தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை - 34

F. பிரைட் ஜானி

13th Aug 2018

A   A   A

திரைப்படத்துறையில் புரடக்‌ஷனுக்கு அடுத்தபடியாக போஸ்ட்-புரடக்‌ஷன் காணப்படுகிறது. போஸ்ட்-புரடக்‌ஷன் திரைப்படத்துறையின் ஒரு முக்கியப் பகுதியாகும். இது திரைப்படம், வீடியோ தயாரிப்பு, புகைப்படம் எடுத்தல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வானொலி நிகழ்ச்சிகள், விளம்பரம், ஆடியோ பதிவுகள் மற்றும் டிஜிட்டல் கலைகள் போன்ற பலவற்றில் பயன்படுகிறது. படப்பிடிப்பு முடிந்தபிறகு நடக்கும் அனைத்து விதமான நிலைகளையும் மற்றும் காட்சிகளை பதிவுசெய்த பிறகு சரிபார்க்கவும் போஸ்ட்-புரடக்‌ஷன் பயன்படுகிறது. போஸ்ட்-புரடக்‌ஷன் மிக முக்கிய பகுதியாகவும் காணப்படுகிறது.

போஸ்ட்-புரடக்‌ஷன் பலவிதமான பிரிவுகளை உள்ளடக்கியது ஆகும். ரஃப் கட், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், விஷுவல் எஃபெக்ட்ஸ், கம்ப்யூட்டர் கிராபிக்ஸ், ஓபனிங், பிரட்கிங், எண்ட் கிரடிட்ஸ், பிலிம் ஸ்கோர், வீடியொ எடிட்டிங், சவுண்ட் எடிட்டிங் மற்றும் வண்ணதிருத்தம் போன்றவையாகும். இவை அனைத்தும் முடிந்தபிறகு திரைப்படமானது விநியோகிக்கப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. திரைப்படப் படப்பிடிப்புக் காட்சிகளை உருவாக்கும் காலத்தைவிட மிகவும் அதிகமான காலம் போஸ்ட்-புரடக்‌ஷனிற்கு தேவைப்படுகிறது. முழுமையான எடிட்டிங், காட்சி விளைவுகள், வண்ணதிருத்தம் மற்றும் இசை மற்றும் ஒலி ஆகியவற்றை உள்ளடக்கியது என்பதால் முடிக்க பல மாதங்கள் ஆகிறது. சில மிகச்சிறந்த ஹாலிவுட் திரைப்பட போஸ்ட்-புரடக்‌ஷனிற்கு பல வருடங்களும் ஆகிறது. இதனாலேயே சில திரைப்படங்கள் மிகவும் சிறந்து விளங்குகின்றன.

ஒரு திரைப்படத்தின் எடிட்டிங் திரைப்பட இயக்கத்தின் இரண்டாவது செயல்முறையாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் திரைப்படத்தின் தயாரிப்பை எடிட்டிங் உதவியுடன் எந்தவிதமாக வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்க சாத்தியமாகும். திரைப்படத்தில் காட்சி விளைவுகள் மற்றும் எடிட்டிங் மிகமுக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், வண்ண தரப்படுத்தல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம், இசை மற்றும் ஒலி ஆகியவற்றின் மூலம், படத்தின் சூழ்நிலை மற்றும் காட்சிகளை மாற்றியமைக்க முடியும். உதாரணமாக நீல வண்ணம் கொண்ட படம் ஒரு குளிர் வளிமண்டலத்துடன் தொடர்புடையது மற்றும் இசை மற்றும் ஒலித்தேர்வு ஆகியவை பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்பட்ட திரைப்பட காட்சிகளின் விளைவை அதிகரிக்கின்றன.

டையிங் இண்டஸ்டிரியில் பணிபுரிந்த ஃபில் இஸோ என்பவர் போஸ்ட்-புரொடக்‌ஷன் என்ற பெயரை தேர்வு செய்தார். மேலும், போஸ்ட்-புரொடக்‌ஷனிற்கு உயர்தர தொழில்நுட்பத்தைக் கொண்டு மென்பொருளின் உதவியுடன் எடிட்டிங் போன்ற பல தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்த எடிட்டிங் முறை நான்-லைனர் எடிட்டிங் சிஸ்டம் என அழைக்கப்படுகிறது. இதுபோன்ற, பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவதன் மூலம் ஆண்டுக்கு மிகவும் அதிமான வசூலையும் மற்றும் திரைப்படத்தின் தரத்தையும் அதிகரிக்க முடியும்.

வீடியோ எடிட்டிங் திரைப்பட போஸ்ட்-புரொடக்‌ஷன் துறையின் ஒரு பகுதியாக காணப்படுகிறது. வீடியோ எடிட்டிங் என்பது வீடியோ படங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் கையாளுதல் முறையாகும். இதன் மூலம் தேவையான படக்காட்சிகளை மட்டும் தனியாக பிரிக்க முடியும். ஒலிக்காட்சிகளை மீண்டும் சரிசெய்ய மறு ஒலிப்பதிவு மற்றும் எடிட்டிங் பயன்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் சினிமா தொழில்நுட்பத்தின் உதவியுடன் காட்சிகளுக்கு மேலும் எபெக்ட்ஸ் கொடுக்க ஸ்பெஷல் எபெக்ட்ஸ் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. காட்சிகளுக்கு ஏற்றவாறு இவை கணினியுடன் உருவாக்கப்பட்டு அவை பயன்படுத்தப்படுகிறது. மேலும், இவற்றை உருவாக்க மிகவும் அதிகமான காலம் தேவைப்படுகிறது.

சரியான முறையில் ஒலியை மறுபதிவு மற்றும் கலப்பு செய்ய பலவிதமான தொழில்முறை ஒலி கருவிகள் பயன்படுத்தப்படுகிறது. ஒலி வடிவமைப்பு, ஒலி எபெக்ட்ஸ், ADR, Foley மற்றும் இசையை பயன்படுத்தும் முறையை ஒலி மறு ஒலிப்பதிவு என அழைக்கின்றோம். திரைப்படக் காட்சிகளுக்கு ஏற்றவாறு காட்சிகள் கலர் கிரேடிங் மற்றும் கலர் கரெக்‌ஷன் உதவியுடன் வண்ணமாக்கப்படுகிறது. திரைப்படத்தின் வெற்றிக்கு போஸ்ட்-புரொடக்‌ஷன் மிக முக்கியமானதாகக் காணப்படுகிறது. திரைப்படத் தரத்தை போஸ்ட்-புரொடக்‌ஷன் உதவியால் உயர்த்த முடியும். போஸ்ட்-புரொடக்‌ஷன் இவற்றில் விஷுவல் எபெக்ட்ஸ் மற்றும் வீடியோ எடிட்டிங்கை சரியான விதத்தில் உருவாக்க மிகவும் அதிகமான காலம் மற்றும் நேரம் மற்றும் மிக அதிக செலவும் ஆகிறது. திரைப்படத் தயாரிப்பில் போஸ்ட்-புரொடக்‌ஷன் மிக முக்கிய பகுதியாகக் காணப்பட்டு வருகிறது.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்