தொடர்புடைய கட்டுரை


ஓகி புயலில் தப்பிய அதிசய நாவல் மரம்

Dr. பா. சாம்ராஜ்

30th May 2019

A   A   A

இந்த ஆண்டு நவம்பர் நெருங்கும் வேளையில், 2017 ஆண்டு நவம்பர் மாதம் தாக்கிய ஓகி புயல் நினைவுக்கு வருகிறது. நான் தினமும் பகல் நேரத்தில் பணிபுரிகிற “ஷெக்கினா அலுவலகம் ஓகி புயலால் மிகவும் பாதிக்கப்பட்டு கண்ணாடிகள் மற்றும் அதனுடைய சட்டகம், ஃபிளக்ஸ் போர்டு உடைக்கப்பட்டு நிலைகுலைந்து போனது. அதோடு மட்டுமல்லாமல் என்னுடைய இல்லத்தின் பின்புற மதில் சுவரும் இந்த ஓகிப் புயலின் தாக்கத்தினால் உடைக்கப்பட்டும், உறுதி குறைந்த சில மரங்கள் விழுந்திருப்பதையும் நான் காணமுடிந்தது.  

இதை பார்க்கும்போது, ஒரு வனவியல் விஞ்ஞானி என்கிற முறையில் சில ஆய்வுகள் மூலம் நான் கற்றறிந்தக் கருத்துக்களை வாசகர்கள், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கவனத்திற்கு சில உதாரணங்கள் மூலமாகக் கூற விரும்புகிறேன். இந்த ஆலோசனைகள் சூறாவளி போன்ற பெருங்காற்றுகள் வரும்போது அதிலிருந்து நாம் தப்பிக்கொள்ள சிறந்த வழிவகுக்கும் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் சந்தேகமும் இல்லை.

சுழற்காற்று கிழக்கு மேற்காக தீவிரமாக மழையுடன் வீசினதால், தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ள என் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடிகள், ஃபிளக்ஸ் போடுகள் பாதிக்கபட்டன. ஆனால் அலுவலகத்திலுள்ள கணினிகள், ஜெராக்ஸ் இயந்திரங்கள் மற்றும் நூலகம், என்னுடைய தனிப்பட்ட ஓய்வு அறை போன்றவை மிகவும் பாதுகாப்புடன் இருந்தது. இந்த காற்றின் வேகத்தைத் தடுத்து அதிக அழிவுகள் வராமல் மேல்மாடி மற்றும் கீழ்மாடி கட்டிடங்களைப் பாதுகாத்தது நான் 1973 ஆம் ஆண்டில் என்னுடைய கையால் நட்டு வளர்த்த 45 வயது நிரம்பிய நாவல் மரமே ஆகும்.

புயலுக்குத் தப்பி திடகாத்திரமாக இன்றும் காட்சி அளிக்கும் இந்த மரம் மெய்யாகவே ஒரு சிறந்த மரம் என்றும் இம்மரம் ஒரு பாரம்பரிய மரமாக இருப்பதால் எந்தக்காரணத்தைக் கொண்டும் வெட்டிவிடாமல் வருங்கால சந்ததியினர் அதனுடைய சிறப்பு தன்மையையும் மரங்களால் கிடைக்கும் பயன்களையும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்.

இந்த நாவல் மரம் நிற்கும் இடம் ஒரு தொழிற்சாலைப் பகுதியாக முக்கியமான இடத்தில் அமைந்திருப்பதால் இவ்வட்டார மக்கள் இம்மரத்தையும் இதன் பரந்து கிரீடம் போன்று விரிந்த கிளைகளையும், மிகவும் ஆழத்தில் வேர்விட்டு மண்ணை இறுகப் பிடித்து வாழ்ந்து மக்களுக்கு மாசற்ற காற்றையும், நிழலையும் மற்றும் நிலத்தடி நீரையும் தருகிறபடியால் ஒரு புனித மரமாக கருதுகிறார்கள். இம்மாதிரி உறுதியான ஆணிவேரும், பக்க வேரும் உள்ள நம்நாட்டு மரங்களை கண்டறிந்து சாலை ஓரங்களிலும், வீடுகளிலும், நிறுவனங்களிலும் மற்றும் கோயில் வளாகங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும் நட்டு வளர்த்து பராமரிக்க வேண்டும் என்று அறைகூவல் விடுகிறேன்.

இதுபற்றிய ஆராய்ச்சி முடிவுகள் என்னிடம் இருக்கின்றன. அந்த தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர் என்னுடைய கைப்பேசி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம் (94429 64033). மேலும் மக்களுக்கு பயன் உள்ளதாக தமிழில் சில தொகுப்புக்களையும் பேரிடர் இன்னல்களை எதிர்கொள்ளும் திட்டங்களை எவ்வாறு திட்டமிட்டு செயல்படுத்தலாம் என்பதைப் பற்றிய கையேடும் என்னுடைய “ஷெக்கினா” அலுவலகத்தில் தயாராகி வருகிறது. ஆர்வமுள்ளவர்கள் அதைக் குறைந்த விலையில் பெற்று பயன் அடையலாம்.

 


2018 அக்டோபர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.