தொடர்புடைய கட்டுரை


ஐஸ் வாட்டரும், பானைத்தண்ணீரும்..

சிதம்பரம் ரவிச்சந்திரன்

20th Jul 2018

A   A   A

வெய்யில்காலங்களில் இப்போதெல்லாம் ஐஸ் வாட்டர் எனப்படும் செயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை அருந்துவது என்பது ஒரு நாகரீகமாகவே ஆகிவிட்டதுமுன்பெல்லாம் இயற்கையான முறையில் நாம் பிறந்த மண்ணில் இருந்து உருவாக்கப்பட்ட பானைகளை வாங்கி அதனடியில் ஆற்றுமணலை கொட்டிவைத்து அதன் மேல் பானையை வைத்து அதில் கொஞ்சம் வெட்டிவேரையும் போட்டுவடித்து அதனுள் ஊற்றிவைக்கும் ஆற்றுநீர் நம் தாகத்தை என்றும் தணிப்பதாக இருந்ததுஆனால் இன்று ஐஸ் வாட்டர் என்ற பெயரில் நாம் அருந்தும் குளிர்ந்த நீர் முற்றிலும் நம் உடல்நலத்துக்கு உகந்தது கிடையாது என்று மருத்துவ அறிஞர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு செயற்கையாக குளிர்விக்கப்பட்ட நீரை குடிப்பதால் இன்று மிக அதிகமாக கேஸ்ட்இன்டெஸ்டைனல் குறைபாடுகள் எனப்படும் வயிறு குடல் சம்பந்தமான நோய்கள் வருவதற்கு காரணமாக அமைகின்றது. உணவை சாப்பிடுவதற்கு முன்பே நம்மில் பலரும் ஐஸ்வாட்டர் குடிப்பதை ஒரு வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்நல்ல கொழுப்பு நிறைந்த ஏதாவது உணவை உண்டபின் நாம் ஐஸவாட்டரை கை கழுவ பயன்படுத்துகிறோம். அதேபோல இதமான சூட்டில் இருக்கும் வெந்நீரையும் கை கழுவ பயன்படுத்துகிறோம் என்று வைத்துகொள்ளலாம்ஐஸ்வாட்டரை கைகளில் ஊற்றி கைகளை கழுவும்போது அது நம் கைகளை சுத்தப்படுத்துவதற்கு பதிலாக அசுத்தங்களை அதிகரிக்கசெய்கிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆனால், அதேநேரம் சுடுநீரை பயன்படுத்தும்போது நம்முடைய கைகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்புகளும் நீக்கப்படுகின்றன

சில இடங்களில் கை கழுவும் இடங்களில் எலுமிச்சை சாறைகூட பயன்படுத்துகிறார்கள். நாம் எப்போதும் கண்களுக்கும், நாக்குக்கும் பார்ப்பதற்கு கவர்ச்சியாகவும் ருசியாகவும் இருக்கும் உணவு வகைகளுக்கு மட்டுமே முக்கியதுவம் கொடுக்கிறோம். அதனால் இன்று அதிகமாக வாழ்க்கை முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் வருகின்றன

இந்த நிலை இப்படியே நீடித்துக்கொண்டுபோனால் இன்னும் பத்து இருபது வருடங்களில் சமூகமே நோய்வாய்ப்பட்ட ஒரு கூட்டமாக மாறிவிடும். குறிப்பாக இளம் தலைமுறையினர் தாங்கள் உடுத்தும் உடைகளுக்கும், செய்துகொள்ளும் அலங்காரங்களுக்கும், பயணம் செய்யும் வாகனங்களுக்கும் கொடுக்கும் முக்கியதுவத்தை கஷ்டப்பட்டு கண்விழித்து சம்பாதிக்கும் காசில் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் உணவுக்கும், அருந்தும் நீருக்கும் கொடுப்பது இல்லைஇதில் வயதானவர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டுஅவர்கள் மனது வைத்தால் இளம்வயதினரை கண்டிப்பாக மனமாற்றம் அடையசெய்ய முடியும்

சாப்பிடுவதற்கு முன் சாப்பாட்டுமேசையில் வந்து அமரும்போது பரிமாறப்பட்டுள்ள உணவுவகைகளை பார்த்தவுடன் அந்த உணவுகள் எல்லாம் நாம் சாப்பிடும் நேரத்திற்கு செரிமானம் ஆகுமா, எவ்வாறு, எந்த நேரத்தில், எதையெல்லாம் நம் உடலும், உள்ளமும் நலமாக இருக்க சாப்பிடவேண்டும் என்று ஒரு நிமிடம் சிந்தித்து பார்த்துவிட்டு பிறகுதான் சாப்பாட்டு தட்டில் கை வைக்கவேண்டும்

முன்பெல்லாம் உணவு எடுத்துக்கொள்வது என்பது ஒரு நாளில் மூன்று வேளையாக தான் இருந்ததுஅதற்கும் முன்பு கடுமையான உடல் உழைப்பு செய்த நம் முதியவர்கள் எல்லோரும் காலையில் எழுந்தவுடன் நீராகாரத்தை அருந்திவிட்டு பின் நண்பகல் வாக்கில் ஒரு வேளை மட்டுமே அரிசி சோறு உணவு சாப்பிட்டுவந்தார்கள். ஆங்கிலேயர்கள் வந்ததற்கு பின்தான் நமக்கு காபியும், டீயும் குடிக்கும் பழக்கம் ஏற்பட்டதுசூரியன் மறைவதற்கு முன்பே அன்று இரவு உணவு முடிந்துவிடும். அதுவே ஆயுர்வேத அறிவியலின்படி சரியான உணவுமுறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதுசில காலத்துக்கு முன்புவரை மூன்று வேளை உணவு என்றிருந்தது தற்போது முற்றிலுமாக மாறிவிட்டது.

இப்போது நான்குவேளையும், ஆறுவேளையும் உணவு எடுத்துகொள்கிறார்கள். இதில் யாருக்கும் எந்தவித ஆச்சரியமும் ஏற்படுவது இல்லைஆயுர்வேதத்தின்படி சூரியன் உதிப்பதற்கு 97 நிமிடங்களுக்கு முன்பாக நாம் எழுந்து காலை கடன்களை முடிக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால் இன்று, காலை ஆறு மணிக்கு எழுந்திருப்பதுகூட ஒரு அசிங்கமாக கருதப்படுகிற அளவுக்கு போலி நாகரிகம் வளர்ந்து விட்டது, உடலையும், மனதையும் பாழாக்கும் கலாச்சாரம் பெருகிவருகிறது. இத்தகைய பழக்கவழக்கங்கள் மாற வேண்டும். பசிக்கும்போது மட்டுமே ஆகாரம் சாப்பிடவேண்டும்நேரங்காலத்தை பார்க்ககூடாது. கண்ட கண்ட நேரங்களிலும், எந்த காரணமும் இல்லாமலும் கண்டதையும் சாப்பிடும் வழக்கத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும். நாம் சாப்பிடுவதில் இரண்டு முக்கிய நோக்கங்கள் இருக்கின்றன

ஒன்று பசியை போக்குவதற்காக சாப்பிடுவதுமற்றொன்று நாக்குக்கு ருசியாக இருக்கும் என்பதற்காக ஆசைப்பட்டு சாப்பிடுவது. பசியை போக்குவதற்காக சாப்பிட்டால் மூன்று தோசைகள் சாப்பிடுவோம்பசி ஆறியவுடன் உடனே நம் மனதில் ஆசை ஏற்படுகிறது. நான்காவதாக கொண்டுவரப்படும் தோசையின் ருசியையும், அதற்கு தொட்டுக்கொள்ள வைக்கப்படும் சட்னி, சாம்பாரையும், இன்னும் விதவிதமான வகை உணவு துணைப்பொருள்களையும், அவற்றின் வண்ணமயமான நிறங்களையும் பார்க்கும்போது நான்காவதாக இன்னுமொரு தோசையையும் சாப்பிட நமக்குள் ஆசை பொங்கி எழுகிறதுஇதை தவிர்த்துக்கொள்ள நாம் பழகவேண்டும்

பசி ஏற்படும்போது பசியை ஆற்றுவதற்காக மட்டுமே ஆகாரம் சாப்பிட வேண்டும். ஆசைக்காகவும், சுவைக்காகவும், பார்ப்பதற்கு அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்கிறது என்பதற்காகவும் சாப்பிடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இயந்திரமயமாக உணவு உண்பதை நிறுத்திகொள்ள வேண்டும்சாப்பிடும்போது சாப்பாட்டோடு ஐஸ்வாட்டரை குடிக்கும் வழக்கத்தை நிறுத்தவேண்டும்லேசான வெந்நீரை குடிப்பது நாம் சாப்பிட்டது செரிப்பதற்கு உதவும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், அதிகநேரம் குளிர்சாதனப் பெட்டிகளில் வைக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை காய்கறிகளையும், பழங்களையும் உணவில் சேர்க்க பழகிக்கொள்ள வேண்டும்

சாப்பிடும்போது எந்தவிதமான கோபதாபங்களோடும், சண்டை சச்சரவுகளோடும் சாப்பிடாமல் இருக்கவேண்டும். முழுவதுமாக சாப்பிடும் சாப்பாட்டில் கவனம் செலுத்தி இறைவனுக்கும், உணவை அளித்த இயற்கைக்கும், அந்த உணவுக்கு பின்னால் அதை நம் சாப்பாட்டுமேசைக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் பாடுபட்ட விவசாயிகள் முதல் எல்லோரையும் மனதில் ஒரு நிமிடம் நன்றியோடு நினைத்து, சாப்பிட தொடங்குவோம். நோய்நொடியில்லாமல் நீடோடி வாழ்வோம்..

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.