ரோம மருத்துவம்

Dr. எட்வின் ஆன்றோ ராஜ்

22nd Oct 2018

A   A   A

ரோமர்கள் பழங்காலம் முதலே பல சரித்திரங்களை உருவாக்கியவர்கள், கூடவே பல சரித்திர நாடுகளையும் சிதைத்தவர்கள், புயபலத்தால் உயர்ந்தவர்கள், புத்தியில்லாததால் தலைகீழாக விழுந்து சிதைந்தவர்கள், ஆனால், இவர்கள் வாழ்ந்த காலங்களில் அறிவியலையும், மருத்துவத்தையும் வளர்க்க முயற்சியெடுத்தனர் என்று சொன்னால் மிகையாகாது.

இவர்களும் பாட்டி வைத்தியம், பேய் மருத்துவம் என வளர்ச்சி பெற்றவர்கள்தான். இவர்களுக்கென்று எந்த சிறப்பு மருத்துவமும் கிடையாது, 600 வருடங்கள் இவர்கள் சரியான மருத்துவ தாக்கம் இல்லாமலே இருந்தனர், பின்நாட்களில் கிரேக்க மருத்துவம் ரோமாபுரியில் மருத்துவ விதை முளைக்க ஆரம்பித்தது, இதற்காக கி.பி. 500-600 யில் ஜுலியஸ்சீஸர், மார்க் ஆண்டனி, நியூரோ போன்ற மாமன்னர்கள் மருத்துவ விதைமுளைக்க நீர் பாய்ச்சினர், இதனால் கிரேக்க மருத்துவ பாரம்பரியம் ரோமாபுரியில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ரோம மருத்துவர்கள் ஆன்மீக சடங்குகளைவிட உடல் நலமடைய இயற்கை வழிபாடுகளை நம்பியிருந்தார்கள், சமூக நல மருத்துவதில் அறிவின்றியிருந்தனர், வருமுன் காப்பதை உதாசினபடுத்தினர், பிற்காலங்களில் கிரேக்கர்களின் மருத்துவ அறிவியல் சிந்தனையை இரவல் வாங்கிக் கொண்டனர்.

ரோமாபுரியில் தோன்றிய முக்கிய மருத்துவர்களில் ஒருவர் கேலன், இவர் கிரேக்க ஞானி ஹிப்போகிரடசின் சீடர். தொழில் ரீதியாக ரோமில் அடைக்கலம் புகுந்தவர், பண்டைய ரோமில் அவரது முக்கியத்துவம் மற்றும் நிபுணத்துவம் காரணமாக கேலன், பேரரசர் மார்கஸ் என்பவரின் தனிப்பட்ட மருத்துவர் ஆனார். 1500 வருடம் இவருடைய தத்துவம் தான் பின்பற்றப்பட்டது. இவருடைய மருத்துவ தத்துவங்களுக்கு எதிராக தோன்றிய கருத்துகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இவர்களுக்கு மருத்துவ கல்வி கற்பதற்காக விரிவான நூலகங்கள் மற்றும் மேம்பட்ட பல்கலைக்கழகங்கள் பிரபலமான அலெக்ஸாண்டிரியா நகரத்தில் இருந்தன. பண்டைய காலங்களில், அலெக்சாண்டிரியா நகரம் கற்றலில் ஒரு முக்கிய மையமாக இருந்தது, மற்றும் அதன் பெரிய நூலகம் பண்டைய கிரேக்க மருத்துவ தகவல்கள் மற்ற்றும் எண்ணற்றம் பிற மருத்துவ தொகுதிகளை கொண்டிருந்தது. (மாவீரன் அலெக்ஸாண்டரால் உருவாக்கபட்ட இந்த நகரம், அவர் மறைவிற்கு பின் ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்தது.)

இவர்களின் சிறப்பம்சம் என்னவென்றால் பொது மருத்துவமனையை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியதுதான். மருத்துவமனைகளில் அடிமைகள் மற்றும் படைவீரர்களுக்கென்று சிறப்புபிரிவுகளை உருவாக்கியிருந்தார்கள். ஏழைகளுக்கு இலவச மருத்துவமும், ஆன்மீக உதவியும் செய்து வந்தனர். பண்டைய ரோம பேரரசில் மருத்துவமனைகள் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் பேரரசர் டிராஜன்னின் ஆட்சியின் காலத்தில் கட்டப்பட்டது.

பறக்கும் இராணுவ முகாம்கள் என அழைக்கப்படும் கூடாரங்கள் காயமடைந்த வீரர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. அது கோட்டைகளில் ஒரு சிறு கூடாரம் போன்று தொடங்கப்பட்டது. காலப்போக்கில், நிரந்தர வசதிகள் உருவாக்கப்பட்டு, நவீனமயமாக்கபட்டது. நவீன மருத்துவமனைகள் விரைவில் ரோமன் கோட்டையின் கட்டமைப்பின் ஒரு பகுதியாக மாறியது. பிற்காலங்களில் முக்கிய தெருக்களின் மைய பகுதியில் மருத்துவமனைகளை கட்ட ஆரம்பித்தனர்.

மருத்துவ கட்டிடக்கலைகளுக்கு இவர்கள் தான் முன்னோடி. ஒரு நிலையான மருத்துவ கட்டிடம் என்றால் அதில் ஒரு பெரிய மண்டபம், வரவேற்பு வார்டு, மருந்தகம், சமையலறை, ஊழியர்கள் ஒய்வறை, சலவை மற்றும் கழிப்பிட வசதிகள் என திட்டமிட்டு கட்டினர். இதனால்தான் இவர்களை நவீன உலகின் மருத்துவ மனைகளின் முற்பிதா என்று அழைக்கிறார்கள்.

ரோமை ஆண்ட மன்னர் சீசர் அறுவை சிகிட்சைசெய்து பிரசவிக்கப்பட்டதால்தான், சிசேரியன் என்ற பெயர் வந்தது. இதனால்தானோ என்னவோ இவர்கள் தாய் சேய் நலத்திற்கு தொடக்க காலம் முதலே முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். அநேக பிரசவ மற்றும் பெண்கள் நோய்கள் பற்றிய புத்தகங்களை வெளிவிடிருந்தனர்.

இந்தியர்களுக்கு அடுத்தபடியாக அறுவை சிகிட்சைக்கான கருவிகளை நவீனமயமாக்கி அறுவைசிகிட்சையில் புத்துணர்ச்சியை உருவாக்கியவர்கள் இந்த ரோமர்கள்தான். இவர்கள்தான் அறுவை மருத்துவத்திற்கு மதிப்பு சேர்த்தவர்கள், பல கருவிகளை (forceps) உருவாக்கியவர்கள் இவர்கள் தான். அவற்றுள் இன்றும் பயன்படுத்த படுபவைதான் Scalpels சில்வர் மற்றும் பிரான்சிலான கூர்முனை கத்திகளை அறுவை சிகிட்சைக்காக உருவாக்கியவர்கள் இவர்கள் தான். பின்னர், Obstetrical Hooks அறுவைசிகிட்சையின் போது இரத்த குழாய்கள் அறுபட்டால், இரத்த குழாயை பற்றிபிடிப்பதற்காக கொக்கிகள் போன்ற கருவியை உருவாக்கினார்கள். (Bone Drills) மற்றும் Bone Forceps எலும்பு துளைப்பான்: கெட்டுப்போன எலுப்பு திசுக்களை எலும்பு பகுதிகளிலிருந்து வெட்டியெடுப்பதற்காக உருவாக்கினார்கள். (Urine Catheters) சிறுநீர் குழாய்களை ஆண் மற்றும் பெண்களுக்கு உருவாக்கியவர்கள் இவர்கள்தான். Uvula (Crushing) Forceps என்ற பற்கள் போன்ற கருவியை பயன்படுத்தி உள்நாக்கு அறுவைசிகிட்சைக்கு வித்திட்டனர். Vaginal Specula போன்ற கருவியை பிறப்புறுப்பு பரிசோதனைக்காக உருவாக்கினார்கள்.

இவ்வறாக மருத்துவத்தை பிறநாட்டிலிருந்து கடன் வாங்கி, தன் நாட்டில் வளர்ந்தவர்கள் தான் இந்த ரோமர்கள். அறுவைசிகிட்சை துறையில் புரட்சியை ஏற்படுத்தி சரித்திரத்தில் அழியா இடம் பிடித்த இவர்கள், நமக்கு வாழ்க்கை மாதிரிகள். இவர்களைப்போலவே புயத்தில் பலமும், மனதில் திடமும், இருக்குமானால், நாமும் சரித்திரமாகலாம். ஆகவே புதிதாய் சிந்திப்போம்- புதிய உலகத்தை காண்போம்.

புதிதாய் சிந்திப்பவர்களும்

பழையவைகளில் புதியதை புகுத்தியவர்களும்

புதைந்து போனதில்லை, இந்த பூமியில்

மாறாக விதைக்க படுகிறார்கள்

மக்களின் மனதினில்..

 


பெப்ரவரி 2017 அமுதம் இதழில் வெளியானது…

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்

ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்



Error
Whoops, looks like something went wrong.