தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 38

20th Jul 2018

A   A   A

டோலிவுட் சினிமா தெலுங்கு சினிமா என அழைக்கப்படுகிறது. தெலுங்கு சினிமாவானது ஹைதராபாத் நகரை மையமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. டகுபதி வென்கையா நாயுடு என்பவர் 1921-ஆம் ஆண்டு பீஷ்ம ப்ரதிக்னா என்ற முதல் தெலுங்கு அமைதித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். இவரை தெலுங்கு சினிமாவின் தந்தை என அனைவரும் அழைக்கின்றனர். தற்பொழுது தெலுங்கு சினிமாவிலும் சிறந்த தொழில்நுட்பங்கள், காட்சி விளைவுகள் போன்றவைகள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.

திரைப்படத்திற்கு தொழில்நுட்பங்களைப்போல காட்சி விளைவுகளும் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. காட்சி விளைவுகள் தற்போது மிக முக்கியமான பகுதியாகத் திரைப்படம் தயாரிக்கப்படுவதில் காணப்படுகிறது. பொதுவாக தமிழ், இந்தி, தெலுங்கு போன்ற மொழித் திரைப்படங்களில் காட்சி விளைவுகள் 20% முதல் 30% பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஹாலிவுட் திரைப்படங்களில் 80% முதல் 90% வரை பயன்படுத்தப்படுகிறது. இதனாலேயே அவதார், வார் பார் தி ப்ளானட் ஆப் தி ஏப்ஸ் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், தயாரிப்பிற்கு அதிக காலம் தேவைப்படுவதாகவும் உள்ளது. இந்தியாவில் பாகுபலி போன்ற பிரம்மாண்ட திரைப்படங்களால் தற்போது அதிக படங்களில் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்படுகிறது.

தெலுங்கு திரைப்படங்களில் மிகச்சிறந்த காட்சி விளைவுகள் பயன்படுத்திய திரைப்படங்களாக மாயாபஜார், ஜகன்மோகினி, படலா பைரவி, அம்மொரு, ஆதித்யா 369, அன்ஜி, தேவி புட்ருடு, அருந்ததி, மகதீரா, ஈகா, அனகனக தீருது, ருத்ரமா தேவி, பாகுபலி, கஸி மற்றும் பாகுபலி தி கன்குலூசன் போன்ற திரைப்படங்களாகும்.

யாகம் என்ற திரைப்படமானது 2010-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படமானது முதன் முறையாக புதிய முயற்சியுடன் நேரடியாக செயற்கைக்கோள் சமிக்ஞை கிரகிக்கும் அமைப்பு உதவியுடன் ஹைதராபாத்திலுள்ள ருக்மினி தியேட்டரில் திரையிடப்பட்டது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் திரையரங்கில் செய்யப்பட்டது. செயற்கைக்கோள் உதவியுடன் 70MM அளவு திரையில் இங்கு திரையிடப்பட்டது.

தெலுங்கு திரைப்படங்களில் மிகச்சிறந்த காட்சி விளைவு திரைப்படங்களை தயாரித்தவர்களாக K.V.ரெட்டி, பி.விட்டாலச்சார்யா, என்.டி.ராம ராவ், பாபு, கொடி ராமகிருஷ்ணா, குணசேகரன், சங்கர், எஸ்.எஸ்.ராஜமௌலி மற்றும் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் போன்றோர் விளங்குகின்றனர்.

பாகுபலி மிகச்சிறந்த காட்சி விளைவுகள் திரைப்படமாக இதுவரை காணப்படுகிறது. காட்சி விளைவுகளைப் பயன்படுத்த திரைப்படப் படப்பிடிப்பின்போது பச்சை அல்லது நீல விரிப்புகள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அந்த காட்சிக்கு தேவையான காட்சி விளைவுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகிறது. எஸ்.எஸ்.ராஜமௌலி சத்ரபதி, யமடொன்கா, மார்யடா ராமன்னா, மகடீரா, ஈகா, பாகுபலி மற்றும் பாகுபலி தி கன்குலூசன் போன்ற சிறந்த திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் இதில் சிறந்த காட்சி விளைவுகளும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

மகதீரா திரைப்படத்தில் மிகச்சிறப்பாக Concept art, CGI Effects போன்ற காட்சி விளைவு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டன. இத்திரைப்படம் மிகவும் சிறந்ததொரு தெலுங்கு மொழி திரைப்படமாகவும் காணப்படுகிறது. ஜீன்ஸ் திரைப்படத்திலும் மற்றும் பாடல்களிலும் காட்சி விளைவுகள் மிகச்சிறப்பாக பயன்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், பாய்ஸ் திரைப்பட பாடலில் சிறந்த கேமரா எபெக்ட்களான Big freeze, Matrix effects போன்றவைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தது. 2010-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட ரோபோட் திரைப்படத்திலும் மிகவும் அதிதமான தொழில்நுட்பங்கள் மற்றும் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்பட்டு இருந்தன. ருத்ரமாதேவி திரைப்படமானது முதல் 3D ஸ்டீரியோஸ்கோபிக் திரைப்படமாக இந்தியாவில் காணப்படுகிறது. இத்திரைப்படமானது அக்டோபர் 2015-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சி தற்போது மிகவும் அபரிமிதமாக காணப்படுகிறது.

 (திரைப்படத்துறை வளம்பெறும்)

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை