தொடர்புடைய கட்டுரை


உணவில் கலப்படம் - மசாலா

அக்ரி சுரேஷ்

19th Jan 2019

A   A   A

உணவு பொருள்களில் நாம் பயன்படுத்தும் மசாலா பொருள்களில் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது. பலவிதமான நோய்கள் நாம் உண்ணும் உணவின் காரணமாகத்தான் வருகின்றன. மசாலா பொருள்களில் கலப்படம் செய்யப்படுவதும் அதனை கண்டறிவது எப்படி என்பதையும் பார்ப்போம்.

1. மிளகு: நல்லமிளகில் பப்பாளி விதை கலப்படம் செய்யப்படுகிறது. இதனை கண்டறிய ஒரு கப் தண்ணீரில் மிளகை போடும்போது மிளகு உள்ளே சென்றால் அவை தரமானவை என்றும் மேலே மிதந்தால் அவை போலியானவை என்பதையும் அறியலாம்.

2. பெருங்காயம்: பொதுவாக பெருங்காய பௌடருடன் அரிசி மாவு மற்றும் அககேசிய மரத்தின் பிசின் சேர்க்கப்படுகிறது. சுத்தமான பெருங்காயத்தை நீரில் கரைத்தால் பால் போன்ற கரைசலும் வாசனையும் கிடைக்கும். அப்படி இல்லாவிட்டால் அது கலப்படம் செய்யப்பட்டது என அறியலாம்.

3. மிளகாய் தூள்: மிளகாய்த் தூளுடன் செங்கல் பொடி கலக்கப்படுகிறது. மற்றும் காய்ந்த மிளகாய் காம்புகளை அரைத்து சிவப்பு நிறம் ஏற்படுத்த ரெட் ஆரபஞ்ச் என்ற இரசாயனப் பொருள் சேர்க்கப்படுகிறது. தண்ணீரில் சிறிது மிளகாய்தூளை கலக்கும்போது அதில் செங்கல் தூள் கலந்திருந்தால் நீரின் அடியில் தங்கும். இரசாயனம் கலந்திருந்தால் நீரில் அதிக நிறத்தை உண்டாக்கும்.

4. மஞ்சள் தூள்: மஞ்சள் தூளுடன் கலப்படத்தை ஏற்படுத்த நன்றாக அரைத்த அரிசி மாவுடன் லெட் குரொமேட் என்ற இரசாயன பொருள் கலந்து மஞ்சள் தூள் என விற்கப்படுகிறது. மஞ்சள் பொடியை நீரில் கலக்கும்போது உடனடியாக மஞ்சள் கலர் வந்து இருந்தால் கலப்பட மஞ்சள் தூள் என அறியலாம். டெஸ்டியூபில் அரை ஸ்பூன் மஞ்சள் எடுத்துக்கொண்டு. அதில் 3 மில்லி ஆல்கஹாலுடன் 10 துளி ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை கலந்து குலுக்கும்போது வயலெட் நிறம் வந்தால் லெட் குரோமேட் கலந்திருப்பதை உறுதி செய்யலாம்.

5. கடுகு: கடுகில் கசகசாவகையை சேர்ந்த அர்ஜிமோன் விதைகள் கேழ்வரகு விதைகள் கலப்படம் செய்யப்படுகிறது. தரமான கடுகை கைகளில் வைத்து தேய்த்துப் பார்த்தால் அதன் உட்புறம் மஞ்சளாக இருக்கும். மற்றவகை வெள்ளையாக தென்படும். மேலும் அர்ஜிமோன் விதைகள் தூய கறுப்பு நிறத்தில் காணப்படும்.

6. பட்டை : பட்டைகளில் கேசியா மரத்தின் பட்டைகளை கலப்பட பொருளாக சேர்க்கின்றனர். கேசியா பட்டையில் நிறம் சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பட்டைகளை கசக்கிப் பார்த்தால் கைகளில் எந்த நிறமும் ஒட்டாமல் வாசனையாக இருந்தால் தரமானவை என்பதை அறியலாம்.

மல்லித்தூளில் கலப்படம் செய்ய மரத்தூளை பவுடராக்கி அதனுடன் வாசனை ஏற்படுத்த மானிய விலை மல்லித்தூளை கலக்கின்றனர். மற்றும் மட்டன் மசாலா, சிக்கன் மசாலா போன்ற தூள்களில் தரமற்ற பொருள்களை தூளாக்கி கலப்படம் செய்கின்றனர். மசாலா பொருள்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்படி 100 பிபிஎம் காரத்தன்மை இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் மசாலா தூள்களில் அதிகம் காரத்தன்மை உள்ள பொருள்கள் சேர்க்கப்படுகிறது. சீரகத்தில் காய்ந்த புற்களின் விதைகளை வாசனை சேர்த்து கலப்படம் செய்யப்படுகிறது.

 


பெப்ரவரி 2018 அமுதம் இதழில் வெளியானது...

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.