தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 46

F. பிரைட் ஜானி

10th May 2019

A   A   A

காட்சி விளைவுகள் மற்றும் அனிமேஷன் துறையானது உலக அளவில் அதிநவீன வளர்ச்சியைப் பெற்று வருகிறது. மிகப்பிரம்மாண்டமான திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது மற்றும் இதற்காக பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. திரைப்படங்கள் தற்போது 2D, 3D, 4D, IMAX, RealD, VR மற்றும் பல தொழில்நுட்பங்களில் தயாரிக்கப்பட்டு திரையிடப்படுகிறது. IMAX என்பது மிகவும் பிரபலமானதொரு தொழில்நுட்பமாகும். பல திரைப்படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழில்நுட்பத்திற்காக உயர்தர கேமராக்கள் மற்றும் புரொஜெக்டர்கள் பயன்படுத்தப்படுகிறது. IMAX என்பது Image Maximum என்பது ஆகும்.

IMAX Cinema Projection தொழில்நுட்பமானது முதன்முதலாக 1960 மற்றும் 1970-ஆம் ஆண்டுகளில் கனடாவில் பயன்படுத்தப்பட்டது. இதனை உருவாக்கம் செய்தவர்கள் க்ரெமி பர்குசன், ரோமன் க்ரோய்டர், ராபர்ட் கெர் மற்றும் வில்லியம் சி ஷா போன்றோர்கள் ஆவர். இந்த தொழில்நுட்ப திரைப்படங்களை இதற்கெனவே உருவாக்கப்பட்ட IMAX திரையரங்குகளில் மட்டுமே பார்க்க முடியும். சாதாரண திரையரங்குகளைப்போல அல்லாமல் இவை சதுர வடிவில் மிகவும் அகலமான திரையரங்காக காணப்படும். 2002-ஆம் ஆண்டு முதல் திரைப்படங்களை IMAX தொழில்நுட்பத்தில் பார்க்க சிறந்த தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. மேலும், இதற்காக சிறப்பாக தற்போது IMAX காமராக்களும் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டின் ஆய்வின்படி 1302 IMAX தியேட்டர் சிஸ்டமானது 1203 multiplex திரையரங்குகளிலும், 13 IMAX commerical destinations மற்றும் 86 IMAX institutional settings ஆனது 75 நாடுகளில் காணப்படுகின்றன என கூறப்படுகிறது.

திரைப்படங்களை 35mm, 70mm, 2K, 4K, 6K, 8K மற்றும் 3D போன்ற பல தொழில்நுட்பங்களில் திரைப்படங்களை பார்க்க முடிந்தது. தற்போது IMAX, VR போன்ற மிகப்பிரம்மாண்ட தொழில்நுட்பங்களில் திரைப்படங்களை பார்க்க முடிகிறது. டைகர் சைல்ட் முதல் IMAX திரைப்படமாக காணப்படுகிறது. முதல் IMAX நிரந்தர திரையரங்காக சினிஸ்பைர் திரையரங்கு காணப்படுகிறது. இது மே 1971-ஆம் ஆண்டு டொரண்டோவில் நிறுவப்பட்டது. மிகப்பெரிய IMAX திரையரங்காக 540 இருக்கைகள் கொண்ட டார்லிங் ஹார்பர் IMAX திரையரங்கு காணப்படுகிறது. இந்த திரையரங்கு உலக அளவில் மிகப்பெரிய IMAX திரைப்பட அரங்காக இருக்கிறது. இந்த திரையரங்கானது சிட்னியில் காணப்படுகிறது. இது 117.2 அடி அகலம் மற்றும் 96.5 அடி உயரம் கொண்ட திரையரங்காகும். பாகுபலி, தூம் 3 திரைப்படங்களும் IMAX தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டது.

பிரசாடஸ் ஐமாக்ஸ் ஹைதராபாத் திரையரங்கானது 72 அடி உயரம், 95 அடி அகலம், 635 இருக்கைகள் மற்றும் 12000 வால்ட் ஒலி அமைப்பு கொண்ட IMAX திரையரங்காகும். இந்த IMAX திரையரங்கானது இரண்டாவது மிகப்பெரிய IMAX 3D திரையரங்காக உலகளவில் காணப்படுகிறது. முதன் முதலாக 2001-ஆம் ஆண்டு Adlabs IMAX திரையரங்கு மும்பையில் உருவாக்கப்பட்டது. தற்போது அனைத்து முக்கிய இடங்களில் IMAX திரையரங்குகள் காணப்படுகின்றன. 2017-ஆம் ஆண்டின் தகவல்படி 11 IMAX இந்திய திரையரங்குகள் காணப்படுகின்றன. 2001-ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் ஐமாக்ஸ் கார்ட்டூன் திரைப்படமான ஃபான்டாசியா 2000 திரையிடப்பட்டது.

இந்தியாவின் முதல் IMAX திரைப்படமாக தூம் 3, இரண்டாவது IMAX திரைப்படமாக பாங்க் பாங்க், மூன்றாவது IMAX திரைப்படமாக பாகுபலி 2 தி கன்குலூஷன் மற்றும் நான்காவது IMAX திரைப்படமாக பத்மாவத் காணப்படுகிறது. கிரிஷ் 3 திரைப்படமானது 3D IMAX தொழில்நுட்பத்தில் திரையிடப்பட்டது. தற்போது IMAX தொழில்நுட்பமானது மிகப்பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பல திரைப்படங்கள் தற்போது IMAX தொழில்நுட்பங்களில் தயாரிக்கப்படுகின்றன. ஹாலிவுட்டில் பெரும்பாலான திரைப்படங்கள் இந்த தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படுகிறது. மேலும், இந்தியாவில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் இந்த தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இதனால் திரைப்பட தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமானதாக காணப்படுகிறது.

 (திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்