தொடர்புடைய கட்டுரை


ஜீரண உறுப்புகளை காக்கும் இயற்கை உணவு

Dr.V. செல்வராஜ்

20th Jun 2018

A   A   A

மனிதனின் உடல் ஒரு வியத்தகு படைப்பு என்பதனை யாரும் மறுக்க இயலாது. உயிர் மூச்சான காற்று நின்றுவிட்டால் மனிதன் என்பவன் இறந்த உடலாக மாறிப்போகிறான். இந்த காற்று இயக்கத்தில் ஒரு பெரிய இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

உடலுக்குத் தேவையான இரத்த ஓட்டம் இதயத்தின் மூலமாக செலுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இந்த இதயமானது சிவந்த பழுப்பு நிறமானது. எடை 340 கிராம் மட்டுமே. சுமார் 15 செ.மீட்டர் நீளமும் 10 செ.மீட்டர் அகலமும் உடையது.

இதயம் இடது மார்புக்குள் உள்ளது. நான்கு அறைகளையுடைய இரத்தத்தை பாய்ச்சக்கூடிய ஒரு இயந்திரம் இது. இரண்டு பம்புகள் போன்றது. ஒன்று நுரையீரலுக்கு இரத்தத்தை அனுப்ப மற்றது அதை உடம்பினுள் பாய்ச்சுவதற்கு நாள்தோறும் 90,000 கிலோமீட்டர் நீளமுள்ள இரத்தக் குழாய்களின் மூலம் இரத்தம் அனுப்பப்படுகிறது. இது 15,100 லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை நிரப்புவதற்கு சமமாகும்.

குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும்போதே இருதயம் துடிக்க ஆரம்பித்து விடுகிறது. பின்பு உயிருள்ள வரையிலும் ஒரு பொழுதும் நிற்காமல் தொடர்ந்து இயங்கிக் கொண்டேயிருக்கிறது. நிமிடத்திற்கு 72 முறை சுருங்கி விரிகிறது. இடைப்பட்ட வினாடியில் பத்தில் மூன்று பங்கு நேரம் ஓய்வெடுக்கிறது. அதுவும் இதயத்தின் பெரிய இடது கீழ் அறை சுருங்கவும் உடம்பினுள் இரத்தத்தை பாய்ச்சுவதற்கும் தான்.

இதயம் துடிக்கும் பொழுதெல்லாம் 6 கன அங்குலம் இரத்தம் உடலுக்குள் செலுத்தப்படுகிறது இரத்தத்தில் கரியமில வாயுவின் அளவுக்கு தகுந்தபடி இதயத்துடிப்பின் வேகம் அமைகிறது. வலது ஆரிக்கிளின் உட்சுவரின் ஒரு பாகம் இரத்தத்தில் கலந்திருக்கும் கரியமில வாயுவை உணரக்கூடியதாக இருக்கிறது.

உடலில் ஏதோ ஒரு பகுதியில் தசைநார்கள் அதிகம் வேலைசெய்து கரியமில வாயு உற்பத்தியானால் 10 வினாடிக்குள் இதயத்தின் மேற்சொன்ன பகுதியைத் தொடுகிறது. இதன் விளைவாக இதயத்தின் வேகம் அதிகப்படுகிறது. வேலை செய்வதை நிறுத்திய உடன் வேகமும் குறைந்து விடுகிறது. இதனை அனுபவத்தில் நாம் உணரலாம். உடல் உணர்ச்சிவசப் பட்டால் இருதயத்துடிப்பு பாதிக்கும்.

மனித இருதயம் உடலின் எடையின் 200 ல் ஒரு பங்கு இருந்தாலும் இருபதில் ஒரு பங்கு இரத்தம் அதன் தேவையாக இருக்கிறது. மனிதர்கள் எடை ஒரு கிலோ கூடினால் இருதயம் 300 கிலோமீட்டர் அதிகம் இரத்தத்தை கூடுதலாக அனுப்ப வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறது. எனவே உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்வது அவசியமாகிறது.

மனித இரத்த அழுத்தம் 140:90 எனில் வேலை செய்யும் பொழுது 140 ஓய்வில் 90 என்பது சரி. தாழ்ந்த எண் எவ்வளவு உயருகிறதோ அந்த அளவு மனித இருதயத்தின் ஓய்வு குறையும்.

இரத்த அழுத்தத்தை குறைக்க கொழுப்பு பொருட்களை உணவில் சேர்க்கக்கூடாது. எடை அதிகப்படாமல் பார்க்கவும், சிகரெட், மது போன்றவைகளை அறவே நீக்கினால் மனிதர்களுக்கு இரவு பகல் வேலை செய்யும் இதயமும் கஷ்டப்படாமல் நன்கு வேலை செய்யும்.

மனித உடலில் 1,12,000 கிலோமீட்டர் நீளமுள்ள போக்குவரத்து மண்டலத்தை கொண்டுள்ளது. மனித இரத்தத்திலிருந்து 60,000 கோடி செல்கள் சுத்தப்பொருட்களைப் பெற்று அசுத்தப் பொருட்களை அனுப்பவும், எப்பொழுதும் உள்ள வாடிக்கையாளர்கள். ஒவ்வொரு வினாடியிலும் 120 நாள்கள் பணிபுரிந்து 12 லட்சம் சிவப்பணுக்கள் மடிகிறது.

அதே வினாடியில் மனித விலா எலும்புகள், கபாலம், முதுகெலும்பு மஜ்ஜை அதே எண்ணிக்கையில் புது சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. 120 நாட்களில் ஒவ்வொரு சிவப்பு அணுவும் இருதயத்திலிருந்து புறப்பட்டு உடலை 75,000 தடவை சுற்றி வருகிறது.

இரத்தம் உடலின் கடைசி நுனி வரைக்கும் இருதயத்தால் பம்ப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து தானே திரும்புவதில்லை. தசைகள் அழுத்தம் கொடுத்து இதயத்துக்கு அனுப்பி வைக்கிறது. அதனால் தான் நடப்பது உடல் நலத்திற்கு நல்லது என்று சொல்லப்படுகிறது.

நாம் குடிக்கும் நீர் பொருள் முழுவதையும் இரத்தம் உருவம் கெட்டியாகாமல் இருக்க பயன்படுத்துகிறது. மீதியை வியர்வை அல்லது சிறுநீரின் வழியாக வெளியேற்றுகிறது.

மனித இரத்தம் கொலஸ்டிரால், சர்க்கரை, உப்பு, என்சைம்ஸ், வைட்டமின்கள், ஹார்மோன்கள், அமிலப் பொருட்கள் முதலியவைகளை வெவ்வேறு வாடிக்கையாளர்களுக்கு அதாவது உறுப்புகளுக்கு சுமந்து செல்கிறது.

பிராண வாயுவையும், உணவையும் உள்ளாட்சி அமைப்புகள் தண்ணீர் வழங்குவது போல வழங்குகின்றன. இரத்தம் இருதயத்தினால் பம்ப் செய்யப்பட்டு தமனிகள் வழியாக உந்தப்பட்டு மேலும் சிறிதாகி தந்துகிகளில் பாய்கிறது. பட்டுபோன்ற சிலந்தி வலைகள் போல் தமினிகள், சிரைகளையும் இணைக்கிறது.

தந்துகிகள் மிகச் சிறியவை. ஆதலால் இரத்த சிவப்பு அணுக்கள் ஒன்றன்பின் ஒன்றாய் சென்று, கொண்டுவந்ததை சரக்கு வண்டியைப்போல் கொட்டுகிறது. அதன்பின் கரியமில வாயு ஏற்றப்படுகிறது.

மனிதர்கள் உறங்கும்போது உணவுத் தேவை குறைவதால் 60% தந்துகிகள் மூடிக் கொள்கின்றன. காயம் முதலியன ஏற்பட்டால் அந்த இடத்தில் தற்காலிக ஒட்டுப் போட பைபிரின் என்ற தசை பொருளை உற்பத்தி செய்து அனுப்புகிறது. ஆக எப்பொழுதும் இருப்பதில்லை தேவைப்படும் பொழுது மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

காயத்தின் வழியாக வெளியிலிருந்து பாக்டிரியாக்கள் நுழைய விடாமல் வெள்ளை அணுக்கள் என்ற பெரிய படையை அனுப்பி பாதுகாக்கிறது.

அதிக கொழுப்பு பொருட்கள் மனித இரத்த ஓட்ட கால்வாயை தடை கற்கள் போல இருந்து படிந்து கெடுதல் செய்கிறது. எனவே அளவான இயற்கை உணவை உட்கொண்டு ஆரோக்கியத்தை பேணுவது மிகவும் முக்கியமானதாகும்.

இதயத்தைச் சுற்றி பாதுகாப்பாக பெலிகார்டியம் என்ற பகுதி உள்ளது. இது இதயத்தை பாதுகாக்கிறது. இதயத்திற்கு அதிர்ச்சி, உணர்ச்சிவசப் படுவதால் ஏற்படும் மன அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கிறது. தாங்க முடியாத பெரிய அதிர்ச்சிகள் ஏற்படுகின்றபோது பெரிக்கார்டியம் செயல்பட முடியாதபடி ஆகிவிடுவதால் மனிதர்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிப்புக்குள்ளாக நேரிடுகிறது.

பெரிகார்டியம் மெரிடியன் தினமும் இரண்டு மணிநேரம் அதிகமாக வேலை செய்கிறது. இருதய நோயாளிகள் இந்த நேரத்தில் தியானம் செய்தால் பலன் பெறலாம்.

மொத்தத்தில் உடல் உறுப்புகள் நன்கு செயல்பட்டால் உடல் நலத்துடன் வாழலாம். உடல் உறுப்புகளை நன்கு இயங்கச் செய்வதற்கு உடற்பயிற்சிகள், தியான முறைகள், யோகாசனங்கள் தேவைப்படுகிறது. இதனை தினமும் வாழ்வில் கடைபிடிப்பது நல்லது. உடல் நலம் பேணிடும்போது நோய்கள் நம்மை அண்டாது உடல் நலத்துடன் வாழலாம்.

 


மார்ச் 2016 அமுதம் இதழில் வெளியானது. . .

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.