தொடர்புடைய கட்டுரை


நெஞ்சுவலி இயற்கை தீர்வு

Dr.V. செல்வராஜ்

24th Jun 2019

A   A   A

நவீன மருத்துவ வசதிகள் வருவதற்கு முன்பு மக்களுக்கு வருகின்ற நோய்களுக்கான சிகிச்சையின்றி ஏராளமானோர் இறந்து போயுள்ளார்கள். எடுத்துக்காட்டாக காலரா நோய் பல இடங்களில் ஏற்பட்டு ஏராளமான மக்கள் இறந்ததால் பல கிராமங்களே பாதிப்புக்குள்ளானது. ஏன் இந்த நோய்? ஏன் வருகிறது? என்பதற்கான காரணம் அறியாத நிலை அன்று காணப்பட்டது.

அதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு இந்த மாதிரியான நோய்கள் ஏன் வருகின்றன. இவற்றை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று அறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் நீரினால் வருகின்ற நோய்கள். இன்று மிக அதிக அளவில் குறைந்துள்ளது.

அதுபோன்று போலியோவுக்கு மருந்து கொடுக்கப்பட்டு சிறு குழந்தைகளின் உடல் உறுப்புகள் பாதிக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு ஒழிக்கப்பட்டுள்ளது.

முற்காலத்தில் நெஞ்சுவலியால் யாராவது இறக்க நேரிட்டால் எப்படி இறந்தார் என்று தெரியாததால் பேய் அடித்து இறந்தார் என்ற மூட நம்பிக்கை கூட இருந்திருக்கிறது. ஆனால் இன்று நெஞ்சுவலி என்பது எப்படி வருகிறது? ஏன் வருகிறது என்ற தெரிவு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. நெஞ்சுவலியால் இறப்பவர்கள் இன்றைய சூழலில் அதிகமாகி உள்ளார்கள்.

காரணம் உணவு பழக்க வழக்கங்கள், அவசரமான உலகியல் வாழ்க்கை முறைகள் மனிதர்களை இயந்திர மயமாக்கி விட்டிருக்கின்றது. இதன் விளைவாக ஏராளமான நோய்களும் மனிதர்களை விரட்டி விரட்டி வதைக்கிறது.

அண்மைக்காலத்தில் ஆண் பெண் வேறுபாடின்றி மாரடைப்பு அனைவருக்கும் ஏற்பட்டு வருகிறது. பெண்களைக் காட்டிலும் ஆண்களுக்கே அதிகமாக மாரடைப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாரடைப்புக்கு பல காரணங்கள் இருந்தாலும் சில காரணங்களே முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

மாரடைப்பு என்பது இரத்தக்குழாய்களிலும் இதயத்தினுள்ளும் சுற்றி வரும் இரத்தம். அழுத்தத்தின் காரணமாக குழாய் வெடித்து இரத்த ஓட்ட மண்டலத்திலிருந்து இரத்தம் வெளியேறி பிற மண்டலங்களுடன் கலந்து உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதே மாரடைப்பு எனப்படுகிறது.

மார்புப் பகுதியில் தான் இரத்தக்குழாய்கள் வெடிக்கும் என்பது இல்லை. உடலில் எங்கு வேண்டுமானாலும் இரத்தக் குழாய்கள் வெடிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மூளையிலோ, மார்புப் பகுதியிலோ, இதயத்தினுள்ளோ வெடிப்பு உண்டாகுமானால் உயிருக்கு அதிக ஆபத்து நேரிட வாய்ப்பு உண்டு என்கிறார்கள்.

உடலில் எந்த இடத்தில் இரத்தக்குழாய்கள் பலவீனமாக உள்ளதோ அங்கு குழாய்கள் வெடித்து இரத்தம் வெளியேறும்.  உடலில் ஒரு மண்டலத்தினுள் இருக்கும் பொருள் இன்னொரு மண்டலத்திற்கு போனாலேயே சிரமத்தை ஏற்படுத்தும். இரத்த ஓட்ட மண்டலத்திலிருந்து இரத்தம் சிதறி உடலின் பிற பாகங்களுக்கு சென்றால் உயிருக்கும் உடலுக்கும் ஆபத்து ஏற்படுத்துகின்றது.

நாம் உண்ணும் உணவானது உணவுக்குடலுக்குள் போக வேண்டும். மாறாக அந்த உணவுப் பொருளானது மூச்சுக்குழலுக்குள் போனால் தும்மல் ஏற்படுத்துகிறது.

கழிவு உறுப்புகளினால் உப்பு பிரித்தெடுக்கப்படாமல் போவதால் உடலில் உப்பு வியாதியை கொண்டுவந்து உடல், கை, கால், முகம் ஆகியவை வீங்கும். எனவே ஒரு மண்டலம் செய்யும் வேலையில் பிற மண்டலம் தலையீடு செய்தாலோ, உடலுக்கும் உயிருக்கும் தொல்லைதான் ஏற்படும்.

இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் என்ற கொழுப்பு சக்தி மற்றும் இரத்தத்தில் அதிக சர்க்கரை போன்றவை, இரத்தக் குழாய்களின் சுவர்களில் படிந்து விடுவதால் குழாய்களின் குறுக்களவு குறைக்கப்படுகிறது. இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து இரத்தம் ஒரே சீராக ஓட முடியாமல், வேகமாக ஓட தூண்டப்படுகிறது.

அப்போது இரத்தக்குழாய்களில் சில இடங்களில் கொலஸ்ட்ரால் போன்றவை அடைக்கப்பட்டு விடுவதால் இரத்த ஓட்டமானது தடைபட்டு இரத்தக் குழாய்களில் வெடிப்பு உண்டாகி வலியுடன் இரத்தக்கசிவு ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மூளையினுள் உள்ள இரத்தக்குழாய்களில் வெடிப்பு உண்டானால் உடனடியாக உயிரைத் தாக்குகிறது. பக்கவாத நோயும் ஏற்படுகிறது. இதயமே பாதிக்கப்படும் போது உடனடியாக உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. பிறபாகங்களில் இதுபோல் இரத்தக்கசிவு ஏற்படும்போது ஓரளவுக்கு மருத்துவர்கள் மருத்துவ ரீதியாக போராடி நோயாளியை காப்பாற்றிவிட முடிகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

மனிதர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் உடலிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் போய் அமர்ந்து உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தமும் நெஞ்சுவலி வருவதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

மாரடைப்பு என்பதை எப்படி அறிவது என்றால், மாரடைப்புக்கு முன்பு தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி எடுத்தல், ஒரு சிலருக்கு உடனேயே சிறுநீர் அல்லது மலத்துடன் கழிவுகள் வெளியேறிவிடுகிறது. மார்பின் இதயப்பகுதியில் வலி, இடது தோள்பட்டையில் வலி அல்லது குடைச்சல், இடது கையில் வலி அல்லது மரத்துப் போதல், கழுத்துப் பகுதியில் இடது புறமோ அல்லது பின்பகுதியில் வலி ஏற்படுதல், ஒரு சிலருக்கு கால் பகுதியில் குடைச்சல் போன்ற வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் தோன்றும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

மருத்துவ பரிசோதனை ஈ சி ஜி, த்ரெட்மில் டெஸ்ட் நவீன ஆன்ஜியோகிராம், இன்னும் பல அதிநவீன டெஸ்ட்கள் மூலம் துல்லியமாக மாரடைப்பை அறியலாம். மேலும் ஆன்ஜியோ ஸ்கேன் டெஸ்ட் எனவும் சொல்கிறார்கள்.

சில உடற்பயிற்சிகள் நாள்தோறும் செய்து வரவேண்டும். அதற்காக அதிக உடலுழைப்பு கூடாது. உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் புகைப்பழக்கம், மதுபானங்கள் அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களை நிறுத்திவிட வேண்டும். மன உளைச்சல், கோபம், பயம், அதிர்ச்சி, போன்றவை உண்டாகாமல் இருக்க தினமும் 20 நிமிடங்கள் தியானம் செய்து வரவேண்டும். முக்கியமாக டென்சன் (மன அழுத்தம்) ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவில் இறைச்சி, முட்டை, பால் மற்றும் கொழுப்பு பொருட்கள் உண்பதை தவிர்க்க வேண்டும். வயிறு நிரம்ப உண்ணாமல் பசிக்கேற்றவாறு உண்ணவேண்டும். பச்சைக்கீரை வகைகள், பச்சைக் காய்கறிகள், பழவகைகள் இவற்றை உணவில் அதிக அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.

இறைச்சி, கிழங்கு வகைகள், பிஸ்கட், நெய், எண்ணெய் வகைகள், மாவு போன்ற பொருட்கள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும். வாரத்திற்கு ஒரு நாள் ஒரு வேளை மட்டும் உண்ணா விரதம் இருந்தால் மிகவும் நல்லது. தண்ணீர் அதிக அளவு அருந்தலாம். அடிக்கடி காபி, டீ போன்றவற்றை குடிப்பதை தவிர்த்து, வெண்ணெய் எடுத்த மோர் சாப்பிடலாம். தினமும் முத்திய வேப்பிலை, துளசி இலை ஆகியவற்றை 10 இலைகள் சாப்பிட்டு வரலாம்.

முற்றிய வேப்பிலை 50 கிராம், துளசி இலை 50 கிராம், வில்வ இலை 50 கிராம், வெந்தயத் தூள் 100 கிராம், சீரகம் 10 கிராம், அருகம்புல் பொடி 50 கிராம் ஆகியவற்றை பொடி செய்து கலந்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டி அளவு 100 மிலி அளவு தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து கஷாயம் வைத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர மாரடைப்பு நோய் முற்றிலும் விலகும். யோகா பயிற்சிகள் செய்ய உடலின் மூளைப்பகுதிக்கு நல்ல இரத்த ஓட்டம் செல்ல, இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளும் நீங்கும்.

எனவே மாரடைப்பு ஏற்படாமல் இருக்க எளிமையான உணவு பழக்கங்களையும், நல்ல உடற்பயிற்சியும் செய்து வந்தால், கொழுப்புப் பொருட்கள் இரத்தக் குழாய்களில் படிவதை தவிர்க்க முடியும் என்பதை உணர்ந்து கொள்வோம். மன அழுத்தத்திலிருந்தும் விடுபடுவோம். நலமான வாழ்வு நம் பழக்க வழக்கங்களை சார்ந்தே உள்ளன என்பதை உணர்வோம்.

 நவம்பர் 2018 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை
Error
Whoops, looks like something went wrong.