தொடர்புடைய கட்டுரை


ஜாதிக்காய்

அக்ரி சுரேஷ்

17th Sep 2018

A   A   A

மிரிஸ்டிக்கா ப்ரகரன்ஸ் (Myristica fragrans) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட ஜாதிக்காயின் தாயகம் இந்தோனேசியா ஆகும். ஜாதிக்காய் (Nutmeg) மரமாக வளரும் இயல்புடையது. ஜாதிக்காய் மரமானது நட்டு நான்கு வருடம் கழித்து மகசூல் கொடுக்கிறது. ஜாதிக்காய் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, நீலகிரி, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது. ஜாதிக்காய் விதையை சுற்றி காணப்படும் சிவப்பு நிற பூ போன்ற பாகம் ஜாதிபத்திரி என அழைக்கப்படுகிறது. ஜாதிக்காய் விதை, மருந்து தயாரிப்பிற்கும் ஜாதிப்பத்திரி சமையலிலும் சேர்க்கப்படுகிறது. ஜாதிக்காயை விட ஜாதிப்பத்திரியில் தான் சத்துக்கள் நிறைந்துள்ளன.

நூறு கிராம் ஜாதிக்காயில் அடங்கியுள்ள சத்துக்களாவன… கார்போஹைட்ரேட் – 49 கிராம், புரதம் – 5.8 கிராம், கொழுப்பு – 36 கிராம், நார்ச்சத்து – 21 கிராம், கால்சியம் – 184 மில்லிகிராம், பொட்டாசியம் – 350 மில்லிகிராம், இரும்பு – 3 மில்லிகிராம், மக்னிசியம் – 183 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 213 மில்லிகிராம், வைட்டமின் C – 3 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. ஜாதிக்காய் எண்ணெயில் உள்ள யூஜினால் (Eugenol) என்ற வேதிப்பொருள் பல் சொத்தைக்கு காரணமான பாக்டிரியாக்களை அழிக்கும் திறன் உள்ளதால் டூத்பெஸ்டில் சேர்க்கப்படுகிறது.
  2. ஜாதிக்காய் பொடி வயிறு சார்ந்த பிரச்சனைகளான வயிற்றுப்போக்கு, செரிமானமின்மை, வயிற்று உப்புசம் ஆகியவைகளை தீர்க்க வல்லது.
  3. ஜாதிக்காய் தூக்கத்தை தூண்டும் பொருளாக செயல்பட்டு தூக்கமில்லாதவர்களுக்கு அருமருந்தாக செயல்புரிகிறது.
  4. மூளை ஆரோக்கியத்திற்கு ஜாதிக்காயில் அடங்கியுள்ள மிரிஸ்டிசின் (Myristicin) எண்ணெய் செயல்புரிகிறது. மேலும் ஜாதிக்காய் எண்ணெய் எலும்புகளின் இணைப்புகளில் ஏற்படும் வலிகளை போக்கவல்லது.
  5. ஜாதிக்காயில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மக்னிசியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகள் நிறைந்து உள்ளதால், எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும், இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இருதய ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது.
  6. முகப்பருக்களை கட்டுப்படுத்தும் திறன் ஜாதிக்காயில் உள்ளதால் பாலில் கலந்து உபயோகப்படுத்தப்படுகிறது.
  7. ஜாதிக்காயிலிருந்து பெறப்படும் மேசின் என்ற வேதிப்பொருள் மருந்து பொருள்களிலும் வாசனைத் திரவியங்களிலும், முகப்பூச்சு களிம்புகளிலும், வாய் கொப்பளிக்கும் கரைசல்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

 


ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.