தொடர்புடைய கட்டுரை


ஏலக்காய்

அக்ரி சுரேஷ்

23rd Aug 2018

A   A   A

எலெட்டாரியா கார்டமம் என்னும் தாவரவியல் பெயரைக் கொண்ட ஏலக்காயின் தாயகம் இந்தியா ஆகும். உலகிலேயே மெக்ஸிகோவில் உள்ள குடமுலா பகுதியில் ஏலக்காய் அதிக அளவு உற்பத்தி செய்யப்படுகிறது.  ஏலக்காய், இஞ்சி செடி குடும்பத்தை சேர்ந்தது. ஏலக்காயில் பச்சை மற்றும் அடர் பழுப்பு நிறத்தில் இரு வகைகள் உள்ளன. ஏலக்காய் நறுமணப்பொருளாகவும் சுவையூட்டியாகவும் உணவு பொருட்களில் சேர்க்கப்படுகிறது. நறுமணப் பொருட்களின் ராணி என ஏலக்காய் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா மாநிலத்தில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.

நூறு கிராம் ஏலக்காயில் அடங்கியுள்ள சத்துக்கள் … கார்போஹைட்ரேட் – 3.9 கிராம், புரதம் – 0.6 கிராம், கொழுப்பு – 0.4 கிராம், வைட்டமின் C – 1.2 மில்லிகிராம், கால்சியம் – 22 மில்லிகிராம், மெக்னிசியம் – 13 மில்லிகிராம், பாஸ்பரஸ் – 10.2 மில்லிகிராம், பொட்டாசியம் – 64 மில்லிகிராம், நார்ச்சத்து – 28 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

  1. செரிமான கோளாறு பிரச்சனைகளுக்கு ஏலக்காயுடன் ஓமம், சீரகம் சேர்த்து எடுத்துக்கொள்வதன் மூலம் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.
  2. ஏலக்காயை வாயிலிட்டு சுவைப்பதன் மூலம் சிகரெட்டில் உள்ள ‘நிக்கோடின்’ நஞ்சினால் வாயில் ஏற்படும் புண்களையும் மற்றும் பல் கறைகளையும் போக்கவல்லது.
  3. தொண்டை சார்ந்த பிரச்சனைகளுக்கு ஏலக்காய் அருமருந்தாக செயல்புரிகிறது.
  4. வாயு, பித்தம், கபம் ஆகிய 3 தோஷங்களை சமப்படுத்தும் ஆற்றல் ஏலக்காயில் உள்ளது என ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உடலில் வெப்பத்தை அதிகப்படுத்தாமல் ஏலக்காய் செயல்புரிகிறது.
  5. மன அழுத்தம் உள்ளவர்கள் ஏலக்காய் அதிகம் சேர்த்து டீ குடிப்பதன் மூலம் மனதிற்கு புத்துணர்வு ஏற்பட்டு இயல்பு நிலைக்கு வருகின்றனர் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
  6. வாய் துர்நாற்றத்தை போக்குவதற்கும், சிறுநீர் எரிச்சலை குணமாக்குவதற்கும், விக்கலை கட்டுப்படுத்துவதற்கும் ஏலக்காயில் உள்ள வேதிப்பொருட்கள் செயல்புரிந்து உதவிபுரிகிறது.

 


ஜூலை 2017 அமுதம் இதழில் வெளியானது… 

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.