எங்களை பற்றி

     அமுதம்.காம் இணையதளமானது, தமிழகத்தின் தென்முனையான கன்னியாகுமரியிலிருந்து வெளிவருகிறது. இது அமுதம் மாத இதழின் அடுத்த பரிணாமமாகும். அமுதம் இதழானது 2004 ஜனவரி துவங்கி தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அமுதம் இதழானது அறிவை வளர்க்கும் புதுமை இதழாக தொடர்ந்து வெளிவருகிறது. அரசியல், சினிமா, சமயம் மற்றும் ஜாதியம் சார்ந்த தகவல்களை தவிர்த்து அறிவியல், வரலாறு, மருத்துவம், தன்னம்பிக்கை ஊட்டும் கட்டுரைகள் ஆகியவற்றை தாங்கி வெளிவருகிறது.

     அந்த நோக்கம் சிறிதளவும் பிசகாமல் அமுதம்.காம் தொடர்ந்து அதே பணியை செய்யும் நோக்குடன் வெளிவருகிறது. இந்த இணையதளத்தில் இதுவரை வெளிவந்த அமுதம் இதழ்களில் வெளியான அனைத்து கட்டுரைகளும் பதிவேற்றப்படும் (பட்டுள்ளது).

     அமுதம் இதழ் புதிய எழுத்தாளர்கள் உருவாவதற்கு தளமாக பயன்பட்டு வந்தது. அதுபோல் அமுதம் இணைய இதழும் புதிய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிக்கொணரும் தளமாக விளங்கும். மேலும் எழுத்தாளர்களின் படைப்புகள் இதன் மூலம் உலகளாவிய வாசகர்களை சென்றடையும் என நம்புகிறேன். அமுதம் இணையதளம் உலக தமிழர்கள் சங்கமிக்கும் சிறந்த தளமாக விரைவில் வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கையுடன் அமுதம் தன் பணியை தொடர்கிறது.

     அமுதம்.காமில் அறிவியல், வரலாறு, உடல்நலம், விவசாயம், கலை மற்றும் கலாச்சாரம், சாதனையாளர், நேர்காணல், நகைச்சுவை, நூல் அறிமுகம், சமையலறை, செய்திகள், நிகழ்ச்சிகள் தொடர்பான புகைப்பட செய்திகள் போன்ற தலைப்புகளில் படைப்புகள் வெளிவரும். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் படைப்புகளை இடம்பெற செய்யலாம்.

     தங்கள் படைப்புகளை நூல்களாக வெளியிட்டிருக்கும் எழுத்தாளர்களும், வெளியீட்டாளர்களும் பயன்பெறும் பொருட்டு நூல் அறிமுகம் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. இதில் நூல் பற்றிய தெளிவான குறிப்புடன், நூல் கிடைக்குமிடம் ஆகியவற்றை வெளியிடுவதன் மூலம் வாசகர்கள் படைப்பாளிகள் அல்லது வெளியீட்டாளர்களை நேரிடையாக தொடர்பு கொண்டு நூல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நம்புகிறேன்.

     சமையலறையில் தங்கள் திறமையை காட்டிவரும் பெண்களும் தங்களது படைப்புகளை வெளிக்கொணரும் வகையில் ‘சமையலறை’ என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. விரைவில் வீடியோ பதிவுகள் கொண்ட தொகுப்பும் இடம்பெறும்.