தொடர்புடைய கட்டுரை


பச்சை தேங்காய் (Raw Coconut)

அக்ரி சுரேஷ்

19th Jun 2018

A   A   A

தேங்காயின் தாவரவியல் பெயர் காக்கஸ் நியூசிபேரா ஆகும். கற்பக தரு என்று அழைக்கப்படும் தேங்காயின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயனுள்ளதாக உள்ளன. தேங்காய் தென்னை மரத்தின் கனியாக கருதப்படுகிறது. தென்னை மரம் உப்பு நீரிலும் வளரும் இயல்புடையது. பிலிப்பைன்ஸ் நாடு தேங்காய் உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

நூறு கிராம் தேங்காயில் அடங்கியுள்ள சத்துக்களாவன. கார்போஹைட்ரேட் – 15 கிராம், புரதம் – 3.3 கிராம், சோடியம் – 20 மில்லிகிராம், கால்சியம் – 14 மில்லிகிராம், மெக்னீசியம் – 32 மில்லிகிராம், இரும்பு – 2 மில்லிகிராம், மாங்கனீஸ் – 1.5 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 113 மில்லிகிராம், பொட்டாசியம் – 356 மில்லிகிராம், வைட்டமின் C – 3.3 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. தேங்காயிலிருந்து எடுக்கப்படும் தேங்காய் பால் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்று புண்களுக்கு மிகவும் சிறந்தது. மேலும் தேங்காயில் உள்ள லாரிக் ஆசிட் மற்றும் காப்ரிக் ஆசிட் ஆகியவை வைரஸ், பூஞ்சை மற்றும் பாக்டீரியா நுண்கிருமிகளை எதிர்க்கும் திறன் உடையது.
  2. முத்திய தேங்காயில் உள்ள வைட்டமின் சி முதுமையை தடுத்திடும். மேலும் தைராய்டு சுரப்பியின் செயல்பாடுகளை ஊக்கப்படுத்துகிறது.
  3. தேங்காயில் உள்ள மெக்னீசிய சத்தானது நரம்பு செல்லுக்கு வலுவூட்டியாகவும், மாங்கனீஸ் சத்து சர்க்கரை நோய் தடுப்பானாகவும், பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தத்தை சீராக வைப்பதற்கும் உதவி புரிகின்றது.
  4. தேங்காயில் உள்ள நார்ச்சத்தானது இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்தியும், உணவானது குளுக்கோஸாக மாறும் நிலையை தாமதப்படுத்துவதன் மூலம் சர்க்கரை நோயிலிருந்து காக்கிறது.
  5. தேங்காயில் கொழுப்புகள் இருந்தாலும் உடலில் குறைந்த அடர்த்தி கொழுப்பின் (LDL) அளவை கட்டுப்படுத்துவதில் பெரிதும் துணைபுரிகிறது.
  6. தேங்காயில் உள்ள பாஸ்ப  ரஸ் கால்சியம் சத்தானது எலும்புகளின் உறுதிக்கு உறுதுணையாக இருக்கிறது.

 


டிசம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.