தொடர்புடைய கட்டுரை


கசகசா

அக்ரி சுரேஷ்

25th Sep 2018

A   A   A

பாப்பாவர் சாம்னிபேரம் (Papaver Somniferum) என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட கசகசா (POPPY SEED) பயிரானது தென்மேற்கு ஆசியா பகுதியில் பயிரிடப்பட்டு பின்னர் உலகம் முழுவதும் பரவியது. கசகசா என்பது கசகசா செடியின் காய் முதிர்ந்த பிறகு விதைப்பையில் இருக்கும் விதைதான். கசகசா விதைப்பை முதிராமல் பசுமை நிறத்தில் இருக்கும்போது அவ்விதைப்பையை கீறி அதிலிருந்து வழிகிற பாலை சேகரித்தால் கிடைக்கும் பொருள் ஓபியம் என அழைக்கப்படுகிறது. ஓபியம் போதைப்பொருளாக இருப்பதால் கசகசா பயிர் சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது. கசகசா சுவைக்காக அசைவ உணவுகளிலும், கேக் வகைகளிலும் சேர்க்கப்படுகிறது.

நூறு கிராம் கசகசாவில் அடங்கியுள்ள சத்துக்களாவன… கார்போஹைட்ரேட் – 28 கிராம், புரதம் – 18 கிராம், கொழுப்பு – 41.5 கிராம், நார்ச்சத்து – 19.5 கிராம், பொட்டாசியம் – 719 மில்லிகிராம், கால்சியம் – 1438 மில்லிகிராம், மக்னீசியம் – 347 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 870 மில்லிகிராம், வைட்டமின் E – 1-7 மில்லிகிராம், தயமின் – 0.85 மில்லிகிராம், நியாசின் – 0.89 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. கசகசா விதையில் ஒலியிக் மற்றும் லினோலிக் கொழுப்பு அமிலங்கள் அடங்கியுள்ளன. இவை இரத்தத்தில் குறைந்த அடர்த்தி கொழுப்பை குறைத்தும் (LDL) அதிக அடர்த்தி கொழுப்பின் (HDL) அளவை அதிகரித்து இதய ஆரோக்கியத்திற்கு வழி வகை செய்கிறது.
  2. கசகசா விதையில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் உணவு செரிமானத்துக்கு துணைபுரிந்து மலச்சிக்கலிலிருந்து காக்கிறது.
  3. கசகசா உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தும் குணத்தை கொண்டது.
  4. கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் தாதுபொருள்கள் கசகசாவில் மிகுந்து இருப்பதால் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு துணைபுரிகிறது.
  5. கசகசா விதையில் அல்கலாய்டுகள் காணப்படுவதால் சளி நிவாரண மருந்து மற்றும் வலிநிவாரண மருந்து தயாரிக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
  6. பி-காம்ளக்ஸ், வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் கசகசாவில் நிறைந்து இருப்பதால் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைபுரிகிறது.
  7. கசகசாவினை வேப்பிலை மஞ்சளுடன் அரைத்து அம்மை வந்த தழும்புகளில் தடவுவதன் மூலம் அம்மைதழும்பு மறைந்து விடும் என்றும், வயிற்றுப்போக்கு ஏற்படும்போது கசகசாவை வாயில் போட்டு மெல்லும்போது வயிற்றுபோக்கு குறையும் எனவும் இயற்கை மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.