தொடர்புடைய கட்டுரை


முந்திரிக்கொட்டை (Cashew nut)

அக்ரி சுரேஷ்

16th Aug 2018

A   A   A

அனகார்டியம் ஆக்ஸிடென்டேலே என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட முந்திரிகொட்டையின் தாயகம் பிரேசில் நாடு ஆகும். முந்திரிக்கொட்டை வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வளர்க்கப்படுகிறது. முந்திரி கொட்டையின் ஓடுகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் தொழிற்சாலைகளில் மூலப்பொருளாக பயன்படுகிறது.  உலகளவில் அதிகம் பயன்படுத்தப்படும் கொட்டை வகை உணவு முந்திரிக்கொட்டை ஆகும்.

நூறு கிராம் முந்திரிக்கொட்டையில் அடங்கியுள்ள சத்துக்களாவன.. கார்போஹைட்ரேட் – 30.19 கிராம், கொழுப்பு – 43.85 கிராம், புரதம் – 18.22 கிராம், வைட்டமின் B3 – 1.062 மில்லிகிராம், வைட்டமின் B1 – 0.423 மில்லிகிராம், கால்சியம் – 37 மில்லிகிராம், தாமிரம் – 22 மில்லிகிராம், இரும்பு – 6.6 மில்லிகிராம், மக்னிசியம் – 292 மில்லிகிராம், பொட்டாசியம் – 660 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. முந்திரிக்கொட்டையில் உள்ள வேதிப்பொருட்கள் இரத்தத்தில் உள்ள LDL கொழுப்பின் அளவை குறைத்து HDL கொழுப்பின் அளவை அதிகரிக்கும் தன்மையுடையதால் இருதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
  2. முந்திரிக்கொட்டையில் தாமிரச்சத்து நிறைந்து இருப்பதால் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதில் முக்கிய பங்கு வகித்து, இரும்பு பற்றாக்குறை உடலில் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
  3. முந்திரிக்கொட்டையில் சியா சாந்தின் (Zea Xanthin) என்ற எதிர் ஆக்ஸிகரணி நிறமி நிறைந்திருப்பதால் இந்நிறமி கண்களை புற ஊதா கதிர்களின் பாதிப்பிலிருந்து காத்து கண்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.
  4. முந்திரிக்கொட்டையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயில் செலினியம் சத்து நிறைந்து உள்ளது. செலினிய சத்து தோல் ஆரோக்கியத்திற்கும், புற்றுநோய் வராமல் தடுப்பதற்கும் உதவிபுரிகிறது.
  5. முந்திரிக்கொட்டையில் உள்ள மக்னிசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதற்கும் பொட்டாசியம் சத்து இருதய ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கிறது.
  6. முந்திரிக்கொட்டையில் வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருப்பதால் அளவோடு உணவில் எடுத்துக்கொள்வதன் மூலம் முழுப்பலனையும் அடையலாம்.

 


செப்டம்பர் 2017 அமுதம் இதழில் வெளியானது... 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.