தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 28

F. பிரைட் ஜானி

25th Sep 2018

A   A   A

திரைப்படமானது எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பது பற்றியும் அதன் நிலைகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. ஒரு திரைப்படமானது டெவலப்மென்ட்> முன்-தயாரிப்பு, தயாரிப்பு> பின்-தயாரிப்பு மற்றும் விற்பனை போன்ற பல நிலைகளுக்குப்பிறகே திரையிடப்படுகிறது. ஒவ்வொரு துறையின் சரியான பங்களிப்பே திரைப்படத்திற்கு வெற்றியைத் தருகிறது. ஒரு திரைப்படமானது முதலில் டெவலப்மென்டில் தொடங்குகிறது. இதில் திட்டமிடல்> திரைக்கதை> பிரதான குழு உறுப்பினர்கள் மற்றும் பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அடங்குவர். திரைப்படத்தின் கதையை இயக்குனர் முதலில் தேர்வு செய்கிறார். மேலும், அந்த கதையின் முக்கியக்கருத்து மற்றும் கதைக்களம் தேர்வு செய்யப்பட்டபிறகு கதையானது கதைச்சுருக்க முறையில் எழுதப்படுகிறது.

திரைப்படத்தின் கதை எழுதப்படும்போது திரைப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு டைரக்‌ஷன், லொக்கேஷன் மற்றும் கேமரா தேர்வு செய்யப்படுகிறது. திரைப்படத்தின் கதையானது சரியான மாற்றங்கள் அமைக்கப்பட்டு திரைப்படக்கதை எழுதப்படுகிறது. திரைப்படத்தின் கதை தயாரான பிறகு திரைப்படத்தின் அடுத்த நிலையான முன்-தயாரிப்பு வேலைகள் ஆரம்பிக்கப்படுகிறது. இதில் திரைப்பட நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது மற்றும் திரைப்படத்திற்கென குழுவும் உருவாக்கப்படுகிறது. அவர்கள் இதன் ஒவ்வொரு நிலைகளையும் கண்காணிக்கின்றனர். இவற்றில் காஸ்ட் லிஸ்ட், ஸ்டோரி போர்ட், லொகாஷன் பிளான், பணியாளர் பட்டியல், குத்தகைகள், செலவு திட்டம், மற்றும் சூட்டிங் பிளான் போன்றவை காணப்படுகின்றன.

திரைப்படத்திற்கான ஸ்டோரி போர்ட் தயாரானபிறகு இந்த கதைக்கு ஏற்ற நடிகர், நடிகை, கேமராமேன், தயாரிப்பாளர் மற்றும் திரைப்படத்திற்கான லொகேஷன் தேர்வு செய்யப்படுகிறது. திரைப்படத்திற்கு தேவையான உபகரணங்கள் மற்றும் கேமரா இவை எல்லாவற்றைப் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. திரைப்படத்தின் இயக்குனர் இவற்றில் சரியானதை தேர்வு செய்து திரைப்படத்தை எடுக்க தயாராகிறார். மேலும், திரைப்படத்தை எடுக்க அதன் நேரத்தையும் நிர்ணயிக்கிறார். திரைப்படத்தின் கதையானது படக்குழுவினர் மற்றும் படப்பிடிப்பதற்கு ஏற்றவாறு பல்வேறு நிலைகளில் அவைப் பிரிக்கப்படுகிறது. திரைப்படப் படப்பிடிப்பின்போது அதிகமான நபர்கள் பணியமர்த்தப்படுகிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே வேலைகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

திரைப்பட தயாரிப்புத் துறையில் இயக்கம், கேமரா, லைட்டிங், சவுண்ட், டேலண்ட் மற்றும் பல அடங்கும். இதில் மேற்பார்வையாளர், உதவியாளர், புகைப்படக்கலைஞர்கள், எடிட்டர், இயக்குனர், ஆபரேட்டர், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இதுபோன்ற பலபேர் கொண்ட குழுவானது இணைந்து செயல்பட்டு திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளை செய்து முடிக்கின்றார்கள். திரைப்படத்திற்கு தேவையான இடம் தேர்வு செய்யப்பட்டு காட்சிகள் படமாக்கப்படுகிறது. மேலும், தினசரி எடுக்கப்பட்ட திரைப்படக் காட்சிகள் மாலை வேளையில் ஆய்வு செய்யப்படுகிறது. தேவைப்படும்போது மீண்டும் அந்தக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகள் படமாக்கப்பட்டபிறகு அவை   பின்-தயாரிப்புக்கு மாற்றப்படுகிறது.

பின்-தயாரிப்பில் Rough Cut> Special Effects> Computer Graphics> Opening> Bridging> End Credits> Film Score> Sound Editing மற்றும் நிறதிருத்தம் போன்ற பல நிலைகள் காணப்படுகிறது. மிகச்சிறந்த திரைப்படங்கள் அனைத்திற்கான பின்-தயாரிப்பு வேலைகள் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. திரைப்படமானது முன்-தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் பின்-தயாரிப்பு போன்ற நிலைகளைத் தாண்டி படமாக்கப்பட்டபிறகு திரைப்படமானது விற்பனை செய்யப்படுகிறது. திரைப்படத்தின் விற்பனையில் திரைப்பட விநியோகஸ்தர், கலெக்‌ஷன் ஏஜெண்ட், திரைப்பட விநியோகம், கலெக்‌ஷன் மற்றும் இலாபப்பகிர்வு போன்றவைக் காணப்படுகிறது. ஒவ்வொரு மொழித் திரைப்படங்களின் திரைப்படத் தயாரிப்பானது சிறிது வேறுபடுகிறது. இதனாலேயே திரைப்படத் தயாரிப்பானது சில வருடங்கள் எடுக்கிறது. மிகவும் சிறந்த திரைப்படங்களை தயாரிக்க அதிக காலமானது தேவைப்படுகிறது. ஹாலிவுட் திரைப்படங்களின் தயாரிப்பு நிலைகள் மற்ற மொழி திரைப்படங்களைவிட அதிகம் இதனாலேயே அவற்றின் தரமானது மிகவும் சிறந்துக் காணப்படுகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.