தொடர்புடைய கட்டுரை


வால்நட் (அக்ரூட்)

அக்ரி சுரேஷ்

21st Aug 2018

A   A   A

ஜல்கான்ஸ் ரிஜியா என தாவரவியல் பெயரால் அழைக்கப்படும் இப்பருப்பு வால்நட் என்றும் அக்ரூட் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இமயமலை பகுதிகளில் இம்மரம் இயற்கையாகவே வளர்கிறது. மனித மூளையைப் போன்று காணப்படும் வால்நட் பருப்பு உலகளவில் சீனாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. வால்நட் மரத்தின் காய் கனிந்த பிறகு அதன் கொட்டையிலிருந்து இப்பருப்பு எடுக்கப்படுகிறது. பிற பருப்பு வகைகளை ஒப்பிடும்போது வால்நட் பருப்பில்தான் சத்துக்கள் அனைத்தும் மிகுதியாக காணப்படுகிறது.

நூறு கிராம் வால்நட்டில் அடங்கியுள்ள சத்துக்கள்… கார்போஹைட்ரேட் – 13.7 கிராம், புரதம் – 15.2 கிராம், கொழுப்பு – 65.2 கிராம், நார்ச்சத்து – 6.7 கிராம், வைட்டமின் சி – 1.3 கிராம், வைட்டமின் ஈ – 20.8 மில்லிகிராம், நியாசின் – 1.1 மில்லிகிராம், பொட்டாசியம் – 441 மில்லிகிராம், கால்சியம் – 98 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 346 மில்லிகிராம், மெக்னீசியம் – 158 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. வால்நட் பருப்பில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் மற்றும் அர்ஜினைன் 1 என்ற அமினோ அமிலமும் அடங்கியுள்ளது. இவ்வமிலங்கள் இரத்தத்தில் நல்ல கொழுப்பின் (HDL) அளவை அதிகரித்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. மேலும், இரத்த அழுத்தத்தின் அளவை சீர் செய்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
  2. இப்பருப்பில் எதிர் ஆக்ஸிகரணிகள் (antioxidents) நிறைந்து உள்ளதால் நோய் எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தி புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. மேலும், மூளையின் நரம்புகளை வலுப்படுத்தி ஞாபகசக்தி மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது. அல்செமியர்ஸ் நோயுடன் தொடர்புடைய இரத்த உறைதல் கட்டிகளை கரைக்கும் ஆற்றலையும் வால்நட்டில் உள்ள வேதிப்பொருள்கள் கொண்டுள்ளன.
  3. வைட்டமின் ஈ வால்நட் பருப்பில் நிறைந்து உள்ளதால் தோல் ஆரோக்கியத்துக்கு வால்நட் எண்ணெயாக பயன்படுத்தும்போது அதிக பலனை அளிக்கிறது.
  4. வால்நட்ஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைக்கு சமமான புரதங்களை உடலுக்கு வழங்குகிறது. மற்றும் பாஸ்பரஸ், கால்சியம் சத்து மிகுந்து உள்ளதால் எலும்புகளின் வலிமைக்கு உறுதுணையாக உதவுகிறது.
  5. வால்நட் சர்க்கரை நோயாளிகளின், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதிலும் துணை புரிகிறது.

 


ஆகஸ்ட் 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.