தொடர்புடைய கட்டுரை


மஞ்சள்

அக்ரி சுரேஷ்

22nd Sep 2018

A   A   A

குர்க்குமா லாங்கா (Curcuma longa) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட மஞ்சளின் தாயகம் ஆசிய கண்டம் ஆகும். இந்தியாவில் பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும் மஞ்சள் (TURMERIC) சிறப்பிடம் வகிக்கிறது. இந்துக்களின் மத்தியில் மஞ்சள் புனிதப் பொருளாக கருதப்படுகிறது. சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்பட்டாலும் மருந்துகள் தயாரிக்கும் பொருள்களில் துணைப் பொருளாக சேர்க்கப்படுகிறது. மஞ்சளை மசாலா பொருள்களின் ராணி என அழைக்கின்றனர்.

100 கிராம் மஞ்சள் தூளில் உள்ள சத்துக்களாவன… கார்போஹைட்ரேட் – 64.9 கிராம், கொழுப்பு – 9.8 கிராம், புரதம் – 7.8 கிராம், சோடியம் – 38 மில்லிகிராம், பொட்டாசியம் – 2525 மில்லிகிராம், வைட்டமின் B6 – 1.8 மில்லிகிராம், வைட்டமின் C – 23.9 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. மஞ்சளில் குர்க்குமின் (Curcumin) என்ற பாலிபினாலிக் வேதியியல் பொருள் அடங்கியுள்ளது. இப்பொருள் எதிர் ஆக்ஸிகரணியாகவும் எதிர் தொற்றாகவும் செயல்படுகிறது. குர்க்குமின் வேதியியல் பொருள் மூளை சம்பத்தமான மறதி நோய் மற்றும் மன அழுத்த பிரச்சனைகளை போக்கும் ஆற்றல் உள்ளது எனவும், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளது எனவும் சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
  2. மஞ்சள் சிறந்த கிருமிநாசினியாக செயல்புரிவதால் முகத்தில் ஏற்படும் மாசு மருக்களை நீக்கி முகத்திற்கு அழகு சேர்க்கிறது. மேலும் அனைத்து அழகு சாதன பொருள்களிலும் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. மஞ்சளானது தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக செயல்புரிந்து ரோமங்களின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
  3. ஆயுர்வேத மருத்துவத்தில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மஞ்சளுடன் நெல்லிக்காய் பொடியையும் சேர்த்து கொடுக்கப்படுகிறது.
  4. மஞ்சளை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசிப்பதன் மூலம் மூக்கடைப்பு நீங்கும். சளியை போக்க மஞ்சளை பயன்படுத்தும் வழக்கம் கிராமபுரங்களில் மக்களால் பின்பற்றப்படுகிறது. கட்டிகளில் மஞ்சளை அரைத்து பத்து போடும் வழக்கம் இன்றளவும் பின்பற்றப்படுகிறது.
  5. மஞ்சளில் பொட்டாசியம் சத்து மிகுந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது.

 


மே 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.