தொடர்புடைய கட்டுரை


கலப்படம் – பழங்கள்

அக்ரி சுரேஷ்

11th Mar 2019

A   A   A

பழங்களை பழுக்க வைப்பதற்கு கார்பைடு, பாஸ்பரஸ் போன்ற வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக சாப்பிடும் மனிதர்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. பழங்கள் பிரஷ்சாக இருக்கவும், நீர்ச்சத்து வற்றாமல் இருக்கவும் சிலவகை இரசாயனங்கள் ஏற்றப்படுகின்றன.

குறிப்பாக ஆப்பிள் பிரஷ்சாக இருப்பதற்கும், அடிபடாமல் இருப்பதற்கும் மெழுகு பூச்சு செய்யப்படுகிறது. திராட்சை அழுகாமல் இருப்பதற்கு திராட்சைத் தோட்டத்தில் இருக்கும்போதே இரசாயன கலவை நனைக்கப்படுகிறது. தர்பூசணி சிவப்பு வண்ணமாக இருப்பதற்கு சிவப்பு சாயம் ஊசி மூலம் ஏற்றப்படுகிறது. ஆரஞ்சு நீர்சத்து குறையாமல் இருப்பதற்கு நீர் ஊசியேற்றம் செய்யப்படுகிறது.

பழங்களிலிருந்து எடுக்கப்படும் பழச்சாறுகளில் கிருமி தொற்று ஏற்படாமல் இருப்பதற்கு இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.

பழச்சாறுகளுக்கு பதிலாக வெறுமனே பழங்களைப் போல் உள்ள செயற்கை சுவையூட்டிகளை கொண்ட சர்க்கரை கலவைகள் பழச்சாறு சந்தையில் விற்கப்படுகிறது. ஃபிரெஷ் ஜூஸ்கள் பேக்கிங் செய்யப்படும்போது பூச்சிக்கொல்லி சேர்க்கப்படுகிறது என தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகள் உணவு தொற்றுகளை குறைத்தாலும் எவ்வகையில் தயாரிக்கப்படுகிறதோ அதற்கேற்றார்போல் சேமித்து வைப்பது நல்லது. குளிர் அழுத்த முறையில் தயாரிக்கப்பட்ட பழச்சாறுகளை, பழச்சாறு தயாரிப்பிற்கு பிறகு குறைந்த வெப்பநிலையில் சேமிக்க வேண்டும். இல்லையேல் கிருமிதொற்று ஏற்படும். எனவே பேக்கிங் லேபிளை பார்த்து வாங்க வேண்டும்.

பழச்சாறு வாங்கும்போது நூறு சதவிகிதம் அவை சர்க்கரை சேர்க்கப்படாத தூய்மையான பழச்சாறுகள் இருக்குமாறு தயாரிக்கப்பட்ட ஒன்றை வாங்குவதே நல்லது. மேலும் பழச்சாறு பாட்டிலில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறமூட்டிகளின் அளவு, காலாவதி காலம், சுவையூட்டிகளின் அளவு, நியூட்ரிசனல் மதிப்புகள், சர்க்கரை அளவு ஆகியவற்றை வாசித்து அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களில் ஒட்டப்பட்டிருக்கும் லேபிளில் இருக்கும் எண்களை வைத்து அடையாளப்படுத்தும் முறை வெளிநாடுகளில் பின்பற்றப்படுகிறது. 4 இலக்க எண்கள் ஒட்டப்பட்டிருந்தால் இயற்கையாக விளைவிக்கப்பட்டது என்றும் 4க்கு மேல் ஒரு எண் கூடுதலாக இருந்தால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்டது என அறியலாம்.

மேற்கண்ட விபரங்களை அறிந்து நாம் பழமோ, பழச்சாறோ வாங்கி உண்டால் நோயற்ற வாழ்வு வாழலாம்.

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.