தொடர்புடைய கட்டுரை


கலப்படம் - மாமிசம்

அக்ரி சுரேஷ்

02nd Apr 2019

A   A   A

மாமிச உணவுகள் தான் கலப்படமற்ற உணவு என நினைத்த காலத்தில், மாமிச உணவுகளிலும் தற்போது வணிக ரீதியாக கலப்பட பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மீன்கள் விற்பனைக்கு வரும்போது அதிக எடை காட்டுவதற்காக ஊசி மூலம் தண்ணீர் ஏற்றப்படுகிறது. மேலும் இதேப்போல் இறைச்சி உணவுகளிலும் தண்ணீர் ஏற்றப்படுகிறது.

மீன்கள் அதிக நாட்கள் கெட்டுபோகாமல் இருப்பதற்காக பார்மலின் திரவத்தில் கலந்து வைக்கப்படுகிறது. பார்மலின் மற்றும் பார்மால்டிறைடு போன்ற வேதிபொருட்கள் மனிதர்களின் சடலத்தை நீண்ட நாள் கெடாமல் வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இவை மீன்களில் பயன்படுத்தப்படுகிறது என செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் மனிதர்களுக்கு பலவித நோய்கள் வருகிறது. மீன்களை வாங்கும்போது மீன்களுக்குரிய மணம் உள்ளதா என்றும், மீன்கள் வளையும் தன்மையுடன் உள்ளதா என்றும் பார்த்து வாங்குவதன் மூலம் கலப்பட அபாயத்தை தவிர்க்கலாம்.

உணவு விடுதிகளில் கடல் மீன் என கூறி குளத்து மீன்களை உணவாக விற்கும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. இறைச்சி வகைகளில் ஆட்டு இறைச்சிக்கு பதிலாக, இளம் வயது மாட்டின் இறைச்சியை கலந்து விற்கின்றனர். இதேபோல் கோழி இறைச்சிகளில் நாட்டு கோழிக்கு பதிலாக ப்ராய்லர் கோழி விற்கப்படுகிறது. இறைச்சி வகைகளில் கலப்படம் செய்வதை அதன் நிறம் வைத்தும், DNA வரைபட மாதிரி வைத்தும் ஆய்வகங்களில் துல்லியமாக கண்டறியலாம்.

இறைச்சி மற்றும் மீன் வகைகளை சிறு டப்பாக்களில் அடைத்து உணவாக விற்கும்போது சில தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது. முட்டை வகைகளில் நாட்டு முட்டைக்கு பதிலாக ப்ராய்லர் கோழியின் சிறு முட்டைகளை தேர்ந்தெடுத்து அதனை தேயிலை தூள் சாயத்தில் முக்கி விற்கின்றனர். மேலும் பிளாஸ்டிக் கொண்டு செயற்கையாக முட்டை தயாரிக்க முடியும் என சோதனையில் நிரூபணமாகி உள்ளது. பிளாஸ்டிக் முட்டை தயாரிக்கும் செலவு அதிகமாக இருப்பதால் அதிக பயன்பாட்டிற்கு வராது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

 


ஜூலை 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.