தொடர்புடைய கட்டுரை


திரைப்படம் பிறந்தக் கதை – 29

F. பிரைட் ஜானி

21st Sep 2018

A   A   A

திரைப்பட தயாரிப்பிற்காக 5 விதமான நிலைகள் திரைப்படங்களில் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு நிலைகளிலும் சரியாக பயன்படுத்தும்போது திரைப்படத்தின் தரமும் உயர்ந்துக் காணப்படுகிறது. திரைப்பட தயாரிப்பின் முக்கிய நிலைகள் Development> Preproduction> தயாரிப்பு> Post Production மற்றும் வினியோகம் ஆகும். முதலில் திரைப்படத்தின் தயாரிப்பாளர் கதையை தேர்வு செய்கிறார். கதையானது புத்தகம், நாடகம், மற்றொரு திரைப்படம், ஒரு உண்மையான கதை மற்றும் அசல் யோசனை இவற்றை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைப்படத்தின் கதை உருவாகிறது. திரைப்டத்தின் கதை மற்றும் அதன் அடிப்படைச் செய்தி தேர்வு செய்தபிறகு தயாரிப்பாளர், எழுத்தாளர் உதவியுடன் திரைப்படத்தின் ஆய்வு சுருக்கத்தை உருவாக்குகிறார். மேலும், ஆய்வு சுருக்கமானது அவுட்லைன் வடிவிலும் எளிதாக புரியும் வகையிலும் உருவாக்கப்படுகிறது.

திரைப்படத்தின் கதை உருவாக்கப்படும்போது writers Screenplay இவற்றைப்பற்றி 90 முதல் 120 பக்கத்திலும், Treatment ஆனது 10 முதல் 30 பக்கத்திலும் மற்றும் ஆய்வு சுருக்கமானது 1 முதல் 5 பக்கங்கள் வரை எழுதப்படுகிறது. திரைப்படத்தின் முக்கிய பகுதிகள் திரைக்கதையில் அடங்கும். Treatment மற்றும் ஆய்வுசுருக்கம் இதில் கதையின் கருத்து காணப்படுகிறது. Treatment இதில் கதையைப் பற்றிய விளக்கங்கள், அதன் மனநிலை மற்றும் கதாபாத்திரங்களின் வசன நிலைகளும் குறிப்பிடப்பட்டிருக்கும். இவற்றில் எளிதாக புரியும் வகையில் சில ஓவியங்களும் இடம்பெற்றிருக்கும். மேலும், இவற்றை மேம்படுத்த Screenwriter கதையின் தெளிவு, கட்டமைப்பு, பாத்திரங்கள், வசனம் மற்றும் ஒட்டுமொத்த பாணியையும் மேம்படுத்தி திரைக்கதையை மீண்டும் மாற்றி எழுதப்படும்.

திரைப்படத்தின் கதை உருவானபிறகு அவற்றைப்பற்றி விளம்பரம் செய்யப்படுகிறது. திரைப்படத்தைப்பற்றி முதலீட்டாளர்கள், ஸ்டுடியோக்கள் மற்றும் பிற நிறுவனங்களுடன் திரைப்படத்தின் கதையைப்பற்றி ஆலோசனை நடத்தப்படும். மேலும், திரைப்பட விநியோகஸ்தர்கள் போன்ற பல பேருடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு பற்றிய ஆலோசனையும் நடத்தப்படுகிறது. திரைப்படங்களுக்காக பல இடங்களும் தேர்வு செய்யப்படுகிறது. திரைப்படக்கதையின் உரிமம் பெற தயாரிப்பாளர் திரைக்கதாசிரியருக்கு அதற்கான பணத்தைக் கொடுத்து கதையின் உரிமம் பெறுகிறார். கதையின் உரிமத்தை 1 அல்லது 2 ஆண்டுகளுக்குள் பெற வேண்டும். கதையைப் பொறுத்து இதன் உரிமமானது லட்சம் முதல் கோடிவரை செல்லும்.

WGI விதிமுறையின்படி எழுத்தாளர் உதவியுடன் தயாரிப்பாளர் கதையின் உரிமத்தைப் பெற்று கதையை எடுக்க தயாராகிறார். 2004-ஆம் ஆண்டு Script Writers Association of Andhra Pradesh (SWAAP) தொடங்கப்பட்டது. நவம்பர் 2009-ஆம் ஆண்டு இந்த அமைப்பானது Writers Guild of India (WGI) என மாற்றப்பட்டது. இந்த அமைப்பின் விதிமுறையின்படியே திரைப்படத்தின் கதை எழுதப்பட்டு அதற்கான உரிமம் பெறப்படுகிறது. மேலும், திரைப்பட எழுத்தாளர் சங்கம் எனும் அமைப்பும் மும்பையில் இயங்கி வருகிறது. திரைப்பட Development மிகவும் விலையுயர்ந்த ஒரு செயல்பாடாக கருதப்படுகிறது.

திரைப்படத்தில் பணிபுரிய நடிகர் மற்றும் நடிகைகளுக்கு திரைப்படத்தின் இயக்குனர் அழைப்பு விடுக்கிறார். திரைப்படத்தின் இடங்களும் தேர்வு செய்யப்படுகிறது. மேலும், திரைப்பட முதலீடு பற்றிய அறிக்கை 10 முதல் 40 பக்கங்களுக்கு உருவாக்கப்படுகிறது. இவற்றில் ஆய்வு சுருக்கம், Story Treatment, பூர்வாங்க பட்ஜெட், வருவாய் திட்டமிடல்கள், பிற்சேர்க்கைகள் மற்றும் மிக சுருக்கமாக இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர் பற்றிய விவரங்களும் அடங்கும். இவற்றிற்கு தேவையான முக்கிய ஓவியங்கள் மற்றும் வரைபடங்களும் இதில் இடம் பெற்றிருக்கும். இந்த அறிக்கையானது தேர்வு செய்யப்பட்ட திரைப்பட முதலீட்டாளர்களிடம் வழங்கப்படுகிறது. இவை தயாரானபிறகு திரைப்படத்தின் பட்ஜெட் முடிவு செய்யப்படுகிறது. மேலும், இங்கு திரைப்படத்தின் இலாபம் இந்தியா மற்றும் இதர நாடுகள் இதைப்பற்றியும் ஆலோசனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில் Film Budget Top Sheet உருவாக்கப்பட்டு திரைப்படத்தின் பட்ஜெட் முடிவு செய்யப்படுகிறது. இதனாலேயே திரைப்பட Development பகுதியிலேயே மிகவும் அதிகமாக செலவாகிறது. இவற்றில் சரியான ஆய்வை மேற்கொள்ளும்போது திரைப்படத்தின் Development சுலபமாக முடியும்.

(திரைப்படத்துறை வளம்பெறும்)

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.