தொடர்புடைய கட்டுரை


ஆற்றலை சேமிக்க சில எளிய வழிகள்

சிதம்பரம் ரவிச்சந்திரன்

28th Feb 2019

A   A   A

ஆற்றல் என்பது நம் உயிருக்கு ஒப்பானது ஆகும். ஆற்றல் இல்லாமல் எந்த ஒரு உயிரும் இந்த பூமியில் வாழமுடியாது. ஆனால் நவீன அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக நாம் இன்று சர்வசாதாரணமாக பயன்படுத்திவரும் மின்சாரம் என்பது மிகுந்த செலவு கூடிய வழிகள் மூலமாகவே நமக்கு கிடைக்கிறது என்பதை நம்மில் பலரும் அறிவது இல்லை. இந்த மின்சாரத்தைப் பெறுவதற்கு சூழலில் எண்ணற்ற மாசுகள் ஏற்படுத்தப்பட்டு இயற்கை வளங்கள் ஒவ்வொரு நிமிடமும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் ஆற்றல் சேமிப்பது என்பது நம் வாழ்வில் ஒரு பாகமாக ஆகவேண்டிய தருணமாகும் இது.

ஆற்றலை சேமிக்க இதோ ஒருசில எளிய வழிகள்..

மின்சார பல்புகளிலும், குழல் விளக்குகளிலும், அவற்றின் பிரதிபலிப்பான்களிலும் அதாவது ரிப்லெக்டர்களிலும் தூசுகளும், அழுக்கும் படிந்திருந்தால், நமக்கு கிடைக்கிற வெளிச்சத்தில் 30% குறைவு ஏற்படுகிறது.  அதனால் குழல்விளக்குகளையும், மற்ற விளக்குகளையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் துடைத்து சுத்தமாக வைத்திருப்பது நமக்கு கிடைக்கும் ஒளியின் பிரகாசத்தை அதிகரிக்க உதவும்.  பிரிட்ஜில் ப்ரீசரை காலியாக வைத்திருக்கக் கூடாது.  ஏனென்றால் அது முழுமையான செயல்திறனுடன் வேலை செய்வது அதனுள் நிறைய பொருள்கள் இருக்கும்போது மட்டுமே..  நாம் பயன்படுத்துகின்ற மின்சாரத்தின் பயன் துரதிர்ஷ்டவசமாக சில சமயங்களில் நம்மால் முழுமையாக அடையமுடியாமல் போகிறது.  ஏர்கண்டிஷன் செய்யப்பட்ட அறைகளில், வாசல்கள் வழியாகவும், ஜன்னல்கள் வழியாகவும், கண்ணுக்குத் தெரிந்தும், தெரியாமலும் இடையில் இருக்கும் சிறிய விரிசல்கள் வழியாகவும், தேவையான அளவுக்கு காப்புறையிடப்பட்ட சுவர்களின் வழியாகவும், தரையின் வழியாகவும் மின்சாரத்திற்காக நாம் செலவழிக்கிற பணம் கரைந்துபோவதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்வது இல்லை.. 

டெலிவிஷன், கம்ப்யூட்டர் போன்றவை கூட 24 மணிநேரமும் மின்சாரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை நாம் அறிந்துகொள்வது இல்லை.. அதனால், டெலிவிஷன், கம்ப்யூட்டர், ஏர்கண்டிஷனர் போன்ற சாதனங்களை அவற்றின் இயக்கத்தை நிறுத்தும்போது ஸ்விட்ச் போர்டில் அணைப்பதற்கு (off) நாம் எப்போதும் முயலவேண்டும். ஒரு சராசரி வீடு கட்டுவதால் ஏற்படக்கூடிய மாசு ஒரு காரை உற்பத்தி செய்வதால் ஏற்படுகிற மாசைக் காட்டிலும் இரண்டு மடங்குகளுக்கும் கூடுதல் என்பதை நாம் புரிந்துகொண்டு செயல்படவேண்டும். 

வீடுகளில் உபயோகிக்கின்ற மின்சாரத்தின் அளவு அதிகரிக்கும் போது எல்லாம், அவற்றை உற்பத்தி செய்வதற்கு ஆகும் செலவும் காற்று மாசுபாடும் அதிகரிக்கிறது. இது தவிர, வீட்டுப் பயன்பாட்டுக்காக பயன்படுகிற அடுப்பு ஏராளமான கார்பன் டை ஆக்சைடை வெளியே விடுகிறது. காற்றுமாசின் 80%ம், ஆற்றலை உற்பத்தி செய்யும்போதும், பின் அவற்றைப் பயன்படுத்தும் போதும் ஏற்படுவது ஆகும். 

இத்தகைய விஷயங்களை மறவாமல் ஒவ்வொருமுறை எந்த ஒரு மின்சாதனத்தைப் பயன்படுத்தும் போதும் நாம் செலவழிக்கின்ற ஒவ்வொரு மின்சார அலகும் நம் சூழலை மட்டும் இல்லாமல் நம் வருங்காலச் சந்ததியையும் சேர்த்தே பாதிக்கிறது என்பததை மறவாமல் செயல்படுவோம்.  கூடியமட்டும் மின்சாரத்தை பயன்படுத்தாத இயற்கை வழிகளைப் பின்பற்ற முயலுவோம்.  தவிர்க்க முடியாத வேளைகளில் குறைவாக மின்சாரத்தைப் பயன்படுத்துவோம்..

 


2018 மே மாத அமுதம் இதழில் வெளிவந்தது…

தொடர்புடைய கட்டுரை


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்


ஆசிரியர் தொடர்பான கட்டுரைகள்




Error
Whoops, looks like something went wrong.