தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 26

F. பிரைட் ஜானி

22nd Oct 2018

A   A   A

திரைப்படக் காட்சிகளை படம்பிடிப்பதில் திரைப்படக் கேமரா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. திரைப்படக் காட்சிகளை படம்பிடிக்க பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான சிறந்த டிஜிட்டல் கேமராக்கள் Arri Alexa, Blackmagic Design Cinema Camera, Canon Cinema EOS, Panavision Genesis, Red Epic, Red Scarlet, Red One மற்றும் Sony CineAlta போன்ற கேமராக்கள் தற்பொழுது பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற டிஜிட்டல் கேமராக்கள் திரைப்படங்களின் தரத்தை டிஜிட்டல் முறையில் உயர்த்துகின்றன. திரைப்படத்தின் கதையைப் பொறுத்து கேமரா மற்றும் அதன் உபகரணங்கள் தீர்மானிக்கப்படுகிறது.

பிளாக் மேஜிக் கேமரா பெரிய பிராண்டு கேமராக்களில் ஒப்பிடுகையில் குறைவான செலவு, மேலும் நல்ல வீடியோக் காட்சிகளைக் கொடுக்கிறது. இந்த கேமராவானது indie filmmakers மற்றும் experimental filmmakers இவர்களால் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1984-ஆம் ஆண்டு கிரான்ட் பெற்றி என்பவரால் பிளாக் மேஜிக் டிசைன் நிறுவனமானது தொடங்கப்பட்டது. இந்த கேமராவின் மூலம் Hero Punk, Avengers: Age of Ultron மற்றும் Inside the belly of a dragon போன்ற திரைப்படங்கள் படம்பிடிக்கப்பட்டன. இந்த கேமராவின் ஆரம்ப விலை 2,995 டாலர் ஆகும்.

கேனான் C300 கேமராவானது சிறப்பாக திரைப்படத்துறையில் உள்ளவர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 35mm CMOS Sensor, EF lens mount மற்றும் அனைத்து Canon கேமராக்களிலும் பயன்படுத்தும் வகையில் EF சினிமா லென்ஸ் காணப்படுகிறது. இந்த கேமரா Her, 20 Feet from Stardom, Blue Ruin மற்றும் R.A. Resident Advisor போன்ற திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த கேமராவின் ஆரம்ப விலை 6,999 டாலர் ஆகும்.

பேனாவிஷன் கேமராக்கள் உயர்தரமான திரைப்படங்களை படம்பிடிக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவானது 65 mm மற்றும் 70 mm quality -களில் காட்சிகளைப் படம்பிடிக்கிறது. இயற்கைக் காட்சிகளை மிகவும் துல்லியமாக இந்த கேமராவில் படம்பிடிக்க முடியும். Birdman திரைப்படம் Arri Alexa கேமராவால் படமாக்கப்பட்டது, Gone Girl திரைப்படம் Red Epic Dragon கேமராவால் படமாக்கப்பட்டது, தி மாஸ்டர் திரைப்படம் பேனாவிஷன் சிஸ்டம் 65 கேமராவால் படமாக்கப்பட்டது.

2001-ஆம் ஆண்டு திரைப்படத்தில் டிஜிட்டல் முறையில் முதன்முதலாக ஜார்ஜ் லூகாஸ் என்பவர் சோனி HDW F900 கேமராவால் காட்சிகளை ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெக்சிகோ என்ற திரைப்படத்தில் பயன்படுத்தினார். 2009-ஆம் ஆண்டு திரைப்படத்தில் டிஜிட்டல் முறையில் சிறந்த ஒளிப்பதிவிற்காக முதல் முறையாக அகாடமி விருதானது ஸ்லம்டாக் மில்லினேர் என்ற திரைப்படத்திற்காக வழங்கப்பட்டது. திரைப்படங்களில் டிஜிட்டல் முறையில் காட்சிகளை படம்பிடிக்க அர்ரி, பிளாக்மேஜிக் டிசைன் மற்றும் ரெட் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் தொழில்முறை கேமராக்கள் வகையைச் சார்ந்ததாகும்.

திரைப்படங்களில் மிகவும் சிறந்த ரிசோலூஷன் காட்சிகளை டிஜிட்டல் முறையில் படம்பிடிக்க கேனான் மற்றும் பேனாசோனிக் வகையைச் சார்ந்த standard definition வகையைச் சார்ந்த கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் காட்சிகளை high definition முறையில் படம்பிடிக்க சோனி> JVC மற்றும் கேனான் போன்ற கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட அவதார் திரைப்படத்தில் டிஜிட்டல் 3d fusion கேமராவானது பயன்படுத்தப்பட்டது. இந்த கேமராவானது இந்த திரைப்படத்திற்கெனவே சிறப்பாக இவரால் வடிவமைக்கப்பட்டது. மிகவும் சிறந்த திரைப்படங்களில் அந்தந்த திரைப்படத்திற்கெனவே புதிய கேமராக்கள் வடிவமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 2015-ஆம் ஆண்டு எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் Baahubali: The Beginning திரைப்படத்தில் Arri Alexa XT கேமராவானது பயன்படுத்தப்பட்டது. தற்பொழுது இந்திய திரைப்படங்களிலும் டிஜிட்டல் கேமராக்கள் மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.