08th Feb 2019
பிரிவு : குறுநாவல்
ஆசிரியர் : சரலூர் த. ஜெகன்
பக்கம் : 120
விலை : ரூபாய் 75
வெளியீடு : ஜெ.இ. பப்ளிக்கேஷன்
இந்நூலின் ஆசிரியர் சரலூர் த. ஜெகன் அவர்களின் மூன்றாவது நூல் இது. இவரது முதல் நூல் “பாதை ஒன்று பாதச்சுவடுகள் 44” என்ற கவிதை தொகுப்பும், ”காக்காச்சி” என்ற நாவலை இரண்டாவதாகவும், அதைத்தொடர்ந்து ”சப்பட்ட” என்ற நாவலைப் படைத்துள்ளார்.
தன் சிறு வயதில் செங்கல் சூளை ஒன்றில் நடந்ததாக தான் கேள்விப்பட்ட உண்மைச் சம்பவம் ஒன்றினை மையமாகக் கொண்டு இக்கதையை எழுதியுள்ளார். இன்றும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பதை சொல்லியிருக்கிறார். மணித்துளிகள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு வித பாதிப்பைக் கொடுத்து, கடந்து செல்கிறது. மனிதன் அதை சந்தித்துவிட்டு, மர்மம் நிறைந்த அடுத்த நொடிக்காக காத்திருக்கிறான். பாதிப்புதரும் வலிகளுக்கு காலம் தான் களிம்பு பூச்சு. வலிகள் தரும் வலிமையே, வாழ்க்கைச் சோலையில் வீசும் தென்றல் காற்று என்பதை நாவலை படிப்பவர்கள் உணருவார்கள் என்று நம்புவதாக நூல் ஆசிரியர் தெரிவித்துள்ளர்.
கிடைக்குமிடம்
த. ஜெகன்
49/8, சரலூர், நாகர்கோவில் – 629002
கன்னியாகுமரி மாவட்டம்.
செல்: 8903405089
ஜெ.இ. பப்ளிக்கேஷன்
2-123, பெருவிளை (அஞ்சல்)
நாகர்கோவில் – 629003
கன்னியாகுமரி மாவட்டம்.
9789614911
Copyright © 2018 Amudam Monthly Magazine