தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை 27

F. பிரைட் ஜானி

16th Oct 2018

A   A   A

திரைப்பட உருவாக்கத்தில், காட்சி விளைவுகள் (Visual Effects) மூலம் நேரடி படப்பிடிப்புக் காட்சிகள் மற்றும் அனிமேஷன் காட்சிகளை இணைத்து தத்ரூபமாக உண்மையான காட்சிகள் போன்ற தோற்றத்தை உருவாக்க முடியும். படம்பிடிக்க, ஆபத்தான விலையுயர்ந்த, சாத்தியமற்றதாக அல்லது படப்பிடிப்பிற்கு இயலாதக் காட்சிகளை இவற்றில் உருவாக்க முடியும். தற்போது மலிவு மற்றும் எளிதான வகையில் கணினிக்காட்சிகள் திரைப்படங்களில் பயன்படுத்தும் வகையில் காணப்படுகிறது. இவற்றைப் பயன்படுத்தி காட்சிகளுடன் விலங்குகள், ரோபோக்கள் மற்றும் அபூர்வ சக்தி கொண்டவர்கள் போன்ற பலக் காட்சிகளை சாதாரண காட்சிகளுடன் இணைக்க முடியும். மேலும், அமெரிக்க வெள்ளை மாளிகை, வத்திக்கான், இராணுவ தலைமையகம் போன்ற மிகமுக்கிய இடங்களில் திரைப்படக்காட்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் வெள்ளை மாளிகை தாக்குதல் போன்ற பிரம்மாண்ட காட்சிகளை இந்த முறையைப் பயன்படுத்தி உருவாக்குகிறார்கள்.

திரைப்படத்தில் படப்பிடிப்பு முடிந்தபிறகு காட்சி விளைவுகளை உருவாக்க அதிக செலவு மற்றும் அதிக நேரமும் தேவைப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களைவிட இந்தியத் திரைப்படங்களில் காட்சி விளைவுகள் குறைவாகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிகவும் சரியான காட்சி விளைவுகளை உருவாக்க நிறுவனங்களுக்கு காலமும் தேவைப்படுகிறது. சில திரைப்பட தயாரிப்பாளர்கள் நேரத்தை கொடுக்காவிடில் அதன் தரமும் குறைகிறது. தற்பொழுது பாகுபலி, எந்திரன் இது போன்ற திரைப்படங்களின் மூலம் இந்தியாவிலும் காட்சி விளைவுகள் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திரைப்படங்களில் காட்சி விளைவுகளை உருவாக்க அதிக நேரம் தேவைப்படுகிறது. தற்போது அதிகமான காட்சி விளைவு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளது.

திரைப்படத்தின் வரவு செலவு திட்டம் அதிகமாகும்போது திரைப்படத்தின் தரமும் அதிகரிக்கிறது. காட்சி விளைவுகள் சரியான வகையில் உருவாகும்போது மேலும் இதன் தரம் உயர்கிறது. காட்சி விளைவுகள் மிகவும் விலையுயர்ந்த ஒரு செயல்பாடாகும். இது Rotoscoping> Paint Cleanup> Compositing> Matte Painting> Matchmove> Effects> Animation, Lighting> Texturing> Modeling மற்றும் பலவிதமான தொழில்நுட்ப அணிகளைக் கொண்டு காட்சி விளைவுகள் உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் திரைப்படத்தில் முதலீடு செய்ய 10 கோடி முதல் 60 கோடி வரை சாதாரணமாக தேவைப்படுகிறது. ஹாலிவுட்டில் சிறந்த காட்சி விளைவுகள் திரைப்படங்களை தயாரிக்க சராசரியாக 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படுகிறது. இந்தியாவில் இதுபோன்ற அளவுக்கு திரைப்படங்களில் முதலீடு செய்யப்படுவதில்லை. அதே நேரத்தில் பாகுபலி திரைப்படமானது இந்தியாவில் காட்சி விளைவுக்கு ஒரு எடுத்துக்காட்டாகக் காணப்படுகிறது.

மிகவும் சிறந்த ஹாலிவுட் திரைப்படங்களை உருவாக்கும் நிறுவனங்களாக இண்டஸ்டிரியல் லைட் அண்ட் மேஜிக், வெடா டிஜிட்டல், மூவிங் பிக்சர் கம்பெனி, ஃபிரேம்ஸ்டோர், சினிசைட் போன்ற பல நிறுவனங்கள் காணப்படுகிறது. மேலும், மிகவும் சிறந்த ஹாலிவுட் காட்சி விளைவுகளுக்கு எடுத்துக்காட்டாக அவதார் மற்றும் அவென்சர்ஸ் போன்ற திரைப்படங்கள் காணப்படுகிறது. மேலும், மிகவும் சிறந்த காட்சி விளைவுகள் திரைப்படங்களில் 1000 முதல் 3000 VFX Shots பயன்படுத்தப்படுகிறது. காட்சி விளைவுகள் காட்சிகளானது, தேவையான கணினி கதாபாத்திரங்கள் உருவாக்கப்பட்ட பிறகு அதற்கு தேவையான சுற்றுப்புறச்சூழல் உருவாக்கப்படுகிறது. அதன்பிறகு காட்சிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு துறையிலும் VFX Shots உருவாக்கப்படுகிறது. காட்சிகள் நிமிடங்களாகப் பிரிக்கப்பட்டு மேலும் அவை ஃபிரேம்களாக பிரிக்கப்பட்டு அதற்கான வேலைகள் செய்யப்படுகிறது.

இவற்றில் குண்டு வெடிப்பது, நெருப்பு, தண்ணீர், துணி மற்றும் துகள்கள் உருவாக்கம் போன்ற காட்சிகளை உருவாக்க மிகவும் கடினமாக இருக்கும். இதுபோன்ற காட்சிகளை உருவாக்க மிகவும் அதிகமான காலம் தேவைப்படுகிறது. இந்தக் காட்சிகளை கணினியில் render எடுக்க அதிக காலமும் தேவைப்படுகிறது. இதனாலேயே காட்சி விளைவுகள் காட்சிகளை உருவாக்க மிகவும் அதிகமான நிறுவனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கும் புரடக்‌ஷன் துறை மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது காட்சி விளைவுகள் பலவிதமான திரைப்படங்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரைப்படத்தின் வெற்றிக்கு காட்சி விளைவுகளும் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. மிகவும் சிறந்த காட்சி விளைவுகள் திரைப்படங்களுக்கு விருதுகளும் வழங்கப்படுகிறது.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்