தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 32

F. பிரைட் ஜானி

21st Aug 2018

A   A   A

திரைப்படத் தயாரிப்பில் பிரி-புரடக்‌ஷனிற்கு அடுத்தப் படியாக புரடக்‌ஷன் காணப்படுகிறது. புரடக்‌ஷன் இதில் முக்கிய பகுதியாக திரைப்படத்தின் தினசரி உற்பத்தி விவரம் கணக்கிடப்படுகிறது, மேலும் அனைத்துக் காட்சிகளும் படமாக்கப்படுகிறது. திரைப்படத்தின் தயாரிப்பில் புரடக்‌ஷன் மிக முக்கிய பகுதியாகக் காணப்படுகிறது. திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிகளையும் தனித்தனியாக உருவாக்கி வீடியோவாக மாற்றும்போது திரைப்படமாக காட்சியளிக்கிறது. திரைப்படக் காட்சிகளில் எளிமையாக படமெடுக்கும் வகையிலும் பலபேர் பணியமர்த்தப்படுகிறார்கள். அதாவது சொத்து மாஸ்டர், ஸ்கிரிப்ட் மேற்பார்வையாளர், உதவி இயக்குநர்கள், ஸ்டில் ஃபோட்டாகிராபர், படம் எடிட்டர் மற்றும் ஒலி ஆசிரியர்கள் போன்றோர்கள் உதவி செய்கின்றனர்.

திரைப்படத் தயாரிப்பில் மிகவும் பொதுவான பல பாத்திரங்கள் காணப்படுகின்றன. பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கு தனித்துவமான பங்களிப்பு மிகவும் அவசியமாகக் காணப்படுகிறது. ஒரு படத்தின் தயாரிப்பின்போது திரைப்படத்திற்கு ஏற்றவாறு தயாரிப்பு அலுவலகம் பல குழுக்களுடன் இணைந்துத் திட்டமிடுகிறது. புரடக்‌ஷன் பகுதியில் மிக முக்கிய தயாரிப்பு துறைகளாக இயக்கம், கேமரா, லைட்னிங், சௌண்ட், டாலண்ட் மற்றும் இதர துறைகளும் அடங்கும். இயக்கத்தில் மிக முக்கிய நபர்களாக இயக்குநர் இவர் தயாரிப்பு பகுதியில் நிகழும் அனைத்து நிகழ்வுகளைக் கண்காணித்து வழிநடத்துகின்றார். துணை இயக்குநர், இவர் புரடக்‌ஷன் பகுதியில் காட்சிகளுக்கான அரங்குகளை கண்காணிக்கின்றார். மேலும், இரண்டாவது துணை இயக்குநர் நடிகர்களுடன் இணைந்து தயாரிப்பு நிகழ்வுகளை வழிநடத்துகின்றார்.

கேமரா, இதில் மிக முக்கிய நபர்களாக சினிமாடோகிராபர் / DP இவர் தயாரிப்பு பகுதியில் உள்ள கேமரா செயல்பாடுகளை கவனிப்பவராகக் காணப்படுகின்றார். கேமரா ஆபரேட்டர் கேமராவை இயக்குபவராகக் காணப்படுகின்றார். துணை கேமரா மேன்கள் என அழைக்கப்படுபவர்கள் காட்சிகளுக்கு ஏற்றவாறு கேமராவின் இடம் மற்றும் கேமராவின் போகஸ்களை தேர்வு செய்பவர்களாக காணப்படுகின்றார். மேலும், Clapper / Loader திரைப்படக் காட்சிகளுக்கு தேவையான பிலிம் மற்றும் ஸ்லேட்களை பயன்படுத்துபவர்களாகக் காணப்படுகின்றார்.

லைட்னிங், இதில் மிக முக்கிய நபர்களாக சினிமாட்டோகிராபர் இவர் ஒளி வடிவமைப்பு மற்றும் அதனை அனைத்து இடங்களிலும் சரியாக பயன்படுத்துபவராகக் காணப்படுகின்றார். Gaffer மற்றும் எலெக்ட்ரிசியன் இவர்கள் லைட்களை சரியான விதத்தில் கட்டுப்படுத்த உதவுகிறார்கள். Key Grip மற்றும் Grips பயன்ர்படுத்தும் இவர்கள் நிழல்கள் மற்றும் சிறப்பு rigging காட்சிகளில் பயன்படுத்த உதவுகிறார்கள். படப்பிடிப்பில் விலங்குகள் மற்றும் புதுமையான வடிவில் மனிதர்களை உருவாக்கும்போது rigging மிகவும் அவசியமாக காணப்படுகிறது.

சவுண்ட்ஸ், இவற்றில் மிக முக்கிய நபர்களாக சவுண்ட் மிக்சர் ஒலியை சரியான விதத்தில் ரிக்கார்ட் செய்பவராகக் காணப்படுகின்றார். பூம் ஆபரேட்டர், காட்சிகளில் பயன்படுத்தும் மைக்ரோபோன்களின் இருப்பை கண்காணிக்கின்றார். கிளாப்பர், இவர் கேமராவுக்கு தேவையான கிளாப் ஸ்லேட் - பயன்படுத்துபவராகக் காணப்படுகின்றார். Talent, இவற்றில் நடிகர்கள் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றனர். நடிகர்கள் கேமராவிற்கு முன்னால் தங்களது திறமைகளை இயக்குநர் உதவியுடன் வெளிப்படுத்துபவர்களாகக் காணப்படுகிறார்கள்.

தயாரிப்பு, இவற்றில் இதர துறைகள் பகுதியில் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் இவர் தயாரிப்பு பகுதியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் சரியான விதத்தில் திட்டமிடுகிறார். Continuityscript girlகாட்சிகளின் தொடர் நிகழ்வில் ஏற்படும் தவறுகளை சரிசெய்பவராக காணப்படுகின்றார். அதாவது காட்சி எடுக்கும்போது நடிப்பவர்களின் உடை, அலங்காரம் மற்றும் ஒப்பனை அதனைச் சார்ந்த காட்சிகளிலும் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து இல்லையெனில் மீண்டும் அதே அலங்காரமிட்டு காட்சி எடுக்கப்படுகிறது. ஒப்பனை நிபுணர் நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு தேவையான ஒப்பனை செய்பவர்களாகக் காணப்படுகிறார்கள். Production Assistant, இவர் தயாரிப்பு பகுதியில் தேவைப்படும் பலவிதமான வேலைகளை செய்பவராகக் காணப்படுகின்றார். திரைப்படத்தில் பலபேரின் கூட்டு முயற்சியால் படத்தின் தயாரிப்பு காட்சிகள் படமாக்கப்படுகிறது. இங்கு அவற்றில் சில முக்கிய நபர்களின் பணிகளைப் பற்றிய விவரங்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.