தொடர்புடைய கட்டுரை


சீரகம்

அக்ரி சுரேஷ்

15th Oct 2019

A   A   A

குமைனம் சைமைனம் (Cuminum cyminum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட சீரகமானது எகிப்திய நாகரிக காலத்தில் கண்டெடுக்க பட்டது. உள் உறுப்புகளின் சீரற்ற தன்மையை சரி செய்வதால் இதற்கு சீர் அகம் = சீரகம் என்று பெயர் வந்தது. சீரகம் (CUMIN) சமையலில் மணம் சேர்க்கும் பொருளாக பண்டைய காலத்திலிருந்தே இருந்து வருகிறது. இதில் பொன்சத்து இருப்பதாக சித்தர்கள் கூறியுள்ளனர். மேலும் சீரகம் என்ற வார்த்தையானது பைபிளில் இடம்பெற்றுள்ளது. இதன் செடி 45 செ.மி உயரம் வரை வளரக்கூடியது. இதன் இலைகள் நீட்டமாக இருக்கும். வெண்மையான சிறிய பூக்களை சீரகம் கொண்டிருக்கும்.

நூறு கிராம் சீரகத்தில் அடங்கியுள்ள சத்துக்களாவன. கார்போஹைட்ரேட் - 44.2 கிராம், புரதம் - 17.7 கிராம், கொழுப்பு சத்து - 23.4 கிராம், பொட்டாசியம் - 1788 மில்லிகிராம், சோடியம் - 168 மில்லிகிராம், இரும்புச்சத்து - 66 மில்லிகிராம், கால்சியம் - 931 மில்லிகிராம், மக்னிசியம் - 930 மில்லிகிராம், வைட்டமின் C - 7.7 மில்லிகிராம், வைட்டமின் E - 3.3 மில்லிகிராம், வைட்டமின் B3 - 4.6 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

1. சீரகத்தில் உள்ள தைமால் என்ற வேதிப்பொருளானது ஜீரணத்திற்கு தேவையான நொதிகளை சுரக்கச் செய்கிறது. இந்த நொதிகள் சீரண உறுப்புகளை தூண்டி அதன் வேலையை செய்ய வைக்கிறது. இதனால் வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், மயக்கம், வாந்தி போன்றவைகள் வரவிடாமல் தடுக்கிறது.

2. சீரகத்தில் உள்ள குயினால்டிஹைடு என்ற வேதிப்பொருள் வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளை தூண்டி உணவு செரிமானத்திற்கு துணைபுரிகிறது. மேலும் சீரகத்தில் உள்ள குயின் என்ற எண்ணெய் பொருளானது உடலில் புண்களை ஆற்றக்கூடிய வல்லமை பெற்றது.

3. சீரகத்தில் உள்ள நார்ச்சத்தானது மூலவியாதியின் தாக்கத்தை குறைக்க வல்லது.

4. சீரகத்தில் வட்டமின் C மற்றும் இரும்பு சத்து நிறைந்து உள்ளதால் நோய் எதிர்ப்பாற்றலை உடலுக்கு வழங்கி தொற்று நோய்களுக்கு எதிராக போராட வைக்கிறது. இதில் உள்ள இரும்புச்சத்தானது இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

5. உடலில் உள்ள சூட்டை தணிக்கும் பொருளாகவும் நரம்பு பலத்திற்கும் உடல் அசதி தீர்வதற்கும் சீரகம் பெரிதும் உதவுகிறது.

6. கல்லீரல் பிரச்சனைகளுக்கு கீழாநெல்லியுடன் சீரகத்தை அரைத்து எலுமிச்சை சாறில் சேர்த்து பருகுவதால் கல்லீரல் நோயை குணமாக்கும் எனவும், திராட்சை சாறில் சீரகத்தை சேர்த்து குடிப்பதால் இரத்த அழுத்தம் குறையும் எனவும், தினமும் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொண்டால் பித்தம் சம்பந்தமான நோய்கள் தீரும் எனவும், சீரக தண்ணீர் குடிப்பதன் மூலம் அஜீரணம் குணமாகும் எனவும் இயற்கை மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

7. பசியை தூண்டிவிடக் கூடிய சக்தியாக சீரகம் இருப்பதால் ஆயுர்வேத, சித்த மருந்துகளில் துணைப்பொருளாக முக்கிய இடம் பெறுகிறது.

 


2016 டிசம்பர் அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை
Error
Whoops, looks like something went wrong.