தொடர்புடைய கட்டுரை


பவள பாறைகள்

பி.ரெ. ஜீவன்

16th Mar 2019

A   A   A

நிலமும் கடலும் சேரும் இடங்களின் அருகே இருக்கும் நிலத்தை பற்றி சென்ற மாதம் பார்த்தோம், இந்த மாதம் அதன் அருகே உள்ள கடல் பற்றி பார்க்கலாம். இந்த கடல் பகுதியில் சூரிய வெளிச்சம் தரை வரை எட்டும் அளவுக்குதான் ஆழம் இருக்கும். அதிக சூரிய வெளிச்சம், அதிக ஊட்டச்சத்துடைய கடல்நீரோட்டம், கடற்கரையின் அருகாமையில் இருப்பது, ஆழமின்மை போன்ற பல காரணங்கள் இங்கு பல்வேறு வகையான உயிரினங்களை ஈர்க்கிறது. இவற்றிற்கு மிக அடிப்படையாக இருப்பது பவள பாறைகள்.

விண்வெளி ஆராட்சியில் இதுவரை பிறந்ததிலே தலைசிறந்த விஞ்ஞானியாக கருதபடுபவர்களில் ஒருவர் வில்லியம் ஹெர்ச்செல் (William Herschel). இன்று நாம் பயன்படுத்தும் தொலைநோக்கி இவரும், இவரின் சகோதரியான கரோலின் ஹெர்ச்செல் (Caroline Herschel) சேர்ந்து கண்டுபிடித்தது தான். வில்லியம், யுரேனஸ் (Uranus) கிரகத்தை கண்டுபிடித்தார். ஆனால் இவரின் முதல் கண்டுபிடிப்புகள் விண்வெளியில் இல்லை.

ஒரு இசையமைப்பாளராக வேண்டும் என்ற கனவுடன் ஜெர்மனி நாட்டிலிருந்து இங்கிலாந்து நாட்டுக்கு குடும்பத்துடன் வில்லியம் வந்தார். அங்கு இசையுடன் சேர்ந்து விஞ்ஞான ஆர்வமுடைய நண்பர்கள் அவருக்கு கிடைத்தனர்.

பவள பாறைகள் உண்மையில் பாறைகள் இல்லை. அவைகள் உயிரினங்கள். இவைகள் தாவர வகையை சார்ந்தது என்று அக்காலத்தில் நினைத்துகொண்டு வந்தனர். நுண்ணோக்கி (microscope) பயன்படுத்தி பவள பாறைகள் தாவரங்கள் அல்ல, அவை விலங்குகள் என்பதை வில்லியம் கண்டுபிடித்தார்.

நண்டு, நத்தை போன்ற உயிரினங்களுக்கு கடினமான தோடு இருப்பது போன்று பவள பாறைகளுக்கும் தோடு உண்டு. இந்த தோடு தான் பாறைகள் போன்று காட்சியளிக்கிறது. பகலில் பாறைகள் போன்று இருந்தாலும், இரவில் அவற்றின் சுயரூபம் தெரியும். இவ்விடங்கள் அடர்ந்த காடு போன்று எல்லா செழிப்பும் இருந்தாலும் இவ்விடங்களில் இடத்திற்கான போட்டி இருக்கும். பக்கத்தில் இருக்கும் பவள பாறையை மாறி மாறி தாக்கி அதன் இடத்தை விரிவு செய்ய போட்டியிடுகிறது. இடம் இல்லாத பவள பாறையால் பிழைக்க முடியாது.

பவள பாறைகள் கண்ணுக்கு தெரியாத சிறு உயிரினங்களான பிளங்டன்களை உண்கிறது. சிறு சிறு விழுதுகள் பவள பாறைகளில் இருந்து வந்து இந்த சிறு உயிரினங்களை பிடித்து உண்கிறது. உலகின் ஆயிரக்கணக்கான வகை பவள பாறைகள் உள்ளது. ஒவ்வொன்றும் வெவ்வேறு நிறம் மற்றும் வடிவத்தில் இருக்கும். எனவே இவை கடலில் பார்க்க மிக அழகாக இருக்கும். இந்த வண்ணங்கள் இவை உண்ணும் சிறு தாவரங்கள் அதன் மேல் வளர்வதால் வருகிறது. பூமி வெப்பமடைவதால் இந்த பவள பாறைகள் இந்த தாவரங்களை உண்ணாமல் பட்டினியால் சாகிறது. இதனால் இன்று உலகின் பல்வேறு இடங்களில் பவள பாறைகள் இறந்து வருகிறது. கடல் நீர் அதிக வெப்பமாவதால் இப்படிப்பட்ட நிகழ்வு நடக்கிறது.

சூரிய வெளிச்சம் இருக்கும் இடத்தில மட்டுமே வாழும். அங்கு தான் அவைகள் உண்ணும் கண்ணுக்கு தெரியாத உணவு அதிகமாக இருக்கும். ஆனால் சில பவள பாறைகள் கடலின் ஆழத்திலும் வாழ பழகியுள்ளது. மிக ஆழத்திற்கு செல்லாவிட்டாலும், சூரிய ஒளி அதிகம் எட்டாத அளவுக்கு ஆழத்திலும் இவை வாழ்கிறது. இப்படி பட்ட ஆழ்கடல் பவள பாறை மிக அபூர்வமானது.

பல பவள பாறைகள் பூமி வெப்பமாவதால் இறந்துபோனாலும், இன்றும் கடலின் அழகை நினைத்தாலே இவைகள் தான் ஞாபகம் வரும். இவைகள் இருக்கும் இடத்தில் பல வண்ண மீன்கள், நண்டு, போன்ற எல்லா வகை உயிரினங்களும் ஈர்க்கபடுகிறது. கடலில் பெரும்பான்மையான உயிரினங்கள் பவள பாறைகள் இருக்கும் இடங்களில் தான் உள்ளது. பவள பாறைகள் அழிந்தால் கடல் சுற்றுசூழல் முழுவதும் பாதிக்கப்படும். எனவே இவற்றை பாதுகாப்பது மிக முக்கியமானது.

பல்வேறு ஆராய்சிகள் பவள பாறைகளை பாதுகாக்கும் முயற்சியில் நடந்துள்ளது. பூமியின் எதிர்காலமே இந்த ஆராய்சியின் கையில் தான் உள்ளது. பல முயற்சிகள் பல நாடுகள் சேர்ந்து செய்தாலும், பூமி வெப்பமாவதை உடனடியாக நாம் தடுக்க முடியாது. ஆனால் கண்டிப்பாக ஒரு நூற்றாண்டில் சரி செய்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அந்த காலம் வரை இருக்கும் பவள பாறைகளை பாதுகாக்க வேண்டும்.

கடலின் மிக பெரிய மீன்கள் கூட அடிக்கடி பவள பாறைகள் இருக்கும் இடத்திற்கு வந்து போகிறது. மிக பெரிய கூட்டமாக கூட பல பெரிய மீன்கள் இங்கு வருகிறது. இங்கு வருகின்றபோது தான் அவைகளின் வாழ்கையில் பல முக்கிய நிகழ்வுகள் நடக்கிறது. இனபெருக்கம் செய்ய தேவையான எல்லா சூழல்களும் பவள பாறைகள் தான் கொடுக்கிறது. இது பவள பாறைகள் கடலுக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை காட்டுகிறது.

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை