தொடர்புடைய கட்டுரை


சூரியனிலிருந்து பிரிந்த பதினோரு கோள்கள்

A. சேவியர் ராஜா

02nd Apr 2019

A   A   A

பூமியில் இருந்து சுமார் 12,000 கோடி கிமீ தூரத்தில் உள்ள குட்டையான நீள்வட்ட சஜிடாரஸ் அண்டத்தின் மையத்திலுள்ள அணு பகுதியிலிருந்து சூரியன் அனுபிளவில் பிரிந்துள்ளது என்பதையும். அதிலிருந்து பூமியும் மற்ற கோள்களும் பிரிந்துள்ளன என்பதையும் பற்றிய என்னுடைய கண்டுபிடிப்பை முன்பே வெளியிட்டுள்ளேன். தற்போது சூரியனிலிருந்து பிரிந்த கோள்கள் மொத்தம் 11 எனவும், இரண்டு கோள்கள் சிதைந்து கோள உருவத்தில் இல்லாதிருப்பதையும் காண முடிகிறது. இதை நிரூபிக்கும் ஆதாரங்களும் கிடைத்துள்ளன. அவற்றை பார்ப்போம்.

சூரியனில் இருந்து முதலில் பிரிந்த புளூட்டோ நொடிக்கு 4.72 கி.மீட்டரிலும், கடைசியாக பிரிந்த புதன் நொடிக்கு 47.89 கி.மீட்டர் வேகத்திலும் சூரியனை சுற்றி வருகிறன்றன. முதலில் பிரிந்த கோளின் வேகம் குறைவாகவும் கடைசியாக பிரிந்த கோளின் வேகம் அதிகமாகவும் உள்ளது. பூமியின் வேகம் நொடிக்கு 29.78 கி.மீட்டர். பூமி சூரியனில் இருந்து பிரிவதற்கு முன்பு பிரிந்த கோள்களின் வேகம் படிப்படியாக குறைவாகவும் பூமி பிரிந்த பின்பு பிரிந்த கோள்களின் வேகம் படிப்படியாக அதிகமாகவும் உள்ளது. இதிலிருந்து சூரியன் அடுக்குகளோடு சேர்ந்திருந்த நிலையில் அதன் மீதிருந்த அடுக்குகளின் எடையின் காரணமாக பிரிந்த கோளின் வேகம் முதலில் குறைவாகவும் ஒவ்வொன்றாக பிரிந்து எடை குறைந்த பின் படிப்படியாக வேகம் அதிகமாகவும் உயர்ந்துள்ளது என்பது உண்மை.

புளுட்டோ, நெப்டியூன், யுரேனஸ், சனி, வியாழன் ஆகிய கோள்களின் வேக விகிதம் ஒரே மாதிரியாக உள்ளது வியாழனுக்கு பிறகு பிரிந்த செவ்வாயின் வேகம் மிக அதிகமாகவும் இரண்டு கோள்களுக்கு இடையில் உள்ள இடைவெளி அதிகமாகவும் உள்ளது. செவ்வாய் சூரியனில் இருந்து பிரிந்த பிறகு பிரிந்த பூமி, வெள்ளி ஆகிய கோள்களின் வேக விகிதம் ஒரே மாதிரியாக உள்ளது. இந்த இரண்டு கோள்களின் வேக விகிதம் முதலில் பிரிந்த 5 கோள்களின் வேக விகிததை போல சாதாரணமாக உள்ளது யுரேனஸ் ஐ விடவும் சனியின் வேகம் நொடிக்கு 2.88 கி.மீட்டர் அதிகம், சனியை விடவும் வியாழனின் வேகம் நொடிக்கு 3.38 கி.மீட்டர் அதிகம், வியாழனை விடவும் செவ்வாயின் வேகம் நொடிக்கு 11.06  கி.மீட்டர்  அதிகம், செவ்வாயை விடவும்  பூமியின் வேகம் நொடிக்கு 5.65  கி.மீட்டர்  அதிகம், பூமியை விடவும் வெள்ளியின் வேகம் நொடிக்கு 5.24 கி.மீட்டர் அதிகம், வியாழனுக்கு பின்பு செவ்வாயின் வேகம் வேறு கோள்களின் சராசரி வேகத்தை விடவும் அதிகமாக அதிகரித்து உள்ளது செவ்வாய்க்கு பிறகு உள்ள கோள்களில் வேக விகிதம் சராசரியாக உள்ளது.

வியாழனுக்கு பிறகு இரண்டு கோள்களுக்கு அடுத்து முன்றாவது கோளிற்கான வேகம் செவ்வாயில் உள்ளது. ஆனால் வியாழன் - செவ்வாய் இரண்டுக்கும் இடைபட்ட பகுதியில் வேறுகோள்கள் இல்லை வியாழன், செவ்வாய் இடைபட்ட இடைவெளியில் இரண்டு கோள்கள்கள் சூரியனில் இருந்து பிரிந்து பின்பு சிதைந்துள்ளதை பார்க்க முடிகிறது. அவற்றில் ஒன்று பால்வெளி (Sagitta, Scorpius, Serpens cauda, Scutum இவைகள் சேர்ந்த அமைப்பு). இது ஓரு கோள் ஆகும். இது வியாழனுக்கும் செவ்வாய்க்கும் இடைபட்ட பகுதியில் சூரியனில் இருந்து பிரிந்தாலும் வியாழன், சனிக்கு இடைபட்ட தெற்கு பகுதியில் சிதைந்துள்ளதை பார்க்கலாம் மற்றொன்று சூரியனின் வட்டபாதையில் சரியான கோள வடிவம் பெறாமல் சூரியனை சுற்றியுள்ளது. பிறகு சூரியனின வட்டபாதையில் சிறிது சிறிதாக சிதைந்து முற்றிலுமாக சிதைந்துள்ளது. இவற்றையே நாம் நட்சத்திரங்கள் (Asteroid Belt) ஆக பார்க்கின்றோம். நட்சத்திரங்கள் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடைப்பட்ட பகுதியில் முதலில் பிரிந்து சிதைந்த கோள் பால்வெளி. சனி, வியாழனுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ளது என்பதை பல செயற்கை கோள்களின் படங்கள் உறுதிபடுத்தியுள்ளன. மற்ற கோள்களின் மத்தியில் எரிகுளம்பு இருப்பது போல பால்வெளியின் மத்தியிலும் எரிகுளம்பு உள்ளது சில நட்சத்திரங்களும் எரிகுளம்பு நிலையில் இன்றும் உள்ளன இரண்டு கோள்களும் இரண்டு இடத்தில் சிதைந்திருந்தாலும் பூமியில் இருந்து ஒன்றாக பார்க்க முடிகிறது.

சூரியன் பூமியைவிட 109 மடங்கு பெரியது. இது Galaxy Solar ஐ கடக்கும்போது சூரியனுக்குமேல் 3000 கி.மீ உயரத்திற்கு அடுக்குகள் சேர்ந்துள்ளன. அப்போது மீண்டும் சூரியன் பெரிதாகியது. Galaxy’s wing Solar System-த்தை கடக்கும்போது அதில் உள்ள தண்ணீரும், சூரியனின் கீழ் பகுதியாக அமைந்த பூமியின் மேல் சேர்ந்திருப்பதால் பூமியில் அதிக அளவு தண்ணீர் உள்ளது. சூரியனோடு பூமி இருந்தபோது பூமிக்குமேல் பாகமாக இருந்து பூமி பிரிவதற்கு முன்பு பிரிந்த செவ்வாயில் தண்ணீர் அதிக அளவு ஓடியதற்கான தடயங்கள் உள்ளன.

பூமி கோள உருவமாக இணைந்த பகுதிகள் பசுபிக் கடலின் வடக்கு, மேற்கு, தெற்கு, தென்கிழக்கு பகுதி மேலும், வடஅமெரிக்கா, தென்அமெரிக்காவின் இடைப்பட்டபகுதி, இந்தொ ஆஸ்திரேலிய தட்டின் வடகிழக்கு பகுதி ஆகிய இடங்களில் சுமார் 15,000 கி.மீ தூரத்திற்கு மேலாக பார்க்க முடிகிறது. இந்த இடங்களில் 3 முதல் 4 கி.மீ அளவிற்கு ஆறு போல தண்ணீரின் ஆழம் உள்ளது. இது ஒரு நீண்ட பள்ளம் போல அமைந்துள்ளது. பூமி கோள உருவமாக இணைந்தபோது பூமியின் மேலே உள்ள அடுக்குகளில் நெரிசல் ஏற்பட்டு சில இடங்களில் மலைகள் தோன்றியுள்ளன. பூமி கோள வடிவத்தையடைய சுழன்ற வேகத்தில் அதில் உள்ள தண்ணீரானது தாழ்ந்த பகுதியை நோக்கி ஓடியுள்ளது. அப்பொழுது உருகிய பாறை மீது சில உயிரினங்களோடு சேர்ந்த நிலையில் தண்ணீர் பட்டுள்ளதால் சில பாறைகளில் கடல் வாழ் உயிரினங்களின் எலும்புகள் சேர்ந்திருப்பதை பார்க்க முடிகிறது. இதில் இருந்து கடல் வாழ் உயிரினங்களும் மற்ற உயிரினங்களும் அண்டத்தில் உள்ள ஓர்ட் மேக திறளில் உள்ளன என்பது உண்மையாகிறது. பூமியின் உட்பகுதியில் திரவ நிலையில் உருகிய பாறை உள்ளதால். ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியின் குளிர்ந்த மேல் பகுதி, புவி சுழற்சியின் சமநிலையை (Weight Balance) சரியாக அமைத்து கொள்ள பூமியின் மேலுள்ள அடுக்குகள் பல கண்டங்களாக பிரிந்துள்ளன.

அனைத்து கோள்களும் சூரியனின் வட்டபாதையில் பூமியை விட உயர்ந்த மட்டத்தில் சூரியனை சுற்றிவருகிறன்றன. இதிலிருந்து சூரியனின் கீழ் பகுதியாக பூமி இருந்து பிரிந்துள்ளது என்பதும் உண்மை ஆகிறது. பூமி சூரியனில் இருந்து பிரிவதற்கு முன்பு பிரிந்த செவ்வாய் 1.85 டிகிரி உயரத்திலும் பூமி சூரியனில் இருந்து பிரிந்த பிறகு வெள்ளி 3.39 டிகிரி உயரத்திலும், புதன் 7 டிகிரி உயரத்திலும் பிரிந்துள்ளன. அனைத்து கோள்களும் 1.3 முதல் 17.2 கோணங்களுக்குள் பூமியை விட உயர்ந்த மட்டத்தில சூரியனில் இருந்து பிரிந்துள்ளன. ஒரே கோணத்தில் இரண்டு கோள்கள் இல்லை இதில் இருந்து சூரியனில் இருந்து வேறு வேறு இடத்தில் இருந்து ஒவ்வொரு கோள்களும் பிரிந்துள்ளன என்பதை பார்க்க முடிகிறது.

பூமி கோள உருவமாக இணைந்த பகுதிகளை பசுபிக் கடலில் பார்க்க முடிகிறது. பசுபிக் கடலின் மத்திய பகுதியாகிய அலாஸ்கா வளைகுடா முதல் அமுண்ட்சென் சமவெளி வரை உலக வரைபடத்தில் 121 டிகிரி முதல் 150 க்கு உட்பட்ட பகுதியாகும். பூமியில் இந்த பகுதியின் எதிர் பகுதியில் உள்ள பாரண்ட்ஸ் கடல் முதல் எண்டர்பை சமவெளி வரையிலான பகுதி உலக வரைபடத்தில் 31 டிகிரி முதல் 60 டிகிரிக்கு உட்பட்ட பகுதியாகும். இந்த 31 முதல் 60 டிகிரிக்கு உட்பட்ட நாடுகளில் எண்ணெய் மற்றும் கனிம வளங்கள் அதிகமாக உள்ளதை பார்க்க முடிகிறது. தெற்கு ஐரோப்பிய ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் இந்த 31 முதல் 60 டிகிரி பகுதியில் உள்ளன. இதில் இருந்து இணைப்பின் மறுபகுதி சூரியனின் கீழ் முனைப் பகுதியாக பூமியில் தெற்கு ஐரொப்பிய ரஷ்யா, மத்திய கிழக்கு நாடுகள் இருந்து பிரிந்துள்ளன என்பது உண்மையாகிறது.

விரிவான விவரங்கள் அறிந்துகொள்ள மற்றும் தொடர்புகொள்ள www.xavierraja.com/telescope.php பார்க்கவும், கண்டுபிடிப்புகளை அரசு செயல்முறைபடுத்த www.xavierraja.com ல் தங்கள் வாக்குகளை பதிவு செய்யவும்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.