தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 43

F. பிரைட் ஜானி

31st Mar 2019

A   A   A

அனிமேஷன் மற்றும் காட்சி விளைவுகள் துறையானது உலக அளவில் அதிநவீன வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மிகப்பிரம்மாண்டமான காட்சி விளைவு திரைப்படங்கள் தற்போது ஹாலிவுட்டிலே மிக அதிகமாக தயாரிக்கப்படுகிறது. இதனால் திரைப்படங்களின் வளர்ச்சி மிகவேகமாக காணப்படுகிறது. தற்போது ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்சிகளை நவீனப்படுத்த பல்வேறு காட்சி விளைவு நிறுவனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நிறுவனமும் திரைப்படத்திற்கு ஏற்றவாறு காட்சிகளை நிமிடங்களாக பிரித்து, அவற்றை மேலும் ஷாட்களாக பிரிக்கின்றன. இதன் அடிப்படையிலேயே அனைத்து மென்பொருட்களும் காணப்படுகிறது. காட்சி விளைவுகள் துறையில் அனைவரும் பயன்படுத்தும் ஒரு மென்பொருளாக The Foundry Nuke காணப்படுகிறது.

காட்சி விளைவுகள் துறையில் மிகப் பிரபலமான நிறுவனங்களாக Industrial Light & Magic, Weta Digital Framestore, Cinesite போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்கள் காணப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களை தயாரிக்கும் காட்சி விளைவுகள் நிறுவனங்கள் அதன் துணை நிறுவனங்களை தற்போது இந்தியாவிலும் உருவாக்கி வருகின்றனர். மேலும் பல இந்திய காட்சி விளைவுகள் நிறுவனங்கள் பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்கள் வெளியிட மிகவும் உதவியுள்ளனர். Avengers Infinity War, The Jungle Book, Iron Man, Alice in Wonderland மற்றும் இதுபோன்ற பல திரைப்படங்களின் காட்சி விளைவுகள் ஹாலிவுட் நிறுவனங்களின் உதவியுடன் இந்திய நிறுவனங்கள் அதன் காட்சி விளைவுகளை தயாரித்துள்ளன.

தற்போது திரைப்படத்தில் மனிதர்கள் மற்றும் 3D விலங்குகள் காட்சிகளை இணைத்து பிரம்மாண்ட காட்சிகளை உருவாக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் காணப்படுகின்றன. Motion Capture, Virtual Production, High Technology Camera, Advanced High End Software போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களின் உதவியுடன் பிரம்மாண்ட காட்சிகள் உருவாக்கப்படுகிறது. வாகனங்கள் மற்றும் ஆகாயவிமானம் வெடிக்கும் காட்சிகள் கணினியின் உதவியுடனே உருவாக்கப்படுகிறது. அவற்றில் பயணிப்பதுபோல தோற்றத்தை உருவாக்க வாகனங்களின் உட்புறத்தோற்றம் மட்டும் தனித்தனியே காட்சிகளுக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. இவற்றில் படம்பிடிக்கப்பட்ட பிறகு காட்சிகள் உண்மையான தோற்றத்தை உருவாக்க காட்சி விளைவுகள் நிறுவனங்கள் கணினியின் உதவியுடன் பணிபுரிகின்றனர். பிரம்மாண்ட காட்சிகள் உருவாக்கப்படும் போது அவற்றறைப் பற்றி படப்பிடிப்பு குழுவினர் காட்சி விளைவுகள் நிறுவனங்களின் ஆலோசனையின் உதவியுடன் காட்சிகளை படமாக்குகின்றனர்.

பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்கள் அனைத்திலும் காட்சி படமாக்கப்பட்டபிறகு உண்மையான தோற்றத்தில் பிரம்மிப்பான காட்சிகளை உருவாக்க ஒரு திரைப்படத்திற்கு 10-ற்கு மேற்பட்ட காட்சி விளைவுகள் நிறுவனங்கள் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிகின்றன. இவை முடிந்தபிறகு காட்சிகளை வரிசைப்படுத்த எடிட்டிங் நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது. சில திரைப்படங்களில் காட்சி விளைவுகளை உருவாக்க மூன்று முதல் நான்கு ஆண்டுகளும் தேவைப்படுகிறது. ஒவ்வொரு திரைப்படத்திலும் காட்சி விளைவுகளை கண்காணிக்கும் பொறுப்பை திரைப்படத்தின் இயக்குநர் ஒரு ஹாலிவுட் நிறுவனத்திற்கு வழங்குகிறார். அந்த நிறுவனமானது காட்சிகளை பிரித்து பிற நிறுவனங்களுக்கு வழங்குகின்றன. அவற்றை உருவாக்க அதற்கான காலத்தையும் நிர்ணயிக்கின்றன. மேலும், இதுபோன்ற பிரம்மாண்ட காட்சி விளைவுகள் நிறுவனங்களில் காட்சிகளை எவ்வாறு சரியான முறையில் உருவாக்குவது என்பதற்காக அந்த நிறுவனங்களிலேயே ஆய்வு குழுவானது காணப்படுகிறது.

மிகப்பிரம்மாண்ட திரைப்படங்களில் திரைப்படம் தயாரிப்பதற்கு முன்னர் இந்த குழுவின் உதவியுடன் மாதிரி காட்சிகள் உருவாக்கப்படுகிறது. அதன்பிறகு அதனை அடிப்படையாகக் கொண்டு கணினியில் 3D மாதிரி காட்சிகள் உருவாக்கப்படுகிறது. பின்னர் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டு காட்சிகளுக்கு ஏற்ற காட்சி விளைவுகள் உருவாக்கப்படுகிறது. காட்சி விளைவுகளை உருவாக்க நிறுவனங்களில் பல்வேறு வகையான அமைப்புகள் காணப்படுகிறது அதாவது Rotoscopy, Paint and Prep, Compositing, Matchmove, 3D Divisions போன்ற பல்வேறு அமைப்புகள் காணப்படுகிறது. காட்சி விளைவுகள் உருவாக்கப்படும்போது ஒவ்வொரு காட்சிகளும் இந்த காட்சிகளை உருவாக்கும் பல்வேறு அமைப்புகளும் அதற்கு தேவையான காட்சிகளை சரிப்படுத்தப்பட்ட பிறகே இறுதிக்காட்சி உருவாக்கப்படுகிறது. இதனாலேயே பொதுவாக பிரம்மாண்ட திரைப்படங்கள் மிகவும் காலதாமதமாக வெளியிடப்படுகின்றன. தற்போது காட்சி விளைவுகள் துறையானது அதிநவீன வளர்ச்சியை உலகளவிலும் மற்றும் இந்தியாவிலும் பெற்றுள்ளது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்