மனதை இலகுவாக்கும்
உயிர்
கவனக் குறைவின் விலை..!
நினைப்பது போல் நடப்பதில்லை
வாட்சப் உபயோகித்தால்..?
’இன்சைட்’ இல்லாமல் போனால்..?
கடவுள் நம்பிக்கை..!
மதுவின் ஆதிக்கம்
மலேசிய அழைப்பு
மனநிலை ஒன்றே போதும்
வித்தியாசமான சில ஆளுமைகள்
இந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று...
திரும்ப திரும்ப வரும் எண்ணங்கள்
எல்லாம் மனதாலே...
கொஞ்சம் ரிலாக்ஸ்
வாழ்வை புரட்டிப்போடும் ஆன்மீக சிந்தனைகள்
வலிப்புநோய் போன்ற உடல் அசைவுகள்
நவீன தொழில்நுட்ப பாதிப்புகள்
சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி
நமக்கு நாமே காவல்
உண்மை நிலை
எண்ணங்களால் நோய்கள்
26th Jul 2018
என் கலந்தாலோசனை அறைக்கு வந்த இரண்டு நபர்களை பற்றி கூற விரும்புகிறேன்.
முதலில் ஒரு தம்பதியர். அவர்கள் தங்கள் மகள் காதலித்து திருமணம் செய்ததைப் பற்றி வருத்தப்பட்டு கூறினர். அவர்களது மகள் தன்னுடன் வேலை செய்யும் நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் குமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஜோடிப் பொருத்தம் மிக அருமையாக இருந்திருக்கிறது. நிறம், பருமன், உயரம், குணம், படிப்பு இவை அனைத்தும் பொருத்தமென்றாலும் வெவ்வேறு ஜாதியாக இருந்ததால் மணமகளின் தாயாருக்கு சிறிது வருத்தம் இருந்தது. மணமகனுக்கு உறவினர்கள் அதிகம் இல்லையாதலாலும், பெற்றோர்கள் இல்லையாதலாலும், மாப்பிள்ளை பையனும் நம் ஜாதியை சேர்ந்தவன் தான் என மணமகளின் பாட்டியிடம் கூறி இருந்தார்கள். அதாவது தன் தாயிடம் மணமகளின் தாயார் கூறியிருந்தார்.
இப்பொழுது காதலித்து மணமுடித்த அப்பெண் கருவுற்றிருந்ததால் வேலை செய்யும் இடத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்து தங்க வேண்டி இருந்தது. அவ்வாறு தங்கி இருக்கும் பொழுது வேறு ஜாதியில் தன் மகளுக்கு கல்யாணம் செய்துவைத்தது தன் தாயாருக்கு தெரிந்துவிடுமோ என மிகவும் பயந்துகொண்டிருந்தார் அப்பெண்மணி. இந்த பயத்தினால்தான் அவரது கணவர் அப்பெண்மணியை என்னிடம் கூட்டி வந்திருந்தார். அப்பெண்மணிக்கு சரியான தூக்கம் வராததால் மனசோர்வு, உடல்சோர்வு ஏற்பட்டு மிகவும் தளர்ந்திருந்தார். அவரது மொத்த எண்ணங்களுமே நம் மகள் வந்தபின் அவள் ஜாதிவிட்டு ஜாதி மாறி மணமுடித்தது தன் தாயாருக்கு தெரிந்துவிடுமோ என்ற பயம்தான் நாள் முழுவதும் ஆட்கொண்டிருந்தது.
பொதுவாக எந்தவொரு காரியமும் நாம் பயப்படுவது போல் நடப்பதும் இல்லை. அல்லது பெரிதாக எதிர்பார்த்து அதாவது நல்லதாக அதேபோல் முடியும் என்றும் கூற முடியாது. அவரது மகளின் கணவர் மிகவும் அருமையாக தன் மகளை கவனித்துக் கொள்கிறார். அவர்கள் இருவரும் அந்நியோன்யமான தம்பதிகளாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தனர். இப்பெண்மணிக்கு இந்த எண்ணங்களே வியாதியாகி இருந்து, மறைத்து வைத்த ரகசியம் வெளியாகி விடுமோ என. நான் அவரிடம் நீங்கள் நினைப்பதுபோல் ஒன்றும் ஆகாது, பேத்தி கருவுற்றிருப்பதே பாட்டிக்கு சந்தோஷத்தை கொடுக்கும், வேறொன்றும் ஆகாது எனக் கூறி மனச்சோர்வை மாற்றுவதற்கான மருந்தை கொடுத்துவிட்டேன். இரண்டு வாரத்தில் அவர் ஓரளவுக்கு மனதளவில் தயாராகி அவரது மகளும் ஊருக்கு வந்து தங்கியிருந்து பிரச்சனைகள் எதுவுமின்றி எல்லாம் நன்றாக முடிந்து திரும்பவும் சென்றுவிட்டார்.
பின்னர் அவருக்கு மருந்துகளை குறைத்துக் கொடுத்து எதையும் எதிர்பார்த்து பய்ப்பட வேண்டாம் என்றும் எந்த பிரச்சனையும் வராது என்றும் தைரியம் கூறி அனுப்பினேன். ஒரு சில மாற்று ஏற்பாடுகளில் என்ன விதத்தில் எல்லாம் பிரச்சனைகள் எழுகின்றன என்பதை இதன் மூலம் அறிய முடிந்தது.
இரண்டாவதாக இன்னும் ஒரு நபரின் கதையை சுருக்கமாக கூறுகிறேன். இத்தம்பதியினரும் இது போன்றே வெவ்வேறு இனத்தவர். மணமுடித்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன. 11 வயதில் ஒரு பெண்ணும், 8 வயதில் ஒரு பெண்ணும் இருக்கின்றனர். கணவர் ஒரு தனியார் நிறுவனத்திலும், மனைவி ஒரு தனியார் மருத்துவமனையிலும் வேலை செய்கின்றனர். இப்பெண்ணிற்கு அவ்வப்பொழுது எரிச்சல், கோபம், கணவரிடம் சச்சரவு செய்வது, தூக்கம் வராமல் இருப்பது இதுபோன்ற குளறுபடிகள் இருக்கின்றன. என்னிடம் மூன்று முறைகளுக்கு மேலாக அவ்வப்பொழுது சிகிட்சை செய்துள்ளனர். சிறிது காலம் நலமாக இருந்தபின் மீண்டும் இம்முறை உள்நோயாளியாக அனுமதித்து மூன்று நாட்களும் புத்திமதிகள் கூறி விபரங்களை முழுமையாக கேட்ட பின்னரே கீழ்காண்பவற்றை அறிய முடிந்தது.
இருவரும் வெவ்வேறு இனத்தவர் என்பதால் கணவரது பெற்றோர்களும், வந்து பேத்திகளை பார்த்துவிட்டு, பொருட்களை கொடுத்துவிட்டு சென்றுவிடுவர். அதுபோன்றே மனைவியின் பெற்றோர்களும் பாராமுகமாக தன்னையும் தன் குழந்தைகளையும் அனாதரவாக இருக்க வைத்துள்ளனர் என அப்பெண் மனதில் புழுங்கி புழுங்கி Aggittated depussion என்னும் ஒரு வித்தியாசமான மனசோர்வு வியாதி வந்துள்ளதாக அறிந்தேன். ஆகவே காதலித்து கல்யாணம் செய்தாலும் ஒரே இனத்தில் காதலித்தால்தான் சரியோ என தோன்றுகிறது. காதலில் இனம், ஜாதி, மதம், அந்தஸ்து இவையெல்லாம் பார்த்து காதலிக்க முடியுமா என எனக்கு தெரியாது. எனினும் காதலிப்பதிலும், காதலித்து மணம் முடிப்பதிலும் இத்தனை சமூக முளறுபடிகளும், இடையூறுகளும் எழுகின்றன என்பது நிச்சயமாக தெரிகின்றது.
மார்ச் 2018 அமுதம் இதழில் வெளியானது.
மனதை இலகுவாக்கும்
உயிர்
கவனக் குறைவின் விலை..!
நினைப்பது போல் நடப்பதில்லை
வாட்சப் உபயோகித்தால்..?
’இன்சைட்’ இல்லாமல் போனால்..?
கடவுள் நம்பிக்கை..!
மதுவின் ஆதிக்கம்
மலேசிய அழைப்பு
மனநிலை ஒன்றே போதும்
வித்தியாசமான சில ஆளுமைகள்
இந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று...
திரும்ப திரும்ப வரும் எண்ணங்கள்
எல்லாம் மனதாலே...
கொஞ்சம் ரிலாக்ஸ்
வாழ்வை புரட்டிப்போடும் ஆன்மீக சிந்தனைகள்
வலிப்புநோய் போன்ற உடல் அசைவுகள்
நவீன தொழில்நுட்ப பாதிப்புகள்
சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி
நமக்கு நாமே காவல்
உண்மை நிலை
எண்ணங்களால் நோய்கள்
மனதை இலகுவாக்கும்
உயிர்
கவனக் குறைவின் விலை..!
நினைப்பது போல் நடப்பதில்லை
வாட்சப் உபயோகித்தால்..?
’இன்சைட்’ இல்லாமல் போனால்..?
கடவுள் நம்பிக்கை..!
மதுவின் ஆதிக்கம்
மலேசிய அழைப்பு
மனநிலை ஒன்றே போதும்
வித்தியாசமான சில ஆளுமைகள்
இந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று...
திரும்ப திரும்ப வரும் எண்ணங்கள்
எல்லாம் மனதாலே...
கொஞ்சம் ரிலாக்ஸ்
வாழ்வை புரட்டிப்போடும் ஆன்மீக சிந்தனைகள்
வலிப்புநோய் போன்ற உடல் அசைவுகள்
நவீன தொழில்நுட்ப பாதிப்புகள்
சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி
நமக்கு நாமே காவல்
உண்மை நிலை
எண்ணங்களால் நோய்கள்
மனதை இலகுவாக்கும்
உயிர்
கவனக் குறைவின் விலை..!
நினைப்பது போல் நடப்பதில்லை
வாட்சப் உபயோகித்தால்..?
’இன்சைட்’ இல்லாமல் போனால்..?
கடவுள் நம்பிக்கை..!
மதுவின் ஆதிக்கம்
மலேசிய அழைப்பு
மனநிலை ஒன்றே போதும்
வித்தியாசமான சில ஆளுமைகள்
இந்த இளைஞர்களுக்கு என்னவாயிற்று...
திரும்ப திரும்ப வரும் எண்ணங்கள்
எல்லாம் மனதாலே...
கொஞ்சம் ரிலாக்ஸ்
வாழ்வை புரட்டிப்போடும் ஆன்மீக சிந்தனைகள்
வலிப்புநோய் போன்ற உடல் அசைவுகள்
நவீன தொழில்நுட்ப பாதிப்புகள்
சிறிய காரியத்தை பெரிதுபடுத்தி
நமக்கு நாமே காவல்
உண்மை நிலை
எண்ணங்களால் நோய்கள்
Copyright © 2018 Amudam Monthly Magazine