தொடர்புடைய கட்டுரை


பிஸ்தா (Pista)

அக்ரி சுரேஷ்

13th Aug 2018

A   A   A

பிஸ்தாசிலா வீரா என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட பிஸ்தாவின் தாயகம் மேற்கு ஆசியா ஆகும். பிஸ்தா மரமாக வளரும் இயல்புடையது. பிஸ்தா கொட்டை பிஸ்தா மரத்தில் காணப்படும் பழத்தின் உள்ளே நடுவில் காணப்படுகிறது. பிஸ்தா கொட்டை ஈரான் நாட்டில் பிரபலமான உணவாகும். பிஸ்தா மரத்தின் ஆண்மரம், பெண்மரம் என இரு வகைகள் உள்ளன.

நூறு கிராம் பிஸ்தாவில் அடங்கியுள்ள சத்துக்களாவன… கலோரி மதிப்பு – 557, கார்போஹைட்ரேட் – 28 கிராம், புரதம் – 20 கிராம், கொழுப்பு – 45 கிராம், சோடியம் – 1 மில்லிகிராம், பொட்டாசியம் – 1025 மில்லிகிராம், வைட்டமின் E – 22 மில்லிகிராம், வைட்டமின் B6 – 1.7 மில்லிகிராம், இரும்பு – 4 மில்லிகிராம், கால்சியம் – 107 மில்லிகிராம், தாமிரம் – 1.3 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 376 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்

  1. பிஸ்தா உடலின் (LDL) கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி (HDL) நல்ல கொழுப்பை அதிகரித்து இதய ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கிறது.
  2. பிஸ்தாவில் பாஸ்பரஸ் நிறைந்து உள்ளதால் இன்சுலின் அளவை சமப்படுத்தி டைப் 2 நீரழிவு நோயிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் பிஸ்தாவில் உள்ள பாஸ்பரஸ் புரதத்தை அமினோ அமிலமாக மாற்றி குளுக்கோஸ் தன்மையை கொடுத்து உடலுக்கு வலிமை சேர்க்கிறது.
  3. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் B6 இரத்தத்தில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி ஹீமோகுளோபின் அளவையும் அதிகரிக்க செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  4. பிஸ்தாவில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் E உடலில் ஏற்படும் நீர்கட்டி மற்றும் வீக்கம் போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.
  5. பிஸ்தாவில் சோடியம் அளவு குறைந்து பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளதால் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்துக் கொள்வதில் பொட்டாசியம் சத்து முக்கிய பங்காற்றுகிறது.
  6. பிஸ்தாவில் உள்ள தாமிரசத்து உடலில் இரும்பு சத்து கிரகிக்க உதவுவதில் முக்கிய பங்காற்றுவதுடன் இரத்த சோகையிலிருந்து விடுபட உதவுகிறது. மேலும் நரம்புகளுக்கு வலுவூட்ட தாமிரம் பயன்படுகிறது.
  7. பிஸ்தாவில் எதிர் ஆக்ஸிகரணிகள் நிறைந்து உள்ளதால் நோயை ஏற்படுத்தும் செல்களை எதிர்க்கும் ஆற்றல் நிறைந்துள்ளது. பிஸ்தாவில் உள்ள வேதிப்பொருள்கள் ஆண்மை விருத்தியாகவும் செயல்படுகிறது.

 


அக்டோபர் 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.