தொடர்புடைய கட்டுரை


கடல் நீரோட்டங்கள்

பி.ரெ. ஜீவன்

07th Oct 2018

A   A   A

ஜனவரி 10, 1992 - ல், பசிபிக் பெருங்கடலின் நடுவில் ஒரு விபத்து நிகழ்ந்தது. ஒரு கப்பல் புயலில் மாட்டி அதில் இருந்து இரண்டு பேட்டி கடலில் விழுந்து உடைந்தது. அந்த பெட்டியில் இருந்தவை அனைத்தும் கடலில் விழுந்து சிதறியது. அந்த பெட்டிகளில் இருந்தது 29,000 சாதாரண மிதக்கும் வாத்து பொம்மைகள். அந்த காலத்தில் யாரும் இதை பற்றி யோசிக்காவிட்டாலும், இந்த விபத்து கடலை பற்றிய ஆராட்சியில் ஒரு முக்கிய பரிசோதனையை ஆரம்பித்தது.

கடலில் விழுந்ததும், இந்த மிதக்கும் வாத்து பொம்மைகள் பல வித்தியாசமான கடல் நீரோட்டத்தில் சேர்ந்தன. இந்த நீரோட்டங்கள் அந்த வாத்து பொம்மைகளை வித்தியாசமான திசையில் சிதற செய்தது. 7 மாதங்களுக்கு பின், சில வாத்து பொம்மைகள், விழுந்ததுக்கு 3500 கிலோமீட்டர் தொலைவில் ஹவாய் (Hawaii) தீவுகளின் அருகே காணபட்டது. சில அதே நேரத்தில் அலாஸ்கா (Alaska) அருகே கிடைத்தது. ஆனால் மற்ற வாத்து பொம்மைகளுக்கு, அவற்றின் பயணம் அப்போது தான் துவங்கியது. அவை வடக்கு பக்க ஆர்க்டிக் (Arctic) கடலை நோக்கி சென்றன. ஆர்க்டிக் கடல் மூலமாக சென்று, அங்கிருந்து கிழக்கு திசையில் தள்ளப்பட்டது. அவை அப்படியே அட்லாண்டிக் (Atlantic) பெருங்கடலுக்கு தள்ளப்பட்டது. கனடா (canada) நாட்டின் கிழக்கு பகுதியிலும், ஐரோப்பாவின் (Europe) மேற்கு பகுதியிலும் 2 வருடத்திற்கு பின் கண்டுபிடிக்க பட்டது.

அந்த மிதக்கும் வாத்து பொம்மைகள் 3 கடல்களை தாண்டி வந்துள்ளது. அவை அவைத்தும் கடலில் உள்ள நீரோட்டத்தினால் பல திசைகளில் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. வாத்து பொம்மைகள் கிடைத்த இடங்கள், கடலில் உள்ள சக்திவாய்ந்த நீரோட்டங்களை காட்டுகிறது. இந்த நீரோட்டங்கள் உலகின் எல்லா கடல்களையும் இணைக்கிறது. ஒரு இடத்தில் உற்பத்தியாகும் ஊட்டச்சத்து உலகின் பல்வேறு கடல் பகுதிகளுக்கு நீரோட்டத்தினால் பங்கிடப்பட்டு பல்வேறு உயிரினங்களுக்கு பயன்படுகிறது. கடலில் உள்ள வெப்ப நீர் குளிர் நீர் இருக்கும் இடத்திற்கும், குளிர் நீர் வெப்ப நீர் இருக்கும் இடத்திற்கும் பங்கிடப்படுகிறது.

பூமத்திய ரேகையில் (equator) சூரியனின் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். இது அதிக அளவு நீரை வெப்பமாக்கி, நீராவியாக மாற்றும். கடல் நீரில் உப்பு கலந்து இருக்கும். பூமத்திய ரேகையில் அதிக நீர் நீராவியாக மாறுவதால், இந்த இடங்களில் நீரில் உப்பின் அளவு அதிகமாக இருக்கும். உப்பு அதிகமான நீர், சாதாரண கடல்நீரைவிட கனம் அதிகமானது. எனவே பூமத்திய ரேகையில், உப்பு அதிகமான கடல் நீர், கடல் அடியே செல்லும். கடல் அடியே இருக்கும் குளிர்ந்த நீர், மேலிருந்து வரும் வெப்ப நீரை ஒரு நீரோட்டமாக மாற்றும். இந்த நீர், பூமியின் துருவங்களை நோக்கி செல்லும். துருவத்தில் குளிர்ந்த நீர் இருக்கும். அதை நோக்கி இந்த வெப்ப நீர் பயணிக்கிறது. கடலில் உள்ள எல்லா நீரோட்டத்திற்கும் இந்த செயல்முறை ஒரு இயந்திரமாக இருக்கிறது.

பூமியின் துருவத்தில் உள்ள குளிர் நீரின் மத்தியில், பூமத்திய ரேகையில் இருந்து வரும் வெப்பமான நீர் மேல் எழும்பும். இப்படி இது ஒரு நீரோட்ட சங்கிலி போன்று செயல்படுகிறது. இதைப்போன்று பல நீரோட்டங்கள் உலகின் கடல்கள் இடையே உப்பு, ஊட்டச்சத்து மற்றும் வெப்பத்தை பங்கிடுகிறது. இந்த பெரும் சங்கிலியை கடல் நீரோட்ட சங்கிலி (ocean conveyor belt) என்று கூறுவர்.

கடலில் உள்ள இந்த வெப்ப பரிமாற்றம், நிலத்தில் உள்ள உயிரினங்களையும் பாதிக்கிறது. உலகின் எல்லா உயிரினங்களும் இந்த நீரோட்டங்களை நம்பி வாழ்கிறது. நீரோட்டம் பாதிக்கபட்டால் உலகின் எல்லா உயிரினங்களும் பாதிக்கப்படும். உலகின் தட்பவெட்ப நிலையை நிர்ணயிப்பதில் கடல் நீரோட்டம் ஒரு முக்கிய பங்கு வைக்கிறது. இந்த வெப்பம் கடல் மேல் உள்ள காற்றுக்கு பரிமாற்றமடைகிறது. இது பின் காற்று மூலமாக உலகின் எல்லா இடத்திற்கும் வெப்பத்தை கொண்டு செல்கிறது.

சில வருடங்கள் மற்ற வருடத்தை விட அதிக வெப்பமாக இருக்கும். அவைகளை எல் நினோ (El Nino) என்று கூறலாம். எல் நினோவுக்கு முக்கிய காரணம் கடல் நீரோட்டம் தான். 2015 - ல் துவங்கிய எல் நினோ 2016 றிலும் முடியாததற்கு காரணம், கடல் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால் தான். இதனால் 2015, 2016 மிக வெப்பமான வருடங்களாக மாறியது.

கடல் நீரோட்டத்தை இன்று செயற்கை கோள்கள் மூலமாக கண்காணித்து வருகிறோம். வெப்பத்தை உணரும் கேமரா (Heat sensitive camera) மூலமாக கடலின் தட்ப வெட்ப நிலையை கண்காணிக்க முடியும். இதில் உள்ள மாற்றங்கள் உலகெங்கும் எப்படி பாதிக்கிறது என்பதை ஆராய்ந்து வருகிறோம்.

பூமியில் 5 முறை, ஏறக்குறைய எல்லா உயிரினங்களும் அழியும் அளவுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளது. அதில் ஓன்று 25 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தது. பூமியின் துருவத்தில் குளிர்ந்த நீர் கீழே செல்வது கடல் நீரோட்டத்துக்கு மிக முக்கியம். அக்காலத்தில் பூமியின் எல்லா கண்டங்களும் சேர்ந்து பான்ஜியா (Pangaea) என்ற பெரும்கண்டமாக இருந்தது. இது இன்றைய தென் துருவத்தில் இருந்தது. இது தென்துருவத்திற்கு கடல் நீர் வரமுடியாமல் மாற்றியது. இது கடல் நீரோட்டத்தை சுமார் 1000 வருடத்திற்கு நிறுத்தியது. சுமார் 1000 வருடத்திற்கு பின்தான் வட துருவத்தில் வேறு வழியாக நீரோட்டம் துவங்கியது.

இந்த கடல் நீரோட்டம் நின்றதால், ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் கடலடியில் பரிமாறப்படவில்லை. இது கடலில் உள்ள பெரும்பான்மையான விலங்குகளை அழித்தது. கடல் முழுவதும் அழுகிய சடலங்கள் மிதந்தது. இது பல நோய்களை கொண்டு வந்தது. கடலில் சேரும் ஆறு, மற்றும் கடலருகே உள்ள நிலம் மூலமாக, தொற்றுநோய் உலகின் பெரும்பான்மையான விலங்குகளை அளித்தது. இந்த பேரழிவில் இருந்து சில உயிரினங்கள் தான் தப்பித்தது. நம் மூத்தோர் உட்பட, இன்று வாழும் எல்லா விலங்குகளின் மூதாதையர்களும், அந்த பேரழிவில் இருந்து தப்பித்தவர்கள் தான்.

உலகெங்கும் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்த பேரழிவின் தடயங்கள் காணப்படுகிறது. சுத்தமில்லாத நீராக கடல் மாறியதால் ஏற்பட்ட விளைவு. கடலின் நீரோட்டங்கள் நம் வாழ்க்கைக்கு மிக முக்கியமானவை. இன்று மனிதர்களின் செயல்பாட்டினால், பூமியின் துருவங்கள் சூடாகிக்கொண்டு வருகிறது. அதிக வெப்பம் ஏற்பட்டாலும், கடல் நீரோட்டங்கள் பாதிக்கப்படலாம்.

 


ஏப்ரல் 2017 அமுதம் இதழில் வெளியானது…

தொடர்புடைய கட்டுரை




Error
Whoops, looks like something went wrong.