தொடர்புடைய கட்டுரை


காராமணி

அக்ரி சுரேஷ்

20th Jun 2018

A   A   A

விக்னா அன்குய்குலேட்டா (Vigna unguiculta) என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட காராமணியின் தாயகம் ஆப்பிரிக்கா ஆகும். இதனை தட்டைப்பயறு எனவும் அழைப்பர். இது வெண்மை மற்றும் செந்நிறத்திலும் இருக்கும். காராமணி பயறுமணி பயறுக்காகவும் மட்டுமல்லாமல் காய்கறியாகவும் பயன்படுத்தப்படுகிறது. காராமணி தனி பயிராகவும் கலப்பு பயிராகவும் பயிரிடப்படுகிறது.

நூறு கிராம் காராமணியில் அடங்கியுள்ள சத்துக்களாவன... கார்போஹைட்ரேட் - 20.3 கிராம், புரதம் - 8.1 கிராம், கொழுப்பு - 0.7 கிராம், கால்சியம் - 26 மில்லிகிராம், மக்னிசியம் - 96 மில்லிகிராம், பாஸ்பரஸ் - 142 மில்லிகிராம், பொட்டாசியம் - 375 மில்லிகிராம், வைட்டமின் சி - 0.4 மில்லிகிராம், போலேட் - 142 மைக்ரோகிராம், துத்தநாகம் - 1.8 மில்லிகிராம் ஆகியவை ஆகும்.

பயன்கள்:

1) காராமணியில் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்து உள்ளதால் உடலில் உள்ள புற்றுநோய் செல்களை அழித்துவிடும் ஆற்றல் உள்ளது.

2) காராமணியில் லிக்னின் என்ற வேதிப்பொருள் நிறைந்து இருப்பதால் பக்கவாதம், இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும் உணவாக திகழ்கிறது.

3) காராமணியில் நிறைந்து உள்ள துத்தநாகம் தாது உப்பானது உடலில் லெப்டின் என்ற இயக்குநீரை சுரக்க செய்து இரத்தத்தில் கலந்து, மூளைக்கு சாப்பிட்டது போதும் என்ற சமிக்ஞையை அனுப்பி பசிக்காமல் இருக்க செய்யும் செயலை செய்வதால் உடல் எடையை அதிகரிக்காமல் இருக்க காராமணி உணவு பரிந்துரைக்கப்படுகிறது.

4) குறைந்த கிளைசமிக் இன்டெக்ஸ் உணவு வகைகளில் காராமணி அடங்கியிருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது.

5) காராமணியில் வைட்டமின்களும் நிறைந்து உள்ளதால் முடி ஆரோக்கியத்திற்கும், இருதய ஆரோக்கியத்திற்கும், தோல்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

6) காராமணியில் உள்ள பைட்டோஸ்டிராஸ் என்ற வேதிப்பொருள்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொழுப்புகளை வெளியேற்றும் செயலை செய்கிறது.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.