கலப்படம் – மாவு

அக்ரி சுரேஷ்

11th Feb 2019

A   A   A

கடந்த பத்து ஆண்டுகளாக இட்லி மாவு தோசை மாவு போன்றவைகளை கடைகளில் வாங்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. கடைகளில் விற்கப்படும் தோசை மாவில் கலப்படம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தோசை மாவில் ஆமணக்கு விதை இட்லி மிருதுவாக இருப்பதற்கும், ஆப்பச்சோடா, ஈஸ்ட் போன்ற பொருட்கள் புளிக்க வைப்பதற்கும் சேர்க்கப்படுகிறது. மாவு அரைக்கும்போது சுகாதாரமற்ற முறையிலுள்ள தண்ணீர் சேர்க்கப்படுகிறது. மேலும் மாவு அரைக்கும் கிரைண்டரை சரிவர கழுவாமல் இருப்பதால் தண்ணீரில் பரவும் நோய்களான வயிற்றுவலி, டைரியா போன்ற நோய்கள் வருகின்றன.

கடைகளில் விற்கப்படும் மாவில் இட்லி அரிசிக்கு பதிலாக ரேஷன் அரிசியும், பச்சரிசியும் சம அளவில் கலந்து அரைத்து விற்கப்படுகிறது. மாவு வெண்மையாக பஞ்சு போல இருப்பதற்கு சுண்ணாம்பு பிளீச்சிங் திரவம் சேர்க்கப்படுகிறது. மாவில் ஆறு நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க, கேரம்போர்ட் விளையாட பயன்படுத்தும் போரிக் அமில மாவு கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

மாவினை குளிர்சாதன பெட்டியில் வைக்கும் பொழுது வெப்பநிலை சரிவர பராமரிப்பு இல்லாத பட்சத்தில் பாக்டீரியாக்களின் தொற்று உருவாக வாய்ப்பு உள்ளது. நீண்ட நாளான விற்காத மாவுடன் புதிதாக அரைத்த மாவு கலந்து விற்கப்படுகிறது. கடைகளில் தரம் குறைந்த அரிசி, உளுந்து போன்றவை மாவு தயாரிப்பவர்களுக்கு கடைக்காரர்களால் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. சுகாதாரமற்ற முறையில் உள்ள மாவில் ஹைட்ரஜன் சல்பைடு தன்மையுள்ள பாக்டீரியாக்கள் இருக்கின்றன என தற்போதைய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாம் சப்பாத்தி செய்ய கடைகளில் வாங்கும் கோதுமை மாவிலும் கலப்படம் செய்யப்படுகிறது. கோதுமை மாவில் மைதா மாவு அதிகமாக சேர்க்கப்படுகிறது. மேலும் கோதுமை மாவில் அரிசி தவிடும் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. கோதுமை மாவை மிருதுவாக மாற்றுவதற்கு அல்லோக்சான் வேதிபொருள் சேர்க்கப்படுகிறது. மேலும் சுவையூட்ட அஜினோமோட்டோ மற்றும் சீனி சேர்க்கப்படுகிறது. மாவு கெடாமல் இருப்பதற்கு பதனப்பொருட்கள் சேர்க்கப்படுகிறது.

 


2018 ஏப்ரல் அமுதம் இதழில் வெளியானது…



Error
Whoops, looks like something went wrong.