தொடர்புடைய கட்டுரை


கலப்படம் தண்ணீர்

அக்ரி சுரேஷ்

30th Mar 2019

A   A   A

நாம் அருந்தும் தண்ணீர் சுகாதாரமாயிருந்தால் தான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். தண்ணீர் மூலம் அதிகமான வியாதிகள் பரவுகின்றன. தண்ணீர் தட்டுப்பாட்டின் காரணமாக தற்போது பாட்டிலில் அடைத்து வைத்த தண்ணீரை குடிக்கும் பழக்கம் பெருகிவருகிறது.

சமீபத்திய ஆய்வு முடிவில் தமிழ்நாடு, கலப்படம் செய்யப்பட்ட தண்ணீரை பயன்படுத்துவதில் இந்தியாவிலேயே இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. நிலத்தடி நீரை பயன்படுத்தி பெரும்பாலான நிறுவனங்கள் மினரல் தண்ணீர் தயாரிக்கின்றன. மினரல் தண்ணீர் என விற்கும் தண்ணீரில் மினரல் அளவு குறைவாகவே காணப்படுகிறது. பலவித சுத்திகரிப்புகளுக்கு பிறகு மினரல் முற்றிலும் நீக்கப்படுவதே இதற்கு காரணம். வெளிநாட்டு தரச்சான்றுபடி குறைந்தபட்சம் தண்ணீரில் உப்புகள் இருக்கு வேண்டும் என கூறப்படுகிறது.

ஆனால், இந்திய தரச்சான்று படி அதிகபட்சம் தண்ணீரில் உப்புகள் (1500 mg / lit. TDS) இருக்க வேண்டும் என்ற வார்த்தை மட்டுமே உள்ளது. தண்ணீரை சோதனை செய்யும் தரச்சான்று ஆய்வு கூடங்கள் இந்தியாவில் குறைவாகவே காணப்படுகிறது. அதிலும் தண்ணீரில் ரேடியோ ஆக்டிவ் (Radio active) கலப்படங்களை கண்டறியும் வசதி 3 ஆய்வுகூடங்களில் மட்டும்தான் உள்ளது. ரேடியோ ஆக்டிவ் கலப்படம் உள்ள தண்ணீரை குடிக்கும்போது புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பாட்டிலில் அடைத்து வைத்து விற்கப்படும் தண்ணீரில் பூச்சிக்கொல்லி வீழ்படிவு, புரோமைட் இரசாயனம் இருந்ததாக 2015 ஆம் ஆண்டு நடந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சில போலி நிறுவனங்கள் தண்ணீரை கேன்களில் அடைத்து விற்று வருகின்றன. இவ்வகை தண்ணீரில் பாக்டீரியாக்களின் அளவு அதிகமாக காணப்படுகிறது. சில நிறுவனங்கள் தண்ணீரை இயந்திரங்கள் மூலம் நிரப்பாமல் மனிதர்களை வைத்து நிரப்பி விற்கின்றன. இதனால் சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகிறது.

தண்ணீர் பாட்டில் கேன்களை சூரிய ஒளியில் அதிக நேரம் வைக்கும்போது வெப்பத்தினால் கேன்களில் உள்ள பிளாஸ்டிக் வேதிவினை அடைந்து தண்ணீரில் கலக்கும் சூழ்நிலை உருவாகி நோய்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. மேலும் இவ்வகை கேன்களில் கண்ணுக்கு புலப்படாத பாசிகள் வளர்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் தண்ணீர் குடிப்பதற்கு நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக வரைமுறைக்கு அதிகமாக இனிப்புகளை சேர்க்கின்றனர்.

சில நிறுவனங்கள் நிலத்தடி நீரை சுத்திகரித்து விற்கும்போது அதில் கடினமான உலோகங்கள் (Heavy metals) இருப்பதை சோதனை செய்து உறுதி படுத்தாமல் விற்கின்றனர். இவ்வகை தண்ணீர் மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும். தண்ணீர் பாட்டிலோ அல்லது கேனோ வாங்கும்போது 1SI, FSSAI, ISI தர முத்திரைகள் உள்ளதா என பார்த்து வாங்கினால் ஆரோக்கியம் நமக்கு உறுதி செய்யப்படுகின்றன.

 


2018 ஜூன் மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.