இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்
கண்டுபிடிப்புகளால் சாதனைபுரியும் சரவண முத்து
டாக்டர் சுனிதி சாலமன்
பழங்குடியினரின், மகாஸ்வேதா தேவி
சிகரம் தொட்டு சாதித்த பெண்…
முதல் பெண் புகைப்பட நிருபர்
நம்பிக்’கை’ யால் விமானம் ஓட்டும் ஜெசிகா காக்ஸ்
இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதுவர்
மாற்றுத்திறனாளர்களை, மாண்புறச் செய்தவர்
17th Sep 2018
இந்திய அயல்நாட்டுப் பணியில் முதல்முதலில் நியமனம் பெற்ற பெண் சோனிரா பெல்லியப்பா முத்தம்மா. பெண் என்பதற்காக இந்திய அயல்நாட்டுப்பணி (IFS) தேர்வில் தேர்ச்சி பெற்றும் அவருக்கு பணிநியமனம் வழங்கப்படவில்லை. தடைகளை நீதிமன்றம் மூலம் தகர்த்தெறிந்து இந்தியாவின் முதல் அயல்நாட்டுதுறை பணியில் சேர்ந்தார்.
பெண் என்பதால் பணி வாழ்க்கை முழுவதும் பல தடைகளையும் சோதனைகளையும் சந்திக்க வேண்டியிருந்தது. துணிச்சலான நடவடிக்கைகளால் அவருக்குப் பின்னால் அயல்நாட்டுத் தூதுவர் பணிக்கு வந்தப் பெண்களுக்கு வாயில்களை திறந்து வைத்தார்.
சி.பி. முத்தம்மா 1924 ல் கர்நாடகாவில் கொடகு மாவட்டத்தில் (பின்னர் கூர்க் மாவட்டம் என்று மாற்றப்பட்டது) விராஜ் பேட்டில் பிறந்தார். அவரது ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். அவர் வன அதிகாரியாகப் பணியாற்றியவர். தாயாரால் தனிமையில் வளர்க்கப்பட்டார். மடிகேரியில் செயின்ட் ஜோசப்ஸ் மகளிர் பள்ளியில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்து பின்னர் சென்னை மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் தனது கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். மூன்றுமுறை தங்கப்பதக்கம் பெற்று சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார். தொடர்ந்து சென்னை மாகாண கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார்.
1948 ல் மத்திய அரசுப் பணிக்கான UBSC தேர்வு எழுதினார். அத்தேர்வில் வெற்றிப்பெற்று மத்திய அரசு பணிதேர்வில் வெளியுறவுத் துறையில் பணி பெற்ற முதல் பெண்மணி என்ற சிறப்பை பெற்றார்.
இந்திய வெளியுறவுத்துறையில் சேர்ந்து பணிபுரிய விரும்பினார். பெண்கள் அந்த பணிக்கு ஏற்றவர்கள் அல்ல என்று கூறி வேலை மறுக்கப்பட்டது. முத்தம்மா இந்திய அரசு தன்னை வெளியுறவுத்துறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பெண்கள் அந்தப் பணியைச் செய்யத் தகுதியுடையவர் என வாதிட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி பணியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார். இதன்மூலம் இந்தியாவின் முதல் IFS இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதுவர் சி.பி. முத்தம்மா 5 ஜøன் 2017 அதிகாரியானார். அவருக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டது.
பணிகாலத்தில் திருமணம் செய்ய நேர்ந்தால் பதவி விலக வேண்டும் என்ற நிபந்தனையில் அவர் கையெழுத்திட்டிருந்தார். இதனால் திடீரென திருமணம் செய்து கொண்டபோது வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. பின்னர் தளர்த்தப்பட்டது. அதனால் வேலைக்கான அபாயம் நீங்கினாலும் பதவி உயர்வில் தடைகள் ஏற்பட்டது.
உச்சநீதிமன்றத்தில் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். பதவி உயர்வுக்காக பெண்களின் வேலை வாய்ப்பு பாரபட்சமாக உள்ளது என வாதிட்டார். இந்தியாவின் வழக்கறிஞர் ஜெனரல், சோலி சொரபீஜால் இந்த வழக்கில் அரசின் சார்பில் வாதிட்டார். இரகசிய தகவல்கள் கசிய வாய்ப்பு உள்ளது என்பது அவரது வாதமாக இருந்தது. திருமணம் செய்து கொள்வதால் தகவல் கசிவு என்பது ஒரு சாத்தியக்கூறு அல்ல என நீதிபதி கருதினார். இறுதியாக 1979 ஆம் ஆண்டில் நீதிபதி வி.ஆர். கிருஷ்ண அய்யர் அரசாங்கத்தின் வாதத்தை நசுக்கி வெளிநாட்டு சேவை செய்யும் அயலுறவு ஊழியர்களைக் கட்டுப்படுத்தும் பாகுபாடுகளை உடைத்து எறிந்தார். பாலியல் பாகுபாடு எந்த ஒரு பணியிலும் இருக்கக் கூடாது என்பது முத்தம்மாவின் வழக்கால் உறுதி செய்யப்பட்டது.
இந்த தீர்ப்பின் விளைவாக முத்தம்மா ஹங்கேரியில் இந்தியாவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். பின்னர் கானாவிலும் கடைசியில் நெதர்லாந்திலும் இந்திய தூதுவராக இருந்தார்.
32 ஆண்டுகள் முன்மாதிரியான சேவைக்குப் பிறகு 1982 ல் இந்திய அயல்பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.
ஓய்வு பெற்ற பின்னர் முத்தம்மா பல்வேறு துறைகளில் பணிபுரிந்தார். ஸ்வீடன் பிரதம மந்திரி ஒலாஃப் பாம்மால் அமைக்கப்பட்ட ஆயுதக்குறைப்பு மற்றும் பாதுகாப்பு சிக்கல்களுக்கான சுதந்திரக் கமிஷனின் இந்திய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். சிறந்த எழுத்தாளரும் ஆவார். சிஸ்டம் பை தி சிஸ்டம், இந்தியாவின் ரியல் கிரைசிஸ், கோடாவள சமையல்களில் ஒரு சமையல்காரர் என்ற தலைப்பில் நூல்களை எழுதியுள்ளார். பல தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார்.
தடைகளை எதிர்த்து போராடி வெற்றிபெறும் சோனிரா பெல்லியம்மா முத்தம்மா போன்றோர்கள் அரிதாகவே பிறக்கிறார்கள். துணிச்சலாக பாலின பாகுபாடு கொள்கைக்கு எதிராக போரை தனித்து நின்று நடத்தியது வருங்காலத்தில் பெண்கள் அயல்பணியில் ஈடுபட புதிய வழியை திறந்து வைத்தது. அவர்வழியில் பெண்கள் பொதுச்சேவையில் ஈடுபடுவதை சவாலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஜூன் 2017 அமுதம் இதழில் வெளியானது…
இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்
கண்டுபிடிப்புகளால் சாதனைபுரியும் சரவண முத்து
டாக்டர் சுனிதி சாலமன்
பழங்குடியினரின், மகாஸ்வேதா தேவி
சிகரம் தொட்டு சாதித்த பெண்…
முதல் பெண் புகைப்பட நிருபர்
நம்பிக்’கை’ யால் விமானம் ஓட்டும் ஜெசிகா காக்ஸ்
இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதுவர்
மாற்றுத்திறனாளர்களை, மாண்புறச் செய்தவர்
இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்
கண்டுபிடிப்புகளால் சாதனைபுரியும் சரவண முத்து
கண் காணாத உலகில்
டாக்டர் சுனிதி சாலமன்
பழங்குடியினரின், மகாஸ்வேதா தேவி
சிகரம் தொட்டு சாதித்த பெண்…
முதல் பெண் புகைப்பட நிருபர்
நம்பிக்’கை’ யால் விமானம் ஓட்டும் ஜெசிகா காக்ஸ்
இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதுவர்
மாற்றுத்திறனாளர்களை, மாண்புறச் செய்தவர்
இறவா இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா
இந்தியாவின் முதல் பெண் ஏவுகணை விஞ்ஞானி டெஸ்ஸி தாமஸ்
கண்டுபிடிப்புகளால் சாதனைபுரியும் சரவண முத்து
கண் காணாத உலகில்
டாக்டர் சுனிதி சாலமன்
பழங்குடியினரின், மகாஸ்வேதா தேவி
சிகரம் தொட்டு சாதித்த பெண்…
முதல் பெண் புகைப்பட நிருபர்
நம்பிக்’கை’ யால் விமானம் ஓட்டும் ஜெசிகா காக்ஸ்
இந்தியாவின் முதல் பெண் அயல்நாட்டுத் தூதுவர்
மாற்றுத்திறனாளர்களை, மாண்புறச் செய்தவர்
இறவா இசைக் கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா
Copyright © 2018 Amudam Monthly Magazine