தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 40

F. பிரைட் ஜானி

23rd Feb 2019

A   A   A

திரைப்படங்களில் பொதுவாக கேமராக்கள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. திரைப்படமானது சிறந்து விளங்க கேமராக்களும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்கள் திரைப்படங்களிலே மிகச்சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களாகக் கருதப்படுகிறது. மிக முக்கிய அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு அந்த திரைப்படங்களுக்கென சிறப்பாகக் கேமராக்கள் உருவாக்கப்படுகின்றன. திரைப்படத்தின் தன்மை அதன் கதையைப் பொறுத்து கேமராக்கள் திரைப்படத்திற்கு தேர்வு செய்யப்படுகிறது.

ARRI Alexa கேமராவானது முழுமையாக டிஜிட்டல் அமைப்பைக் கொண்ட அன்றாட படப்பிடிப்பிற்கு ஏற்ற சிறந்த டிஜிட்டல் கேமராவாகும். இதன் விலை 66,000 டாலர் ஆகும். இந்த கேமராவைப் பயன்படுத்தி கிராவிட்டி, லைப் ஆப் பை, ஹுகோ, தி ரெவினன்ட், ஹங்கர் கேம்ஸ் பேட்மேன் மற்றும் ஸ்பாட் லைட் போன்றத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது. Red Epic Dragon கேமராவானது 6K Dragon Red சென்சார் கொண்ட 9x அதிக பிக்சல் கொண்ட படம்பிடிக்கும் திறனைக் கொண்டதாகும். பார்வை மற்றும் பட அடர்த்தி ஆகியவற்றில் பார்வைக்குரிய விவரம் மற்றும் ஈர்க்ககூடிய தன்மைக் கொண்ட தொழில் முன்னணி கேமராவாகப் பயன்படுகிறது. இதன் விலை 26,000 டாலர் முதல் 50,000 டாலர் வரை ஆகும். இந்த கேமராவானது Transformers Age of Extinction, Gone Girl, The Martian, The Danish Girl மற்றும் Pele போன்றத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது.

Panavision Genesis கேமராவானது மற்றுமொரு டிஜிட்டல் கேமராவாகும். பல வகையான சிறந்த தொழில்நுட்பங்களைக் கொண்ட கேமராவாகும். திரைப்படத்திற்கு ஏற்றவாறு இதன் லென்ஸ் தேர்வு செய்யப்படுகிறது. இதன் விலை ஏறக்குறைய 90,000 டாலர் ஆகும். இந்த கேமராவைப் பயன்படுத்தி கேப்டன் அமெரிக்கா தி பஸ்ட் அவென்சர், கெட் ஸ்மார்ட், ராபின் ஹூட், Machete மற்றும் ஸோம்பீலாண்ட் போன்றத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது. Sony Cinealta F65 கேமராவானது மிகச்சிறப்பாக டிஜிட்டல் முறையில் தயாரித்து ஒளிப்பதிவு செய்ய சிறந்த திரைப்படமாகும். இந்த கேமராவானது திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி காட்சிகளைப் படம்பிடிக்க தயாரிக்கப்படுகிறது. இந்த கேமராவின் விலை 65,000 டாலர் ஆகும். இந்த கேமராவைப் பயன்படுத்தி லூசி, நோ குட் டீட், ஆப்லிவியன், ஈவில் டெட் மற்றும் சேவ் மீ போன்றத் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டது.

திரைப்படங்களின் தன்மையைப் பொறுத்து டிஜிட்டல் கேமரா மற்றும் பிலிம் கேமரா பயன்படுத்தப்படுகிறது. ARRI மற்றும் ரெட் கேமராக்கள் மிக அதிகமாக படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்படுகிறது. முதன் முதலாக ரெட் கேமராக்கள் 2007-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பீட்டர் ஜாக்சன் மற்றும் ஸ்டீவென் சோடர்பெர்க் போன்ற திரைப்படத் தயாரிப்பாளர்களும் அதிகமாக தங்களது திரைப்படங்களில் இந்த வகையான ரெட் கேமராக்களைப் பயன்படுத்தினர். ஸ்டில் கேமராவைவிட ரெட் கேமராக்கள் மிகவும் பெரியதாக காணப்படுகிறது. The Hobbit திரைப்படத்தில் 3D CG Character - களை படம்பிடிக்க 48 ரெட் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. டிஜிட்டல் கேமராக்கள் மிகவும் அதிகமாக மற்றும் வேகமாக படம்பிடிக்கும் திறன் கொண்டதாகும்.

திரைப்படங்களில் படம்பிடிக்க டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் DSLR கேமராக்களும் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. DSLR கேமரா என்பது Digital Single Lens Reflex கேமரா என அழைக்கப்படுகிறது. திரைப்பட படப்பிடிப்பிற்காக மிக அதிகமாக Cannon EOS 7D என்ற DSLR கேமராவானது பயன்படுத்தப்படுகிறது. இந்த கேமராவின் விலை 899 டாலர் ஆகும். இந்த கேமராக்களைக் கொண்டு தி அவென்சர்ஸ், லைக் கிரேஸி, 127 ஹவர்ஸ் மற்றும் ரெட் ஸ்டேட் போன்ற திரைப்படங்களில் சில காட்சிகளுக்காக மட்டும் இவை பயன்படுத்தப்பட்டன. மேலும், மிகச்சிறந்த படப்பிடிப்பு பிலிம் கேமராவாக Arricam ST மற்றும் Arricam LT காணப்படுகிறது. இந்த கேமராவின் விலை 1,50,000 டாலர் முதல் 1,75,000 டாலர் வரை ஆகும்.

திரைப்பட படபிடிப்பிற்காக பல வகையான டிஜிட்டல் கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. மிக உயர்ந்த அதிநவீன திரைப்படங்களை படம் பிடிக்க தொழில் ரீதியிலான அதிக விலையுடைய கேமராக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், குறைந்த பட்ஜெட் திரைப்படங்களுக்கு DSLR கேமராக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. திரைப்படங்களின் தேவையைப் பொறுத்து கேமராக்கள் எண்ணிக்கை மற்றும் அதன் பயன்பாட்டைப் பொறுத்து தேர்வு செய்யப்படுகிறது. கேமராக்கள் திரைப்படங்களின் ஒளிப்பதிவின் மிக முக்கிய காரணமாக காணப்படுகிறது.

 

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.