தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 47

F. பிரைட் ஜானி

24th Jun 2019

A   A   A

காட்சி விளைவுகள் மற்றும் அனிமேஷன் துறையானது உலக அளவில் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக காணப்படுகின்றன மற்றும் இதற்காக பலவிதமான அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனாலேயே பிரம்மாண்ட திரைப்படங்கள் தயாரிக்க பல ஆண்டுகள் தேவைப்படுகிறது. இவற்றில் ஹாலிவுட் திரைப்படங்களிலே உலகளவில் மிக அதிகமான செலவு எடுத்துக்கொண்ட திரைப்படங்களில் சிலவற்றை பார்க்கலாம். மேலும் இது போன்ற திரைப்படங்களை மீண்டும் ரீமேக் படங்களாக எடுக்க சாத்தியமற்ற திரைப்படங்களாகக் காணப்படுகிறது.

மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அதிக செலவு எடுத்தத் திரைப்படங்களாக டைடானிக், கிங் காங், அவதார், ஸ்பெக்ட்ரி, அவென்சர் ஏஜ் ஆப் அல்ட்ரான், ஸ்பைடர் மேன் 3, டான்கில்ட், ஜான் கார்டர், வாட்டர்வேல்ட், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் ஆன் ஸ்ட்ரேன்சர் டைட்ஸ் மற்றும் பலவிதமான திரைப்படங்கள் காணப்படுகின்றன. டைட்டானிக் 1997-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட திரைப்படம் ஜேம்ஸ் கேமரோன் இயக்கத்தில் 200 மில்லியன் டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்டது ஆகும். இந்த திரைப்படத்தில் டைட்டானிக் கப்பலை உருவாக்க 120 முதல் 150 மில்லியன் டாலர் (1997 டாலர் மதிப்பில்) செலவு செய்யப்பட்டது. இந்த திரைப்படத்திற்காக 4,444,444 லைப் ஜாக்கெட்கள் வாங்கப்பட்டது. இவற்றின் ஒன்றின் மதிப்பு 45 டாலர் ஆகும். உண்மையான டைட்டானிக் கப்பலைப்போன்று சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டு அதன்பிறகு படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. படப்பிடிப்பை சிறப்பாக உருவாக்க கணினியிலும் சிறப்பாக 3டி டைட்டானிக் கப்பல் உருவாக்கப்பட்டு இருந்தது. இது சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டது.

கிங் காங் திரைப்படம் பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் 2005-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்திற்காக 207 மில்லியன் டாலர் செலவு செய்யப்பட்டது. இத்திரைப்படத்தில் 25 அடி உயரத்தில் கணினியின் உதவியுடன் கொரில்லா உருவாக்கப்பட்டது. சிறப்பாக கொரில்லாவை உருவாக்க படத்தின் செலவு மிக அதிகமானது. இத்திரைப்படத்திற்காக 40,948,900 டாலர் மதிப்பில் ஆறு எம்பையர் ஸ்டேட் கட்டிடங்கள் உருவாக்கப்பட்டன. சிறப்பான கணினி காட்சிகளால் இந்த திரைப்படமானது மிகப்பிரம்மாண்டமானதாக காணப்பட்டது.

ஸ்ப்ட்ரீ திரைப்படமானது சாம் மெண்டஸ் இயக்கத்தில் 2015-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 245 மில்லியன் டாலர் ஆகும். இத்திரைப்படத்திற்காக அதிநவீன சிறந்த தொழில்நுட்ப சாதனங்கள் வாங்கப்பட்டது இதனால் இத்திரைப்படத்தின் செலவு மிக அதிகமானது. மேலும் இத்திரைப்படத்திற்காக 1,225 ஆஸ்டன் மார்ட்டின் கார் 200,000 மதிப்பில் வாங்கப்பட்டது. இதன் அடுத்த பாகமான ஜேம்ஸ் பாண்ட் 25 திரைப்படம் 14 பெப்ரவரி 2020-இல் திரையிடப்படும்.

அவதார் திரைப்படமானது 2009-ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரோன் இயக்கத்தில் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 237 மில்லியன் டாலர் மதிப்பு ஆகும். இத்திரைப்படத்தில் மிகப்பிரம்மாண்டமாக 3டி மற்றும் மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதுபோன்ற அதிநவீன 3டி தொழில்நுட்பமானது உலகளவில் வேறு எந்த திரைப்படத்திலும் இதுவரை பயன்படுத்தப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இத்திரைப்படத்திற்காக கணினி கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்க அதிநவீன சர்வர்கள் நியூசிலாந்து நாட்டில் உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் இறுதி அவுட்புட் Md ஒரு தனி பிரேம் எடுக்க தொண்ணூறு மணிநேரம் தேவைப்பட்டது. ஒரு தனி பிரேம் என்பது இத்திரைப்படத்தில் ஒரு நிமிடத்தில் 24 ல் ஒரு பங்கு ஆகும். இத்திரைப்படத்திற்காக அதிநவீன தொழில்நுட்பங்கள் தேவைப்பட்டதால் 12 ஆண்டு காலதாமதமாக உருவாக்கபட்டது. இத்திரைப்படத்தில் சிறப்பான 3டி தொழில்நுட்பமானது பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்திற்காக 15,810,540 காலன் நீல நிற உடற் பூச்சு சாயம் வாங்கப்பட்டது. இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமானது 18 டிசம்பர் 2020-ஆம் ஆண்டு திரையிடப்படும்.

ஹாலிவுட் திரைப்படங்களில் மிகப்பிரம்மாண்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதுபோன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை உருவாக்க ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திரைப்படங்களில் பேப்பர் ஸ்டோரிபோர்ட், வீடியோ ஸ்டோரிபோர்ட் மற்றும் மிக முக்கிய கதாபாத்திரங்கள் உண்மையாகவே 3டி வடிவில் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே இதுபோன்ற பிரம்மாண்ட திரைப்படங்களை உருவாக்க மிக அதிக காலம் தேவைப்படுகிறது. மேலும் சிறப்பான காட்சி விளைவுகளை உருவாக்கவும் மிக அதிக காலம் தேவைப்படுகிறது. இதுபோன்ற திரைப்படங்களினாலே திரைப்படங்கள் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

                                    (திரைப்படத்துறை வளம்பெறும்)

 

 நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்