தொடர்புடைய கட்டுரை


நிலக்கடலை

அக்ரி சுரேஷ்

12th Aug 2018

A   A   A

அரக்கீஸ் ஹைப்போஜியா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட நிலக்கடலையின் தாயகம் மத்திய அமெரிக்க பகுதியாகும். நிலக்கடலை (Ground nut) விதைத்த 150 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கு நிலக்கடலை முக்கிய காரணமாகும்.

நூறு கிராம் நிலக்கடலையில் அடங்கியுள்ள சத்துக்களாவன… கார்போஹைட்ரேட் – 16 கிராம், புரதம் – 26 கிராம், கொழுப்பு – 40 கிராம், நார்ச்சத்து – 9 கிராம், கால்சியம் – 92 மில்லிகிராம், இரும்பு – 4.6 மில்லிகிராம், மக்னிசியம் – 168 மில்லிகிராம், செலினியம் – 7.2 மில்லிகிராம், துத்தநாகம் – 3 மில்லிகிராம், வைட்டமின் E – 8 கிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. நிலக்கடலையில் ப்ரிப்டோபன் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இவ்வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்கு உதவுகிறது.
  2. நிலக்கடலையில் போலிக் அமிலம் அதிகம் இருப்பதால் நிலக்கடலை சாப்பிடும் பெண்களின் கர்ப்பபை சீராக செயல்படுவதுடன் கர்ப்பபை கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படாமல் காக்கிறது.
  3. நிலக்கடலையில் p-coumaric அமிலம் என்கிற பாலிபினாலிக் எதிர் ஆக்ஸிகரணி புற்றுநோய் கட்டிகள் வயிற்றில் ஏற்படாதவாறு தடுக்கிறது.
  4. நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் (resveratrol) என்ற பாலிபினாலிக் ஆக்ஸிகரணி நிறைந்துள்ளது. இவை புற்றுநோய், இதயநோய், பக்கவாத நோய், வைரஸ் தொத்து நோய் போன்றவை வராமல் உடலை பாதுகாக்கிறது.
  5. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் நியாசின் வட்டமினும், தோல்களின் ஆரோக்கியத்திற்கு பயன்படும் வைட்டமின் E யும் அடங்கியுள்ளது.
  6. நிலக்கடலையில் கொழுப்புகள் மாற்றத்தில் பங்குபுரியும் மாக்கனிஸ் சத்தும், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு உதவும் கால்சியம் சத்தும், நன்மை செய்யும் கொழுப்பை அதிகரிக்கும் துத்தநாகம், தாமிரம் சத்துக்களும் அடங்கியுள்ளன.
  7. நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 கொழுப்பு அமிலமானது நோய் எதிர்ப்பு சக்திக்கு உதவிபுரிகிறது. மேலும், நிலக்கடலையில் உள்ள மோனோ அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலமானது (LDL) குறைந்து, அடர்த்தி கொழுப்பு அமிலத்தை குறைத்து (HDL) அதிக அடர்த்தி கொழுப்பு அமிலத்தை அதிகரித்து இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

 


நவம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.