தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 41

F. பிரைட் ஜானி

12th Mar 2019

A   A   A

திரைப்படங்களில் பொதுவாக பலவகையான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் நீருக்கடியில் படம் பிடிக்கும் திரைப்படத் தொழில்நுட்பங்களைப் பற்றிப் பார்ப்போம். நீருக்கடியில் எடுக்கப்படும் திரைப்படச் செலவு மற்றும் அதன் கால அவகாசமும் மிகவும் அதிகமாகக் காணப்படும். இது போன்ற பிரம்மாண்டக் காட்சிகளை திரைப்படமாக்கும் சிறந்த இயக்குநர்களாக கெவின் ரெனால்ட்ஸ், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜேம்ஸ் காமரோன் போன்றோர்கள் காணப்படுகின்றனர். இதற்கு எடுத்துக்காட்டாக வாட்டர் வேல்ட்டு, ஷார்க் டேல்ஸ் மற்றும் டைட்டானிக் போன்ற திரைப்படங்கள் காணப்படுகின்றன. ஹாரி போட்டர் ஆன்ட் தி கோப்லெட் ஆப் பயர் திரைப்படத்திலும் நீருக்கடியிலுள்ள காட்சிகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நீருக்கடியில் திரைப்படத்தை எடுப்பது மிக கடினமானதாகக் காணப்படுகிறது. கேமரா பயன்படுத்தப்படும்போது அவர்கள் சுவாசிக்க தேவையான உபகரணங்கள் மற்றும் கேமராவுக்கு தேவையான உபகரணங்களை சரியாக பயன்படுத்த வேண்டும். திரைப்படத்திற்கு ஏற்றவாறு நீருக்கடியில் ஏற்ற அமைப்புகள் உருவாக்கப்பட்டு அதன்பிறகு படம்பிடிக்கப்படுகிறது. ஜேம்ஸ் காமரோன் தயாரிப்பில் வெற்றியைப் பெற்ற டைட்டானிக் திரைப்படத்திற்கு முன்னதாக நீருக்கடியில் முதன் முதலாக The Abyss என்ற திரைப்படமானது ஆகஸ்ட் 1989-ஆம் ஆண்டு திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தின் காட்சிக்காக நீருக்கடியில் நியூக்ளியர் ப்ளான்ட் இன் சவுத் கலிபோர்னியா உருவாக்கப்பட்டது. இதன் செலவு 2 மில்லியன் டாலர் மற்றும் இவற்றில் எண்ணைக் கிணறை உருவாக்க 18 மாதங்களும் தேவைப்பட்டது. தொடர்ந்து நீருக்கடியில் பல மணி நேரங்கள் நடிகர்கள் நடிக்கும்போது உடல்நிலையும் பொதுவாக பாதிக்கப்படுகிறது.

டிசம்பர் 2015-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட இன் தி ஹார்ட் ஆப் தி சீ திரைப்படத்திற்காக பரந்த கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்திலுள்ள நீருக்கடியிலுள்ள காட்சியை சிறப்பாக எடுக்க Warner Brothers Leavesden Studios 250 க்கு 250 அடி அளவில் ஒரு தண்ணீர் தொட்டியை வடிவமைத்து கொடுத்தது. மேலும் சிறிய மூன்று வேல்போட்களும் கொடுக்கப்பட்டது. இவ்வாறு நீருக்கடியில் காட்சிகள் எடுக்கப்பட்டபிறகு உண்மையான காட்சிகள் போன்ற தோற்றத்தை உருவாக்க கணினியின் உதவியுடன் காட்சி விளைவுகள் பயன்படுத்தப்படுகிறது. காட்சி விளைவுகளை சிறப்பாக உருவாக்கும் நிறுவனங்களாக Industrial Light & Magic (ILM) காணப்படுகிறது. இவற்றை சிறப்பாக உருவாக்க நிறுவனங்களுக்கு சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஆஸ்கார் விருது பெற்ற டைட்டானிக் திரைப்படத்திலுள்ள காட்சி விளைவுகள் Digital Domain, ILM நிறுவனங்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டது. ஜாஸ் என்ற திரைப்படமானது 1975-ஆம் ஆண்டு 3.5 மில்லியன் டாலர் செலவில் 55 நாட்களில் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. காட்சிகளை எடுக்க சிரமம் ஏற்பட்டதால் செலவு 9 மில்லியன் டாலர் மற்றும் அதன்பிறகு 159 நாட்கள் காட்சிகள் எடுக்க தேவைப்பட்டது. 1989-ஆம் ஆண்டு திரையிடப்பட்ட The Abyss திரைப்படத்தில் இருண்ட, குளிர்ந்த தண்ணீர் தொட்டியில் படப்பிடிப்பை எடுக்க 140 நாட்கள் தேவைப்பட்டது. இதன் செலவு 4 மில்லியன் டாலர் ஆகும். 1997-ஆம் ஆண்டு டைட்டானிக் திரைப்படத்தின் செலவு 100 மில்லியன் டாலர் ஆகும் மேலும் படப்பிடிப்பின்போது செலவு அதிகமானதால் திரைப்படத்தின் செலவு 200 மில்லியன் டாலர் ஆக உயர்த்தப்பட்டது. இத்திரைப்படத்தின் காட்சிகள் 138 நாட்களில் படம்பிடிக்கப்பட்டன. மேலும் படப்பிடிப்பின்போது நீருக்கடியிலுள்ள காட்சிகள் எடுக்கும்போது ஏற்பட்ட உடல்நிலை காரணங்களால் படப்பிடிப்பினை முடிக்க 160 நாட்கள் தேவைப்பட்டது.

1995-ஆம் ஆண்டு வெளியான வாட்டர் வேல்ட் திரைப்படத்தின் செலவு 100 மில்லியன் டாலர் என திட்டமிடப்பட்டு, அதன்பிறகு 175 மில்லியனாக உயர்த்தப்பட்டது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை 96 நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு அதற்குபிறகு இதனை முடிக்க 160 நாட்கள் தேவைப்பட்டது. மேலும், நீருக்கடியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்ட திரைப்படமாக இன் தி ஹார்ட் ஆப் தி சீ திரைப்படமானது காணப்படுகிறது. இத்திரைப்படத்தை ரேன் ஹோவர்ட் என்பவர் இயக்கினார். மேலும், ஜேம்ஸ் காமரோன் இயக்கத்தில் அவதார் 2 திரைப்படத்தில் நீருக்கடியில் மிக பிரம்மாண்டமான காட்சிகள் தற்போது படம்பிடிக்கப்பட்டு வருகிறது. இத்திரைப்படமானது டிசம்பர் 2020-ஆம் ஆண்டு திரையிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படத்திற்கென புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய சிறப்பான கேமராக்கள் உருவாக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது திரைப்படங்கள் அபரிமிதமான வளர்ச்சியைப் பெற்றுள்ளன.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.