தொடர்புடைய கட்டுரை


பிரிஞ்சி இலை

அக்ரி சுரேஷ்

16th Oct 2018

A   A   A

      லாரஸ் நோபிலிஸ் என்ற தாவரவியல் பெயரைக் கொண்ட பிரிஞ்சி இலைத் தாவரம் (Bay Leaf) ஆசிய மைனர் பகுதியை தாயகமாகக் கொண்டது. இத்தாவரம் மரமாக வளரக்கூடியது. இதன் இலைகள் உணவிற்கு மணமூட்டியாகவும் சுவையூட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கரம் மசாலா போன்ற பொடிகளில் இந்த இலைகளின் பொடி சேர்க்கப்படுகிறது.

      நூறு கிராம் இந்த இலையில் அடங்கியுள்ள சத்துக்களாவன.. கார்போஹைட்ரேட் - 75 கிராம், புரதம் - 7.6 கிராம், நார்ச்சத்து - 26 கிராம், கொழுப்பு - 8.4 கிராம், கால்சியம் - 834 மில்லிகிராம், பொட்டாசியம் - 529 மில்லிகிராம், இரும்பு - 43 மில்லிகிராம், மக்னிசியம் - 120 மில்லிகிராம், மாங்கனீஸ் - 8.2 மில்லிகிராம் ஆகியன ஆகும்.

பயன்கள்:

1) பிரிஞ்சி இலையினை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் செரிமானத்திற்கு உதவிபுரிந்து, வயிற்று பிரச்சனைகள் வராமல் உடலை பாதுகாக்கிறது.

2) பிரிஞ்சி இலையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெயை நெஞ்சு பகுதியில் தடவுவதன் மூலம் சளி, இருமல் தாக்கத்தை குறைக்கிறது.

3) இதன் இலையின் எண்ணெயில் பார்த்தினோலாய்ட் என்ற தாவரச்சத்து அடங்கியுள்ளதால் இவை எதிர்தொற்றாக செயல்பட்டு மூட்டு இணைவு திசுக்களில் ஏற்படும் வலிகளை குணமாக்கி நிவாரணியாக செயல்படுகிறது. மேலும், இதில் அடங்கியுள்ள காபியிக் அமிலம், ரூட்டீன் போன்ற தாவரச்சத்துக்கள் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

4) பிரிஞ்சி இலையில் அடங்கியுள்ள வேதிப்பொருட்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை கட்டுப்படுத்தும் செயலையும் செய்கிறது. மேலும் இன்சுலின் சுரப்பை ஒழுங்குப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது.

5) இதன் இலையில் அடங்கியுள்ள Linalool என்ற வேதியியல் பொருள் மன அழுத்தத்திற்கு காரணமாக உள்ள ஹார்மோனை கட்டுப்படுத்தும் செயலைச் செய்கிறது. இதன் இலையினை எரித்து புகையினை சுவாசித்தால் மன அழுத்தம், பதற்றம் சீராகும் என ரஷ்ய நாட்டு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

6) இதன் இலைகளை மென்று துப்புவதன் மூலம் வாய் துர்நாற்றத்தை சரி செய்யலாம்.

 


மார்ச் 2017 அமுதம் இதழில் வெளியானது..

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.