ் என்ற சுதந்திரமாக இயங்கக்கூடிய மென்பொருளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் முதலில் டச் ஸ்கீரீன் மொபைல்கள் எனப்படும் தொடுதிரை போன்களுக்கும், பலகை கணினிகளுக்கும் தான் தயாரிக்கப்பட்டது. இப்போது டெலிவிஷன்களிலும், நோட் புக்குகளிலும், காமராக்களிலும்கூட ஆன்ட்ராய்டு பயன்படு மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது.  கூகுளுடைய தலைமையின் கீழ் செயல்படும் (Open handset alliance) என்கிற கூட்டமைப்புதான் இதனை மூலமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. 

உலகம் முழுவதிலும் இருக்கும் 86 மென்பொருள் தொலைதொடர்பு ஹான்ட் செட் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் அவர்கள் வழியாக சேவைகள் நடத்துபவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இயக்கும் ஒரு அதிநவீன வசதியாகும் இது. கூகுள் தவிர சாம்சன், ஹெச்.டி.பி, மோட்டாரோலா, சோனி, லெனோவா, எல்.ஜி, நிக்கான், பானாசோனிக், பிலிப்ஸ், சானியோ, ஷார்ப், ஹிவாவே, ஏஃபர், டெல், டோஷிபா, எரிக்சன், பான்டெக்ஸ், எகாட்ன், மைக்ரோமாக்ஸ், ஓடா போன், ஓட்டோ போன்ற ஆன்ட்ராய்டு வசதியை கொண்டு தாயாரிக்கும் நிறுவனங்கள் உலகில் 169 நாடுகளில் பரந்துள்ளது. 

மிகவும் நவீனமான வசதிகள் உள்ள ஸ்மார்ட் போன்களும், பலகை கணினிகளும் சாமான்ய மானவர்களுக்கும் கூட மிக சிறிய முதலீட்டில் எளிதாக கிடைக்கக்கூடியது என்பதுதான் ஆன்ட்ராய்டு உலகளவில் பரவலாக பிரபலமானதற்கு அடிப்படையான காரணம். 

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது..

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.