தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை; - 48

F. பிரைட் ஜானி

06th Jul 2019

A   A   A

மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக தயாரிக்கப்படுகின்றன மற்றும் இந்தியாவிலும் இதற்காக பலவிதமான அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாரிக்க பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. காட்சி விளைவுகள் மற்றும் அனிமேஷன் துறையானது உலக அளவில் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்று வருகிறது. ஹாலிவுட்டில் மிக அதிக செலவு எடுத்துக்கொண்ட திரைப்படங்களில் அவென்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான், ஹாரி போட்டார் ஆண்ட் தி ஹஃப் பிளட் பிரின்ஸ், பேட்மேன் வெஸ் சூப்பர்மேன் டான் ஆப் ஜஸ்டிஸ், தி ஹோபிட் பேட்டில் ஆப் தி பைவ் ஆர்மிஸ், தி டார்க் நைட் ரைசஸ் மற்றும் பல திரைப்படங்கள் இவற்றில் அடங்கும்.

இவற்றில் குறிப்பிடப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படங்களை தயாரிக்க 250 மில்லியன் டாலர் தேவைப்பட்டது. இத்திரைப்படங்கள் பலவிதமான சர்வதேச இடங்களில் பறக்கும் கேமரா உதவியுடன் படமாக்கப்பட்டது. இத்திரைப்படங்களில் கணினியின் உதவியுடன் உருவாக்கப்பட்ட CGI காட்சிகளும் மிக அதிகமாக காணப்படுகின்றன. இந்த திரைப்படங்களுக்காக 2,80,000 பறக்கும் கேமராக்கள் ஒவ்வொன்றும் 1000 டாலர் மதிப்பில் வாங்கப்பட்டு திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது. ஸ்பைடர் மேன் 3 2007-ஆம் ஆண்டு சாம் ரெய்மி என்பவரின் இயக்கத்தில் 258 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரித்து படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்காக 7,325,000 பன்கீ கயிறுகள் வாங்கப்பட்டன. இதன் ஒவ்வொன்றின் மதிப்பு 40 டாலர் ஆகும்.

டாங்கில்ட் 2010-ஆம் ஆண்டு நாதன் கிரினோ, பைரோன் ஹோவர்ட் இயக்கத்தில் 260 மில்லியன் டாலர் மதிப்பில் இத்திரைப்படத்திற்காக செலவு செய்யப்பட்டது. இத்திரைப்படத்திற்காக சிறந்த அனிமேஷன் காட்சிகளைத் தயாரிக்க மிக அதிக காலம் தேவைப்பட்டது. பலவிதமான சிறப்பாக உருவாக்கப்ப்ட்ட 2,810,000,000 க்ரேயான்ஸ் ஒவ்வொன்றும் 0.10 டாலர் மதிப்பில் வாங்கி இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. ஜாண் கார்டர் 2012-ஆம் ஆண்டு ஆன்ட்ரூ ஸ்டான்டன் இயக்கத்தில் 263 மில்லியன் டாலர் இயக்கத்தில் தயாரிக்கப்பட்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்காக 16,941,176 லெதர் லோய்ன்குளோத்ஸ் ஒவ்வொன்றும் 17 டாலர் மதிப்பில் வாங்கப்பட்டது.

வெஸ்ட்வேல்ட் திரைப்படமானது 1995-ஆம் ஆண்டு கெவின் ரெய்னால்ட்ஸ் இயக்கத்தில் 271 மில்லியன் டாலர் செலவில் தயாரித்து திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்காக மிகப்பெரிய 400 அடி விட்டம் அளவில் ஒரு ஓட்டலில் படமாக்கப்பட்டது. ஹவாய் கடற்கரைப் பகுதியில் திரைப்படத்திற்காக கண்கவர் 1,000 டன் மிதக்கும் தொகுப்பு அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்காக 2,084,615 நான்குபேர் அமரும் காற்றடைக்கப்பட்ட படகு ஒவ்வொன்றும் 130 டாலர் செலவில் தயாரித்து திரையிடப்பட்டது. பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் ஆன் ஸ்ட்ரேஜர் டைட்ஸ் திரைப்படமானது 2011-ஆம் ஆண்டு ரோப் மார்சல் இயக்கத்தில் 397 மில்லியன் டாலர் மதிப்பில் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்திற்காக 24,812,500 கண் மை பென்சில்கள் ஒவ்வொன்றும் 16 டாலர் மதிப்பில் வாங்கி பயன்படுத்தப்பட்டது.

திரைப்படங்களில் மிக அதிகமாக செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களாக பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் ஆன் ஸ்ட்ரேஜர் டைட்ஸ் 379 மில்லியன் டாலர் மதிப்பிலும், அவென்சர்ஸ் ஏஜ் ஆப் அல்ட்ரான் 365 மில்லியன் டாலர் மதிப்பிலும், அவென்சர்ஸ் இன்பினிட்டி வார் 316 மில்லியன் டாலர் மதிப்பிலும் மற்றும் பலவிதமான திரைப்படங்கள் காணப்படுகின்றன. இந்தியத் திரைப்படங்களில் 2.0 திரைப்படம் 543 கோடி மதிப்பிலும், தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தான் மற்றும் சாகோ திரைப்படங்கள் 300 கோடி மதிப்பிலும், பாகுபலி 2 தி கன்குலூசன் 250 கோடி மதிப்பிலும் மற்றும் பல திரைப்படங்கள் காணப்படுகின்றன. திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் அதற்காக எடுக்கப்படும் காலங்களைக் கொண்டு திரைப்படங்கள் பிரம்மாண்ட திரைப்படங்களாக தயாரிக்கப்படுகிறது. சிறப்பான காட்சி விளைவுகளை திரைப்படங்களில் உருவாக்க காட்சி விளைவுகள் நிறுவனங்களுக்கு மிக அதிக காலம் தேவைப்படுகிறது. இதனாலேயே பிரம்மாண்ட திரைப்படங்களின் திரைப்பட காட்சி விளைவுகள் வேலையை பல நிறுவனங்கள் இணைந்து செய்து முடிக்கின்றன. தற்போது இந்தியாவிலும் இதுபோன்ற பிரம்மாண்டத் திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


டிசம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்